செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 12 February 2024

வகுப்பு 8- கட்டுரை - புத்தகம் அனுப்புமாறு வேண்டுகோள் கடிதம்

 புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

25, பெரிய,
கடையநல்லூர் ,
12.02.240

அன்புள்ள மாமாவுக்கு ,
சண்முகப்பிரியா எழுதும் கடிதம், நான் இங்கு நலமாக இருக்கிறேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மற்றும் அண்ணன் அனைவரும் நலமாக இருக்கிறோம். அங்கு நீங்களும் அத்தையும் நலமாக இருக்கிறீர்களா?

நீங்கள் எப்பொழுது ஊருக்கு வருவீர்கள்? உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாயிற்று. பார்க்க வேண்டும் போல் உள்ளது. நான் இந்த ஆண்டு நடந்த எல்லாத் தேர்வுகளிலும் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளேன். என்னை என் பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

எனக்கு நான்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இங்குள்ள கடைகளில் கிடைக்கவில்லை. பொதுக்கட்டுரை புத்தகம், திருக்குறள் புத்தகம் (எளிமையான உரையுடன்), ஐம்பெருங்காப்பியங்கள் (கதைச் சுருக்கம்) கணினி தொடர்பான ஒரு புத்தகம் ஆகிய நூல்களை வாங்கி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
சண்முகப்பிரியா.

உறைமேல் முகவரி
அஞ்சல் தலை
திரு. கா.மாறன்,
எண்.65, சன்னதி தெரு,
மதுரை.

No comments:

Post a Comment