விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில்,
பள்ளத் தாக்கிலபொழிகின்ற
புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில்,
விலங்கில் புள்ளில்தெரிகின்ற
பொருளிலெல்லாம் திகழ்ந்து
நெஞ்சில்தெவிட்டாத நுண்பாட்டே,
தூய்மை ஊற்றே,அழகு என்னும் பேரொழுங்கே,
மெய்யே, மக்கள்அகத்திலும்
நீ குடியிருக்க வேண்டுவேனே! – ம.இலெ. தங்கப்ப
No comments:
Post a Comment