செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 21 August 2023

வகுப்பு 10. இலக்கணம் 3, 4 மீட்டறி வினா. விடைகள்-

1➤ ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ பொருளோ வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது
=> தொகாநிலைத் தொடர் எனப்படும்
,
2➤ தொகாநிலைத் தொடரின் வகைகள் எத்தனை ?
=> 9
,
3➤ எழுவாயுடன் பெயர் வினை வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது
=> எழுவாய்த் தொடர் எனப்படும்.
,
4➤ விளியைத் தொடர்ந்து வினை அமைவது..... ஆகும்
=> விளித் தொடர்
,
5➤ தொடரின் இறுதியில் இடம் பெற வேண்டிய வினைமுற்று தொடரின் முதலில் அமைந்து அறுவகைப் பெயரைக் கொண்டு முடிவது ...... ஆகும்
=> வினைமுற்று தொடர் எனப்படும்.
,
6➤ முற்றுப்பெறாத வினை பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவது
=> பெயரெச்சத் தொடர் எனப்படும்
,
7➤ முற்று பெறாத வினை வினைச்சொல்லைக் கொண்டு முடிவது
=> வினையெச்சத் தொடர் எனப்படும்.
,
8➤ வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் ....... தொடர் ஆகும்
=> வேற்றுமைத் தொடர் ஆகும்.
,
9➤ இடைச் சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ...... தொடராகும்
=> இடைச்சொல் தொடர் ஆகும்.
,
10➤ உரிச்சொல் உடன் பெயரோ வினையோ தொடர்வது....... தொடராகும்.
=> உரிச்சொல் தொடர்
,
11➤ ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது.....
=> அடுக்குத் தொடர் எனப்படும்
,
12➤ ....... என்பது திணையின் உட்பிரிவு ஆகும்
=> பால்
,
13➤ இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் ......எனப்படும்
=> வழா நிலை எனப்படும்
,
14➤ இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் ....... எனப்படும்
=> வழு எனப்படும்
,
15➤ இலக்கண முறைப்படி பிழை உடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழை அன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது
=> வழு அமைதி எனப்படும்.
,
16➤ என் அம்மை வந்தாள் - இச்சொல்லில் காணப்படும் வழுவமைதி
=> திணை வழுவமைதி
,
17➤ வாடா ராசா வாடா கண்ணா- இச்சொல்லில் காணப்படும் வழுவமைதி
=> பால் வழுவமைதி
,
18➤ குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் இச்சொல்லில் காணப்படும் வழுஅமைதி
=> கால வழுவமைதி
,
19➤ கத்தும் குயில் ஓசை என் காதில் விழ வேண்டும். இச்சொல்லில் காணப்படும் வழுவமைதி
=> மரபு வழுவமைதி
,
20➤ இந்த மாறன் ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டான்ட இச்சொல்லில் காணப்படும் வழுவமைதி
=> இட வழுவமைதி

No comments:

Post a Comment