செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 21 August 2023

வகுப்பு 10 இலக்கணம். இயல் 1 ,2

 

1➤ சார்பெழுத்து எத்தனை வகைப்படும்
=> 10
,
2➤ உயிரளபெடை எத்தனை வகைப்படும் ?
=> 3
,
3➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட்பெழுத்துக்கள் அளவபெடுத்தலை ........என்கிறோம்
=> செய்யுளிசை அளபெடை
,
4➤ செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயர்
=> இசை நிறை அளபெடை
,
5➤ செய்யுளில் ஓசை குறையாத போதும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது
=> இன்னிசை அளபெடை எனப்படும்.
,
6➤ ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாக திரிந்து அளவெடுப்பது
=> சொல்லிசை அளபெடை
,
7➤ உரனசைஇ - காணப்படும் அளபெடை
=> சொல்லிசை அளபெடை
,
8➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய மெய் எழுத்துக்கள் அளவெடுப்பது
=> ஒற்றளபெடை எனப்படும்
,
9➤ மொழி எத்தனை வகைப்படும்
=> 3 வகை (தனிமொழி தொடர்மொழி பொதுமொழி )
,
10➤ ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது......
=> தனிமொழி
,
11➤ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது
=> தொடர்மொழி எனப்படும்.
,
12➤ ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்தால் அது .....
=> பொதுமொழி எனப்படும்.
,
13➤ பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர் சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளும் பிற உறுப்புகளே மறைந்து நிற்பது
=> தொகைநிலைத் தொடர் எனப்படும்.
,
14➤ தொகைநிலைத் தொடர் ......... வகைப்படும்
=> 6 வகைப்படும்
,
15➤ ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது...... எனப்படும்
=> வேற்றுமைத் தொகை எனப்படும்
,
16➤ வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது
=> உருகும் பயனும் உடன் தொக்க தொகை என்ப்படும்
,
17➤ காலம் கரந்த பெயரெச்சம்...... எனப்படும்
=> வினைத்தொகை
,
18➤ சிறப்பு பெயர் உண்ணும் பொது பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய எனும் பண்பு உருபு தொக்கி நிற்பது.
=> இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
,
19➤ உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது
=> உவமைத்தொகை எனப்படும்
,
20➤ இரு சொற்களுக்கு இடையில் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது
=> உம்மைத் தொகை எனப்படும்

No comments:

Post a Comment