செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 4 June 2023

எழுத்து சொல்- ஒரு மதிப்பெண் ஆன்லைன் வினா-

 

1➤ மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது
=> இலக்கணம்
,
2➤ சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
=> 10
,
3➤ அளபெடை என்றால் என்ன ?
=> நீண்டு ஒலித்தல்
,
4➤ செய்யுளில் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது
=> உயிரளபெடை எனப்படும்
,
5➤ உயிரளபெடை எத்தனை வகைப்படும் ?
=> 3 (செய்யுளிசை இன்னிசை. சொல்லிசை )
,
6➤ செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துக்கள் அளபெடுப்பது
=> செய்யுளிசை அளபெடை எனப்படும்.
,
7➤ ஒஒதல் - எவ்வகை அளபெடை
=> செய்யுளிசை அளபெடை
,
8➤ உறாஅர்க்கு- எவ்வகை அளபெடை
=> செய்யுளிசை அளபெடை
,
9➤ படா அ - எவ்வகை அளபெடை
=> செய்யுளிசை அளபெடை
,
10➤ செய்யுளிசை அளபெடைக்கு மறு பெயர்
=> இசை நிறை அளபெடை
,
11➤ செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடில் ஆகி அளபெடுப்பது
=> இன்னிசை அளபெடை
,
12➤ கெடுப்பதூஉம் - எடுப்பதூஉம் -எவ்வகை அளபெடை ?
=> இன்னிசை அளபெடை
,
13➤ செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளவெடுப்பது
=> சொல்லிசை அளபெடை
,
14➤ உரனசை இ , வரனசைஇ குறிக்கும் அளபெடை
=> சொல்லிசை அளபெடை
,
15➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய மெய் எழுத்துக்கள் அளவெடுப்பது
=> ஒற்றளபெடை
,
16➤ எங்ங். எஃஃ -சொற்களில் பயின்று வரும் அளபெடை
=> ஒற்றளபெடை
,
17➤ ஓர் எழுத்து தனித்தோ பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தருவது
=> சொல் எனப்படும்
,
18➤ மொழி எத்தனை வகைப்படும் ?
=> 3 (கனிமொழி, தொடர்மொழி ,பொதுமொழி
,
19➤ i"ஒரு மொழி ஒரு பொரு ளனவாம் "- சொற்றொடர் இடம் பெறும் நூல்
=> நன்னூல்
,
20➤ ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது ...... எனப்படும்
=> தனிமொழி
,
21➤ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது
=> தொடர்மொழி எனப்படும்.
,
22➤ ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லை பிரிந்து நின்று வேறு பொருளைதயும் தருவது
=> பொதுமொழி எனப்படும்.
,
23➤ எட்டு. வேங்கை - சொல் குறிக்கும் மொழி
=> பொதுமொழி
,
24➤ ஒரு வினை அல்லது செயலை குறிக்கும் பெயரானது எண், இடம், காலம் ,பால் ஆகியவற்றை குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல்
=> தொழில் பெயர்
,
25➤ தொழிற்பெயர் எதிர்மறை பொருளில் வருவது
=> எதிர்மறைத் தொழிற்பெயர் எனப்படும்
,
26➤ விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்
=> முதனிலைத் தொழிற்பெயர்
,
27➤ விகுதி பெறாமல் முதனிநிலை திரிந்து வரும் தொழிற் பெயர்
=> முதனிலை திரிந்த தொழிற்பெயர்
,
28➤ ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமல் வேறு ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது
=> வினையாலணையும் பெயர்.
,
29➤ கேடு, சூடு - குறிக்கும் பெயர்
=> முதனிலை திரிந்த தொழிற்பெயர்
,
30➤ ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்
=> சரி

No comments:

Post a Comment