செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 26 June 2023

வகுப்பு 9. கடிதம் எழுதுதல் / கால் முளைத்த கதைகள்

 கடிதம் எழுதுக

                                                                                                            26.06.2023

                                                                                                           கடையநல்லூர்.

அன்புத் தோழி,

    வணக்கம்.நானும் வீட்டில் உள்ள அனைவரும் நலம்.அதுபோல் உன் நலம் மற்றும் உன் பெற்றோரின் நலம் அறிய ஆவல்.

    நீ என் பிறந்தநாளுக்கு அனுப்பிய அருமையான அழியாத பரிசை பெற்றுக் கொண்டேன்.மிகச் சிறந்த கருத்துக்கள் நிறைந்த கதைப்புத்தகத்தை நீ அனுப்பி இருந்தாய்.மகிழ்ச்சி.

  "ராமகிருஷ்ணனின் கால் முளைத்த கதைகள் "  ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம் மனதிற்கு விருந்து படைக்கிறது. பெண்மை, உண்மைக்காக போராடும் உயர்ந்த தன்மை ; எளிமையின் மாண்பு ; குணமே வாழ்வின் வெற்றி    போன்ற உயர்ந்த கருத்துக்களை அப் புத்தகம் எனக்கு தந்தது.

  அட்டை முதல் அட்டை அழகான எளிமையான இனிய சொற்றொடர்களால் அமைந்த புத்தகம்.

   உனக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி இக்கடிதத்தை முடிக்கின்றேன்.

                                                                                                            இப்படிக்கு

                                                                                                     உன் இனிய தோழி

                                   .                                                                     ‌.    .............................

உறைமேல் முகவரி

................( தோழியின் பெயர்).

10............ (தெரு பெயர்).

................... ( ஊர் பெயர்).

No comments:

Post a Comment