செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 14 June 2023

வகுப்பு - 9. திராவிட மொழிக் குடும்பம். ' மீட்டறி வினா - விடை

 

1➤ தமக்குத் தோன்றிய கருத்துக்களைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி
=> மொழி
,
2➤ வேறுபட்ட ஒலிப்பு முறைகள் தோன்றக் காரணமாக அமைந்தவை
=> இட அமைப்பு மற்றும் இயற்கை அமைப்பு
,
3➤ மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை
=> 4
,
4➤ இந்தியாவை மொழிகளின் காட்சிச் சாலை என்று உரைத்தவர்
=> ச. அகத்தியலிங்கம்
,
5➤ திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர்
=> குமரில பட்டர்.
,
6➤ தமிழ் என்னும் சொல்லில் இருந்து தான் திராவிடம் என்னும் சொல் பிறந்தது எனக் குறிப்பிட்டவர்
=> ஹீராஸ் பாதிரியார்
,
7➤ ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி எனக் குறிப்பிட்டவர்
=> அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
,
8➤ தென்னிந்திய மொழிகள் என பாகுபடுத்தியவர்
=> பிரான்சிஸ் எல்லீஸ்
,
9➤ தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் தமிழியன் என்று பெயரிட்டவர்
=> ஹோக்கன்
,
10➤ திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலினை எழுதியவர்
=> கால்டுவெல்
,
11➤ திராவிட மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகை
=> 3 (வட, தென், நடு )
,
12➤ திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை
=> 24 + 4 = 28
,
13➤ தமிழ் வடமொழியின் மகளன்று என உரைத்தவர்
=> கால்டுவெல்
,
14➤ திராவிட மொழிகளில் ......... தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு அமைந்துள்ளது
=> பொருள்களின் தன்மையை
,
15➤ தமிழ் மொழியின் இலக்கியம்
=> சங்க இலக்கியம்
,
16➤ கன்னட மொழியின் இலக்கியம்
=> கவிராஜ மார்க்கம்
,
17➤ தெலுங்கு மொழியின் இலக்கியம்
=> பாரதம்
,
18➤ மலையாள மொழியின் இலக்கியம்
=> ராம சரிதம்
,
19➤ தமிழ் இலக்கண நூல்
=> தொல்காப்பியம்
,
20➤ கன்னட இலக்கண நூல்
=> கவிராஜ மார்க்கம்
,
21➤ தெலுங்கு இலக்கண நூல்
=> ஆந்திர பாஷா
,
22➤ மலையாள இலக்கண நூல்
=> லீலா திலகம்
,
23➤ தமிழ் இலக்கிய வரலாறு நூல் எழுதியவர்
=> மு.வ
,
24➤ இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் - எழுதியவர்
=> செ.வை.சண்முகம்
,
25➤ மலையாள இலக்கிய வரலாறு- எழுதியவர்
=> சாகித்திய அகாதமி

No comments:

Post a Comment