செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 20 November 2022

ஒயிலாட்டம்

 




ஒயிலாட்டம் ஆடுபவர்கள் வேட்டியைக் கீழ்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு மேலே வெள்ளைச் சட்டை அணிந்து இரண்டு அல்லது மூன்று வண்ணங்களாலமைந்த துணியால் தலைப் பாகைக் கட்டி வலக்கையில் வண்ணக் கைக் குட்டையைப் பிடித்திருப்பார்கள்

. கோயில் சடங்குகளில் ஆடும் ஆட்டக்காரர்கள் சட்டை அணியாமல் விபூதி, சந்தனம் பூசி மாலை அணிந்திருப்பார்கள்.    

ஒயிலாட்டம் ஆடுபவர்கள் வேட்டியைக் கீழ்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு மேலே வெள்ளைச் சட்டை அணிந்து இரண்டு அல்லது மூன்று வண்ணங்களாலமைந்த துணியால் தலைப் பாகைக் கட்டி வலக்கையில் வண்ணக் கைக் குட்டையைப் பிடித்திருப்பார்கள்.

 கோயில் சடங்குகளில் ஆடும் ஆட்டக்காரர்கள் சட்டை அணியாமல் விபூதி, சந்தனம் பூசி மாலை அணிந்திருப்பார்கள்.

இராமாயணம் போன்ற குறிப்பிட்ட கதைப் பாடல்களைப் பாடி ஆடுகின்றவர்கள். அக்கதையின் முக்கிய பாத்திரங்களாக ஆட்டக்காரர்களுள் சிலர் வேடம் புனைந்து கொள்வர். பெண் வேடம் போடுபவர் புடவை கட்டியிருப்பார்.

இவ்வாட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கச்சம் அல்லது மணிச் சலங்கையை அணிந்திருக்க வேண்டும். கூடுதலான மணிகளைக் கொண்ட கச்சத்தைக் கட்டிக் கொண்டு நீண்ட நேரம் ஆடுபவர் சிறப்பு மிக்க ஆட்டக்காரராகக் கருதப்படுவார்.

இம்முறையில் அமைந்த ஒப்பனைகளுடன் ஆடுபவர்கள் ஒரு வரிசையாகவோ, இரு வரிசையாகவோ நிற்பர். அண்ணாவி அல்லது வாத்தியார் வரிசைக்கு முன்னால் நின்று ஆட அவருடைய வழிகாட்டுதலுடன் ஏனையோர் ஆடுவர். ஒன்றுக்கு மேற்பட்டோரும் முன்னால் நின்று ஆடுவதுண்டு.

இவ்வாட்டத்தில் பாடல் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது. அண்ணாவி முன் பாட்டைப் பாட ஏனைய ஆட்டக்காரர்கள் குழுவாகப் பின்பாட்டுப்பாடுவர். இந்தப் பாடல்கள் மந்த கதியில் தொடங்கப் பெற்றுத் துரித கதியில் சென்று அதி துரித கதியில் முடியும்.

No comments:

Post a Comment