செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 20 November 2022

தெருக்கூத்து




கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்குத் தாளம் அல்லது மிருதங்கம் தட்டப்படுகிறது. இது பார்வையாளர்களுக்குக் கூத்தின் தொடக்கத்தை அறிவிப்பதாக இருக்கிறது. பார்வையாளர்களை மனரீதியாகக் கூத்தை ரசிக்கத் தயார்படுத்துவதாகவும் இருக்கிறது. இதற்குக் களரி கட்டுதல் என்றும் மேளக் கட்டு என்றும் பெயர்கள் உண்டு.

கூத்து அரங்கில் முன்திரை அமைப்பது பெரும்பாலும் இல்லை. இருவர் துணியைத் திரையாகப் பிடித்துக் கொள்வர். முதலில் அரங்கில் நுழைகிற பாத்திரம் கட்டியங்காரன். அவன் ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு அவைக்கு வணக்கம் சொல்வான். 

தங்கள் நாடகக்குழு பற்றியும் ஊர்ப் பெயர், ஆசிரியர் பெயர், நடக்க இருக்கும் கூத்தின் பெயர் முதலானவற்றையும் உரக்கக் கூறுவான். இதை ஆடுகளத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் சென்று கூறுவான்.

 பின்னர் அவையடக்கம் கூறுவான். தங்கள் கூத்தில் சொற்குற்றம், இசைக்குற்றம், பொருள் குற்றம் இருப்பின் பிள்ளைகளைப் போலப் பாவித்துப் பொறுத்து நாடகத்தினைக் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்வான்.

பாரதக் கதைகள் மட்டுமன்றி இராமாயணக் கதைகள், பெரியபுராணக் கதைகள் ஆகியவையும் கூத்துகளாக நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கூத்து கோயில் சடங்காக இருக்கிறது

No comments:

Post a Comment