செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 20 November 2022

தேவராட்டம்










தேவராட்டத்தில் எட்டு முதல் பதின்மூன்று பேர் ஆடவேண்டும் என்பது பொது மரபாக இருந்தாலும் ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. நூறு பேர் கூட ஒரே சமயத்தில் ஆடலாம். இந்த ஆட்டத்தின் போது ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதிலை. அண்மைக் காலமாக இக்கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அச்சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்குக் காணப்படுகிறது.

இடையில் சாதாரணமாக உடுத்தும் வேட்டி, கைகளில் சிறிய துணி, கால்களில் சலங்கை, தலையில் தலைப்பாகை, சலங்கை மணிகளை நீளமாக நூலில் கோத்துக் காலில் கட்டிக் கொள்கின்றனர்.

இவ்வாட்டத்தில் பாடல்கள் பாடப்படுவதில்லை. இசைக்குத் தகுந்தாற்போல் ஆடும் ஆட்டமாக உள்ளது. உறுமி என்னும் இசைக் கருவி இந்த ஆட்டத்தின் போது இசைக்கப்படுகிறது.

இவ்வாட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. தேவராட்டத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடலசைவுகளைக் கவனித்து அவனைப் பின்பற்றி ஆடுவார்கள். தேவராட்டத்தில் இருபத்தி மூன்று ஆட்டங்கள் உள்ளதாகக் கூறுவர்

No comments:

Post a Comment