செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 22 September 2022

நிலம்- பொது

சிந்தனை வினா

நில வளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
(i) துணிகள், நெகிழி, மரத்துண்டுகள், கண்ணாடி, பேப்பர், போன்ற வீடு மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் நேரடியாக நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் சில மக்கும் தன்மை உடையவை; பல மக்காத தன்மை உடையவை.

(ii) மட்காதப் பொருட்கள் குழிதோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு நிலச் சீர்க்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுத்து நிறுத்தல்.

(iii) நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகளால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால் அவைகளை நிலத்தில் கலக்காதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(iv) கழிவுநீரினைச் சுத்திகரிக்கும் போது திடக்கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன. அல்லது எரிக்கப்படுகின்றன. புதைக்கப்படும்போது அவை நிலமாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அவைகளை முறையாகச் செயல்படுத்தினால் நிலவளத்தைக் காப்பாற்றலாம்.

No comments:

Post a Comment