செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 13 September 2022

வகுப்பு - 8 . கட்டுரைப் பயிற்சி- நூலகம்

 கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை

நூலகம்

முன்னுரை :
‘நூலகம் அறிவின் ஊற்று’
‘வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்’
என்றார் பேரறிஞர் அண்ணா . ஊரில் உள்ள ஒரு நூலகத்தையாவது, நாம் பயன்படுத்த வேண்டாமா? நூலகத்தைப் பயன்படுத்தும் முன் நூலகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நூலகத்தின் தேவை :
‘சாதாரண மாணவர்களையும்
சாதனையாளர்களாக உயர்த்துவது நூலகம்’

  • ஏழை மாணவர்களும் இளைஞர்களும் படிப்பதற்குத் தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
  • அன்றாடச் செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது.
  • ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது.

வகைகள் :
மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின் நூலகம் எனப் பலவகை நூலகங்கள் உள்ளன.

நூலகத்தில் உள்ளவை :
‘அறிவுப் பசிக்கு உணவு நூலகம்’
தமிழ் மற்றும் ஆங்கிலக் கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுநூல்கள், வரலாற்று நூல்கள், அறிவியல் நூல்கள், தொழில்நுட்ப நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், அகராதிகள், களஞ்சியங்கள் ஆகியவை நூலகத்தில் உள்ளன.

படிக்கும் முறை :
நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாகப் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும். நூல்களைக் கிழிக்கவோ, சேதப்படுத்துவதோ கூடாது. படித்து முடித்தவுடன் மீண்டும் உரிய அலமாரியில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை :
‘நம் அகம்
நூல் அகம்’
நாளும் நூல் பல கற்று சிறந்த மேதையாக வரவும், நூலகம் துணை செய்கிறது. நூலகம் தேடிச் சென்று, நூல்களைப் படிப்போம்! உயர்வோம்!!
‘நூலகம் அறிஞர்களின் வாழ்வில்லம்’

No comments:

Post a Comment