செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 14 September 2022

வகுப்பு-9, 10- (மீட்டுணர் பயிற்சி ) - தொகைச் சொற்களை விரித்து எழுதுக

1➤ இருவினை

=> நல்வினை , தீவினை/, தன் வினை,பிறவினை /செய்வினை, செயப்பாட்டுவினை

2➤ முத்தமிழ்

=> இயற்றமிழ் ,இசைத்தமிழ், நாடகத்தமிழ்

3➤ முப்பால்

=> அறத்துப்பால் , பொருட்ப்பால் இன்பத்துப்பால்

4➤ மூவிடம்

=> தன்மை, முன்னிலை, படர்க்கை

5➤ முக்கனி

=> மா, பலா , வாழை

6➤ மூவேந்தர்

=> சேரர், சோழர் , பாண்டியர்

7➤ முப்படை

=> தரைப்படை, கப்பல் படை, விமானப்படை

8➤ நாற்றிசை

=> வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு

9➤ நானிலம்

=> குறிஞ்சி, முல்லை .மருதம், நெய்தல்

10➤ நாற்படை

=> தேர்ப்படை ,யானைப் படை, குதிரைப் படை காலாட்ப் படை

11➤ நாற்பொருள்

=> அறம்' பொருள். இன்பம், வீடு

12➤ ஐம்பொறி

=> மெய், வாய், கண், மூக்கு, செவி

13➤ ஐம்புலன்

=> சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

14➤ ஐந்திணை

=> குறிஞ்சி,முல்லை ,மருதம் ,நெய்தல் ,பாலை

15➤ ஐம்பால்

=> ஆண்பால், பெண்பால். பலர்பால் ,ஒன்றன்பால் , பலவின்பால்

No comments:

Post a Comment