செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 15 January 2021

கட்டுரை-பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வு

 கட்டுரை எழுதுக.

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 3

முன்னுரை:
எங்கள் ஊரில், அரசுப் பொருட்காட்சி, திலகர் திடலில் நடைபெற்றது. அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்தேன். அங்கே நான் கண்டு மகிழ்ந்த நிகழ்வுகளைக் குறித்து இக்கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நுழைவுச்சீட்டு:
பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பத்து வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.30ம் பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.50ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நாங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றோம்.

பல்துறைக் கண்காட்சி அரங்கங்கள்:
வனத்துறை அரங்கத்தின் உள்ளே சென்று பார்த்தபோது வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டேன். கல்வித்துறை அரங்கத்தின் உள்ளே கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கல்வியின் சிறப்பு குறித்து பல்வேறு செய்திகள் அச்சிடப்பட்டு ஒட்டிவைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துத் துறையினர் சாலை விதிகளைக் கடைபிடிப்பதால் சாலை விபத்துக்களைத் தவிர்க்கலாம் என்ற விழிப்புணர்ச்சி கருத்துகளைத் தெரிவித்தன. மேலும் சில போக்குவரத்துக் குறியீடுகளுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன. காவல்துறை, பொதுப்பணித் துறை, மீன் வளத்துறை, வேளாண்துறை போன்று பல்வேறு துறை சார்ந்த அரங்கங்களின் உள்ளே சென்று அரிய பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

அங்காடிகள்:
வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு பல்வேறு அங்காடிகள் இருந்தன. தேவையான சில பொருட்களை மட்டும் நான் வாங்கிக் கொண்டேன். உணவு அங்காடிக்குச் சென்று டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பனிக்கூழ் முதலியவற்றை வாங்கி உண்டேன்.

இராட்டினம்:
மயக்கம் தந்தாலும் மனதை மயக்கும் இராட்டினங்களைச் சுழலும் முறையை வியப்புடன் பார்த்தேன். இராட்சச இராட்டினம், குவளை இராட்டினம், டிராகன் இராட்டினம் எனப் பல்வேறு இராட்டினங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.

பிற பொழுதுபோக்கு அம்சங்கள்:
பேய்வீடு, பாதாளக் கிணறு, முப்பரிமாண திரையரங்கம், மீன்காட்சி சாலை, பனிவீடு எனப் பல்வேறு அரங்கங்கள் இருந்தன. இப்பொழுதுபோக்கு அரங்கங்களுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது.

முடிவுரை:
பல மணி நேரமாக சுற்றிப்பார்த்த களைப்பு ஒருபுறம் இருந்தாலும் அங்கே சுற்றிப்பார்த்த மகிழ்ச்சி மிகுதியுடன் வீடு திரும்பினேன்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 4

மொழியோடு விளையாடு

தொடரில் விடு

No comments:

Post a Comment