செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 15 January 2021

வகுப்பு -8 பாடறிந்து ஒழுகுதல்- வினா விடை

 Question 1.

அன்பு, வாய்மை, நேர்மை போன்ற நற்பண்புகளின் பெயர்களைத் தொகுத்து பட்டியல் ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல் 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பசியால் வாடும் ……………………… உணவளித்தல் நமது கடமை.
அ) பிரிந்தவர்க்கு
ஆ) அலந்தவர்க்கு
இ) சிறந்தவர்க்கு
ஈ) உயர்ந்தவருக்கு
Answer:
ஆ) அலந்தவர்க்கு

Question 2.
நம்மை ………………….. ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை
ஆ) அகழ்வாரை
இ) புகழ்வாரை
ஈ) மகிழ்வாரை
Answer:
அ) இகழ்வாரை


Question 3.
மறைபொருளைக் காத்தல் ……………….. எனப்படும்.
அ) சிறை
ஆ) அறை
இ) கறை
ஈ) நிறை
Answer:
ஈ) நிறை

Question 4.
‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) பாட் + அறிந்து
ஆ) பா + அறிந்து
இ) பாடு + அறிந்து
ஈ) பாட்டு + அறிந்து
Answer:
இ) பாடு+அறிந்து

Question 5.
முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) முறையப்படுவது
ஆ) முறையெனப்படுவது
இ) முறை எனப்படுவது
ஈ) முறைப்படுவது
Answer:
ஆ) முறையெனப்படுவது


குறுவினா

Question 1.
பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
Answer:

  • பண்பு என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
  • அன்பு என்பது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

Question 2.
முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
Answer:

  • முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
  • பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

சிறுவினா

Question 1.
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • இல்வாழ்வு என்பது ஏழைகளுக்கு உதவி செய்தல்.
  • பாதுகாத்தல் என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
  • அன்பு என்பது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
  • அறிவு என்பது அறிவற்றவர்கள் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
  • செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
  • நிறை என்பது மறைபொருளை அழியாமல் காத்தல்.
  • முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

இத்தகைய பண்புகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.


சிந்தனை வினா

Question 1.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
உண்மை , உழைப்பு, நேர்மை, அன்பு, அறம், சினம் கொள்ளாமை, புறம் கூறாமை, தன்னம்பிக்கை, ஊக்கப்படுத்துதல், பொறாமை கொள்ளாமை, ஏழைகளுக்கு உதவுதல், பெரியோரை மதித்தல், மனிதநேயத்துடன் இருத்தல், பிறர் செய்யும் பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகியனவாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நாங்கள் கருதுகின்றோம்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கலித்தொகை ………………………. நூல்களுள் ஒன்று.
அ) பத்துப்பாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) காப்பியம்
Answer:
ஆ) எட்டுத்தொகை

Question 2.
கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………………
அ) 400
ஆ) 401
இ) 100
ஈ) 150
Answer:
ஈ) 150


Question 3.
கலித்தொகையைத் தொகுத்தவர் ……………………
அ) ஓரம்போகியார்
ஆ) அம்மூவனார்
இ) பெருங்கடுங்கோ
ஈ) நல்லந்துவனார்
Answer:
ஈ) நல்லந்துவனார்

Question 4.
கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………
அ) ஓரம்போகியார்
ஆ) அம்மூவனார்
இ) பெருங்கடுங்கோ
ஈ) நல்லந்துவனார்
Answer:
ஈ) நல்லந்துவனார்

Question 5.
கிளை என்பதன் பொருள் ……………………..
அ) அறிவற்றவர்
ஆ) உறவினர்
இ) பகைவர்
ஈ) வறியவர்
Answer:
ஆ) உறவினர்


குறுவினா

Question 1.
ஆற்றுதல், போற்றுதல் குறித்து கலித்தொகை குறிப்பிடுவன யாவை?
Answer:

  • ஆற்றுதல் – ஏழைகளுக்கு உதவிசெய்து போற்றுதல்.
  • போற்றுதல் – அன்புடையோரைப் பிரியாமல் வாழ்தல்.

Question 2.
அறிவு, செறிவு குறித்து நல்லந்துவனார் கூறுவன யாவை?
Answer:

  • அறிவு என்பது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல்.
  • செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

சிறு வினா

Question 1.
கலித்தொகை – குறிப்பு வரைக.
Answer:

  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • கலிப்பா என்னும் பாவகையால் ஆனது.
  • 150 பாடல்களைக் கொண்டது.
  • கற்றறிந்தார் ஏத்தும் (புகழும்) கலித்தொகை.
  • குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
  • தொகுத்தவர் – நல்லந்துவனார்.

சொல்லும் பொருளும்


அலந்தவர் – வறியவர்
செறாஅமை – வெறுக்காமை
நோன்றல் – பொறுத்தல்
போற்றார் – பகைவர்
கிளை – உறவினர்
பேதையார் – அறிவற்றவர்
மறாஅமை – மறவாமை
பொறை – பொறுமை

No comments:

Post a Comment