செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 8 January 2021

வகுப்பு-9. சிறுபஞ்சமூலம் - வினா விடைகள்

 Question 1.

பூக்காமலே காய்க்கும் மரங்கள், விதைக்காமலே முளைக்கும் விதைகள் எவையெனக் கேட்டறிந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.3 சிறுபஞ்சமூலம் - 1

Question 2.
மூவாது மூத்தவர், காணாது கண்டவர்
இவை போல நயம் அமைந்த தொடர்களை உருவாக்குக.
Answer:
மூவாது மூத்தவர்
வாராது வந்தவர்
தேடாது கிடைத்தவர்

காணாது கண்டவர்
பெறாஅது பெற்றவர்
சூடாது சூடியவள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ) சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
இ) என்னண்ணே ! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
Answer:
இ) என்னண்ணே ! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

Question 2.
பூவாது காய்க்கும், மலர்க்கை அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
அ) பெயரெச்சம், உவமைத்தொகை
ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
இ) வினையெச்சம், உவமை
ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
Answer:
ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை.

குறுவினா

Question 1.
மூவாது மூத்தவர் – நூல் வல்லார் – இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.
Answer:
இத்தொடரின் பொருளாவது, நன்மை, தீமை உணர்ந்த நூல்வல்லோர், வயதில் இளையோராக இருப்பினும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.

சிறுவினா

Question 1.
விதைக்காமலே முளைக்கும் விதைகள்- இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.
Answer:
விதைக்காமலே முளைக்கும் விதை:

  • • கழனியிலே பாத்தி அமைத்து, விதை விதைக்காமலே தானே முளைத்து வரும் விதைகளும் உள்ளன.
  • தானே முளைப்பதுடன் உயிர்களுக்குப் பயனும் நல்குவன.
  • அதைப்போலவே, அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.
    “விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
    உரையாமை செல்லும் உணர்வு.”

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“விதையாமை நாறுவ” நாறுவ என்பதன் பொருள் யாது?
அ) கெடாதிருத்தல்
ஆ) முதுமையடையாது இருத்தல்
இ) முளைப்ப
ஈ) இளைப்ப
Answer:
இ) முளைப்ப

Question 2.
உரையாமை என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ) வினையாலணையும் பெயர்
இ) பெயரெச்சம்
ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்
Answer:
ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்

Question 3.
சிறுபஞ்சமூலம் இயற்றியவர் …………….
அ) பூதஞ்சேதனார்
ஆ) கணிமேதாவியார்
இ) கபிலர்
ஈ) காரியாசான்
Answer:
ஈ) காரியாசான்

Question 4.
காரியாசானின் ஆசிரியர் …………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) மாக்காயனார்
இ) கணிமேதாவியார்
ஈ) பூதஞ்சேதனார்
Answer:
ஆ) மாக்காயனார்

Question 5.
சிறுபஞ்சமூலம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் இடம் பெறும் கருத்துகள் ………….. ஆகும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
இ) ஐந்து

Question 6.
சிறுபஞ்சமூலம் ……………. நூல்க ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 7.
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை ………….. ஆகும்.
அ) காப்பியங்கள்
ஆ) சிற்றிலக்கியங்கள்
இ) மறுமலர்ச்சி இலக்கியங்கள்
ஈ) நீதிநூல்கள்
Answer:
ஈ) நீதிநூல்கள்

Question 8.
சரியான கூற்றினைத் தேர்க
1) காரி என்பது இயற்பெயர் ஆகும்.
2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்.
அ) 1 சரி, 2 தவறு
ஆ) 2 சரி, 1 தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
அ) 1 சரி, 2 தவறு

Question 9.
பாரதியார் ………….. வயதிலேயே அரசவையில் கவிதை எழுதினார்.
அ) 10
ஆ) 12
இ) 11
ஈ) 14
Answer:
இ) 11

Question 10.
16 வயதிலே படைத்தளபதி ஆனவர் யார் …………..
அ) அலெக்சாண்டர்
ஆ) நெப்போலியன்
இ) அகஸ்டஸ்
ஈ) அக்பர்
Answer:
அ) அலெக்சாண்டர்

Question 11.
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Question 12.
பைசா நகர கோபுரத்தின் விளக்கைக் குறித்து ஆராய்ந்தவர்
அ) நியூட்டன்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) கலீலியோ
ஈ) விக்டர் ஹியூகோ
Answer:
இ) கலீலியோ

குறுவினா

Question 1.
சிறுபஞ்சமூலத்தின் பாடல்கள் எவ்வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன?
Answer:

  • நன்மை தருவன
  • தீமை தருவன
  • நகைப்புக்கு உரியன
    என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளைச் சிறுபஞ்சமூலத்தின் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Question 2.
“சிறுபஞ்சமூலம்” என்பதன் பொருள் யாது? அது எவற்றைக் குறிக்கும்?
Answer:

  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு “ஐந்து சிறிய வேர்கள்” என்பது பொருள் ஆகும்.
  • கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியவற்றின் வேர்களைக் குறிக்கும்.

Question 3.
மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் யார்?
Answer:
நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர்; வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார்.

Question 4.
பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்து கொள்பவரைப் பற்றி சிறுபஞ்சமூலம் குறிப்பிடுவது யாது?
Answer:
பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தாமே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்து கொள்வர்.

சிறுவினா

Question 1.
சிறுபஞ்சமூலம் குறிப்பு வரைக.
Answer:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.
  • அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன
  • இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றன.
  • அதுபோலச் சிறுபஞ்சமூலம் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள்
  • மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • இந்நூலின் ஆசிரியர் காரியாசான்.

Question 2.
காரியாசான் – குறிப்பு வரைக.
Answer:

  • சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்,
  • மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
  • காரி என்பது இயற்பெயர்.
  • ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
  • மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

Question 3.
எடுத்துக்காட்டு உவமையணி – விளக்குக.
Answer:
அணிவிளக்கம் : ஒரு செய்யுளில் உவமைத் தொடரும், உவமேயத் தொடரும் அமைந்து, உவம உருபு மறைந்து வருமாயின் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
சான்று : “விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு”
உவமைத்தொடர் : விதையாமை நாறுவ வித்து உள.
உவமேயத்தொடர் : மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு
உவம உருபு : (அது போல) மறைந்து வருதல்
பொருத்தம் : விதை விதைக்காமல் தானே முளைத்து வரும் விதைகள் உள்ளன. அது போல
மேதையரும் பிறர் உணர்த்தாமல் தாமே உணர்ந்து செயலாற்றுவர்.
இப்பாடலில் “உவமஉருபு” மறைந்து வந்துள்ளதால் எடுத்துக்காட்டு உவமையணிக்குச் சான்றாகிறது

No comments:

Post a Comment