செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 2 March 2017

சிலேடை அணி - எளிய பட விளக்கங்களுடன்...

சிலேடை அணி 


கீழே உள்ள படத்தினைப் பாருங்கள்





உங்களுக்கு  படம் ஒன்றாக இருந்தாலும் அதில் இரு  வேறு காட்சிகளை நீங்கள் கண்டு இன்புற்றிருப்பீர்கள் தானே..









உங்களுக்கு  படம் ஒன்றாக இருந்தாலும் அதில் இரு  வேறு காட்சிகளை நீங்கள் கண்டு இன்புற்றிருப்பீர்கள் தானே..

படம்   ”ஒன்று”
காட்சி ” இரண்டு”

சரி...
”ஒடு” என்ற சொல்லை கேட்டவுடன் 
தங்களுக்கு என்ன? செயல்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது....



சரி..
ஆடு என்ற சொல்லைக் கேட்டவுடன்
தங்களுக்கு என்ன? என்ன?
செயல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன?




இங்கு சொல் ஒன்று. பொருள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவைகளாக இருக்கிறன
  
இப்பொழுது கீழே உள்ள பாடலைப் படித்துப்பாருங்கள்...


இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ
இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ

                                             உங்களுக்கு ஏதோ ஒருவிதப் பொருள்  இருவிதப் பொருளைத் தந்திருக்கும் அல்லவா?
                     

ஆம்! நிச்சயம் தங்களுக்கு இரு விதப் பொருட்கள் புலப்பட்டு இருக்கும்.

இவ்வாறு ஒரு சொல் இருவிதப் பொருட்களை தருவதே ” சிலேடை அல்லது இரட்டுற மொழிதல் என்று நாம் அழைக்கின்றோம்.

மேடைப்பேச்சில் சிலேடை மூலம் மக்களை ஈர்த்தவர்கள்..

1. திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும்.

அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.

அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்."




பழங்”கள்”


                   பழங்கள்

2. விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்.
ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது.

அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்"


                   அவருடைய காதிலும் கம்மல்

                             ”சாரீரத்திலும் கம்மல்"

3. தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். 



ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்'


4. தமிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.
           பூரி ஜகன்னாதர் கோவில்

ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ.


கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனேஇம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

ஔவையார்


ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.


அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.


ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.


கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:


" தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே


மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"


தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.


"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.


அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:



"பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்செம்பொற் சிலம்பே சிலம்பு."

என்பதாகும் அவ்வரிகள்.
ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

ஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. முன்னர் ஔவையார் தன்னை பற்றி அரசனிடம் கூறியதை அறிந்திருந்த கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி பின்வரும் புதிரினை கேட்டார்.

”ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ”

எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே கேள்வி.
                      நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும். "ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.

"டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.
இதை கேட்டு மிகுந்த சினமுற்ற ஔவையார்,

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா

என்று பதிலளித்தார்.

இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது "8 + 1/4" என்று பிரித்து படிக்க வேண்டும். அப்படி படித்தால் "8" என்பதற்கு உரிய தமிழ் எண் " அ" அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " வ ".

(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "வ" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)

ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 = அ
(கால் )1/4 = வ

எனவே இப்போது எட்டேகால் = அவ

இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?

எமனேறும் பரியே - எருமைக்கடா

மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே

முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே

குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே

கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.

" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.

இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்
.

சிலேடை புதிர்கள்..

ஒரு புலவர் மற்றொரு வைத்தியரிடம் இவ்வாறு கூறினாராம்

”அக்காலை பொழுதினிலே
 முக்காலை ஊன்றி
 மூவிரண்டுபோகையிலே
ஐந்து தலை நாகமொன்று
 ஆழ்ந்து கடித்ததுவே”-.என்று
                                                   வைத்தியரிடம்    கூறினார் புலவர்

வைத்தியரும் தமிழ்ப் புலமையில் இளைத்தவரல்ல இதற்குச் சுய வைத்தியமே சரியானது.
வைத்தியம் யாதெனில்

 ”பத்துரதன் புத்திரனின் மித்திரனின் 
சத்துருவின் பத்தினியின்
கால் வாங்கி தேய்
!
”      என்றாராம்!




மேற்காண் புதிருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?!  ... கீழே விளக்கமாகக் காண்போம்.

அக்காலை = அந்த காலை
முக்கால் = அவருக்கு இரண்டுகால் + ஒரு ஊன்றுகோல்= மூன்றுகால்
மூவிரண்டு = 3×2=6 ஆற்றுக்கு போகும்போது
ஐந்து தலை நாகம் = ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சி முள்
ஆழ்ந்து கடித்ததுவே = ஆழமாக குத்தியது.

புலவர் சொன்னதுக்கு அர்த்தம்: அந்த காலை பொழுதில் கைத்தடி ஊன்றிக்
கொண்டு ஆற்றுக்கு நான் செல்லும்போது ஐந்து முட்களைக்
கொண்ட நெருஞ்சி முள் ஒன்று
குத்தி விட்டது.


வைத்தியர் சொன்ன விளக்கம்     இதோ..
 “சதம் என்பது நூறு; 
தசம் என்பது பத்து;
பத்துரதன் என்றால் தசரதன்; 
தசரதனின் புத்திரன் ராமன்; 
ராமனின்மித்திரன்(ந ண்பன்))சுக்ரீவன்; 
சுக்ரீவனின் சத்ரு(எதிரி) வாலி;
வாலியின்பத்தினி (மனைவி) தாரை; 
தாரையின் காலை வாங்கிவிட்டால் தரை!;
புலவர் தன் காலை தரையில் தேய்த்தார் முள் உதிர்ந்து விழுந்தது.


                    ஆக, புலவர் தன் புலமையால், தன் காலில் நெருஞ்சி முள் குத்திவிட்டது என்று கூற, அதனைப் புரிந்து கொண்ட வைத்தியரும், நெருஞ்சி முள் குத்திவிட்டால், முள்ளை எடுத்துவிட்டு தரையில் காலை அழுத்தி தேய்த்தால், சரியாகிவிடும் என்ற விசயத்தினை தமிழ் சொற்களால் விளையாடியது .... நம் மனத்திற்கு இன்பம் பயப்பதாக உள்ளது
                                    
- தொடரும்...
                      ஆக்கம்
                                       இரா.மு
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

1 comment: