செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 30 March 2017


வென்றது பக்தி  (நம்பிக்கை)                                             புராணக்கதையில் மட்டும்... 



வன உயிர் வேட்டைக்கு
வந்திட்ட வேட னவன்
இடப்பாகம் பிரித்தளித்த
ஈசன் சிலை கண் டானாம்


சிந்தையதை சிறை கொண்ட
சிவன் மீது அருள் கொண்டு
மனக் குறை வீழ்ந்திடவே                                          
மண்டியிட்டு நின்றானாம்


அமுது பொருள் யிவை யென்று
தான றியா நிலை கொண்டு
வேட்டை தந்த பொருளை யெலாம்
வேட்கையுடன் படைத் தானாம்


ஈசன வன் அமு துண்ண
வேடன்
ஈந்திட்ட  பொருளெல்லாம்
ஆகம விதிக் கிங்கே
ஆகாம போனதாம்


ஆகம விதிக் கிங்கே
இடர் வந்து நின்றாலும்
இறங்கியே ஈசன வன்
இன் முகம் கொண்டானாம்

வேடன வன் வேட்கை தனை
சோதித் தறிய யெண்ணி
தன் விழிக் குருதியினை
பெருக் கெடுத் தந்தானாம்


கலங்கிய வேட னவன்
கண்டிட்ட  இமை நொடி
தன் விழி  ஈந்திட்டே
இறையின் துயர் துடைத்தானாம்


”தின்னன்” எனும் நாமம் இங்கே
கண்ணிடந் தப்பியதால்
”கண்ணப்ப நாயன் ” என்று
கண்டோர் இங்கே தெளிந்தனராம்!


பக்தியின் மாண்பதைக்கு
பாதை எங்கும் வகுத்ததில்லை
இன்ன பொருள் இது வென்று
இறைவனும் மறுப்பதில்லை


பக்தி உணர்த்திய நீதி
  • இப்படித்தான் வழி பட வேண்டும் என்று இறைவன் வகுப்பதில்லை
  • ஏழை பணக்காரர் ஆகமவிதி பாகுபாடு இறைவன் முன் இல்லை
  • நம்பிக்கையுடன் வழிபட்டால்  இறையின் அருள் நிச்சயம் கிட்டும்.

                               --------------------------------------------------------------
                                               

                   பூசலார் புராணம்



காடவர் கோமான் அங்கே
கட்டிய கோயி லது
கவின் மிகு நயத் தோடு
காட்சி தந்த வேளையிலே..
குட முழுக்கு தானெ டுக்க
நாளிட்டான் மன்ன னவன்

அன்பின் வேட்கை மிகு
அடியாருள் தானொ ருவன்
மனதினுள் தான மைத்த
திருக் கோயில் உரு தனுக்கு
குட முழுக்கு செய எண்ணி
மன்னன் வகுத்த நாளில்
தானும் நாள் குறித் தான்

உள் ளன்பு ஓங்கிய தால்
ஈச னவனும் மன மிறங்கி
மனக் கோவில் ஈந்தவனுக்கு
மகிழ் வுடன் காட்சி தந்து
அடியாருள் ஒருவனாய்
அன்பு செய்ய ஏற்றாராம்.






பக்தி உணர்த்திய நீதி

பக்திக்கு ஆடம்பரம் தேவையில்லை
இறைவன் ஆடம்பரத்தை விரும்புவதில்லை
வழிபாடு உண்மையெனின் இறைவன் அருள் உடன் கிட்டும்


-------------------------------------------------------------------------------------------------------------







இராம அவ தாரத்தில்...
கீர்த்தி மிகு தந்தைய வர்
உரைத்த மொழி தான் கேட்டே
சித்தி ரத்தில் அலர்ந்திட்ட
செந்தா மரை முகம் ஒத்து
தம்பி நா டாள
கான கம் தான் சென்றானாம்
கான கத்தில் காட்சி தந்த
தூயோனை தரி சிக்க
வந்திட்ட வேட னவன்
”தேனும் மீனும் ” தான்
கொண்டு சென்றானாம்...

இராம னவன் அமு துக்கு
ஒவ்வாத பொரு ளெனினும்”
உள்ளத்தின் அன்பினால்
வந்தவை யிவை யென்றால்..
அமிழ் துக்கு மேல் யென்று
அன்பு மொழி பகர்ந்தானாம்..!

பிறப்பால் நான் கெனினும்
குக னோடு ஐ வெரென்று
குசல மொழி உரைத் தானாம்

உண்மைப் பொருள் இங்கே
உள்ளத்தில் நிறைந் திருந்தால்
உல கேத்தும் உத் தமனும்
அண்டி யோருக் கருளிடுவான்..

புராணங்கள் உரைத்த கதை
புத்துலகு ஏத்திடுமோ?!


பக்தி உணர்த்திய நீதி

அன்பினால் இறைவனையும் ஈர்க்கலாம்
தனக்கு ஒவ்வாத பொருள் என்று இறைவன் நினைத்தாலும்.. அன்பின் மிகுதியால்.. என்று உணரும் போது இறைவனும் மகிழ்கிறான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------



நம்பிக்கைக்காக தன் நிலை இறங்கிய இறைவன்




                      மகாபாரத போர்க்களத்திலே... பீஷ்மர் அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறார். அவரினைப் பார்ப்பதற்கு பாண்டவர்களும், கிருஷ்ணபரமாத்வாவும் செல்கின்றனர். 


                      அப்போது கிருஷ்ணபரமாத்வாவிடம் பீஷ்மர் கேட்டாராம்.   கிருஷ்ணா நீ வாக்கு தவறி விட்டாய்..    ஒரு நாள், பாரதப் போர் நடைபெறுவதற்கு முன்பு, உன் ஆதரவு வேண்டி, துரியோதனனும், அர்ஜீனனும் உன்னிடம் வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் நீ, என் படைவீரர்கள் வேண்டுமா? அல்லது ஆயுதமே எடுக்காத நான் வேண்டுமா? என்று கேட்டாய் அல்லவா? 

                    துரியோதனன் , உன் படை போதும் என்று கூறி உன் படை ஆதரவினைப் பெற்றுக் கொண்டான். அர்ஜீனனோ ” நீ இருந்தால் போதும் என்று கூறிவிட்டான். இங்கே தான் உன் வாக்கு தவறி விட்டது.


                    ஆயுதமே எடுக்க மாட்டேன் என்று வாக்கு கூறிய  நீ.... போர்க்களத்திலே, அர்ஜீனன் , என்னை எதிர்த்துப் போர் செய்ய தயங்கிய போது ... நீ உன் சக்ராயுதத்தினை எடுத்து என் மீது பயன்படுத்த பார்த்தாயே... இது ஏற்கெனவே துரியோதனுக்கு கொடுத்த வாக்கினை மீறும் செயல் அல்லவா? ..  

                   இறை நிலைக்குட்பட்ட நீ ... இந்தச் செயலை செய்யலாமா? என்று கேட்டார் பீஷ்மா்




                 பரமாத்மா கிருஷ்ணண் சிரித்துக்கொண்டே பீஷ்மரிடம் சொன்னாராம்... நான் அவ்வாறு கூறியது உண்மைதான்!. 


       துரியோதனன் என்னிடம் என் படை பரிவாரங்களின் ஆதரவினைப் பெற்றுவிட்டோம் .. இனி ஜெயித்து விடலாம் என்ற நினைப்போடு அவனுடைய அரண்மனைக்கு வந்து .. இந்தக் கருத்தினை தங்களிடம் கூறினான்.. 


    அப்போது தாங்கள், என்ன கூறினீர்கள் , என்று ஞாபகப்படுத்தி பாருங்கள்...!   


                துரியோதனா?  நீ தவறான முடிவினை எடுத்துவிட்டாய்..  படை பரிவாரங்களை விட  கிருஷ்ணனின் ஆதரவினை நீ பெற்றிருக்க வேண்டும் என்று கூறினீர்கள்  .. 


           ” ஆயுதமே எடுக்காத கிருஷ்ணனால் எனக்கு என்ன   பலம் வந்து விடும் ... !  வெற்றி எனக்கே என்று துரியோதனன் தங்களிடம் கூறிய போது,  அதனை மறுத்து, இல்லை துரியோதனா.. கிருஷ்ணன்  ஆயுதமே எடுக்க மாட்டேன் என்று உன்னிடம் வாக்கு கூறினாலும் .. நிச்சயமாக ஆயுதம் எடுத்தே தீருவான் என்று , நீங்கள்.. துரியோதனிடம் கூறினீர்கள். அல்லவா!


           பீஷ்மச்சாரியாராகிய   நீங்கள் அன்று துரியோதனிடம்..  ”கிருஷ்ணன் ஆயுதம் எடுத்தே தீருவான்...”  என்று நீங்கள் கூறிய நம்பிக்கை தோற்று விடக்கூடாது...


              தெய்வத்தின் வாக்குப் பொய்க்கலாம்.. ஆனால், என்னை நம்பிய பிரமச்சாரிய விரதம் பூண்ட தங்களின் வாக்கு என்றும் பொய்த்து விடக்கூடாதே....! என்பதற்காகத்தான்.. என் நிலை இறங்கி.. கொடுத்த வாக்கினை மீறினேன்.. என்னை மன்னித்து அருளுங்கள் என்று  கிருஷ்ணன் பீஷ்மரிடம் கூறினாராம்.


      தெய்வ வாக்குப் பொய்க்கலாம்  ஆனால் தன்னை நம்பியவரின் வாக்கு பொய்க்கக் கூடாது  என்ற தெய்வத்தின் நிலை.. நம்பிக்கையுடன் வழிபட்டால்  தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதனை உணர்த்துகிறது.


கதை உணர்த்தும் நீதி

  •    தன்னை நம்பியோன் தன் மீது கொண்ட நம்பிக்கை எந்தளவும் 
  • பொய்த்து    விடக்கூடாது என்பதற்காக இறைவன் தன் நிலை இறங்குகிறான்
  •   நம்பிக்கை உண்மையெனில் இறைவன் அருள் நிச்சயம் கிட்டும். 




No comments:

Post a Comment