இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday, 21 October 2020

கல்வியில் சிறந்த பெண்கள் ஆன்லைன் தேர்வு

Friday, 16 October 2020

தேர்வு அறிவிப்பு

ஆன்லைன் தேர்வு முடிவடைந்து விட்டது

Tuesday, 13 October 2020

சிலேடை அணி வகுப்பு 8 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கானது.

சிலேடை அணி
(6 முதல் 12  ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது)



சிலேடை  என்றால் என்ன?

                      ஒரு சொல், அல்லது சொற்றொடர் பல பொருள்படி அமைவது சிலேடை எனப்படும்.

2.சிலேடை அணியின் வகைகள் யாவை?

                1.செம்மொழிச் சிலேடை

                 2.பிரிமொழிச் சிலேடை  என இரு வகைப்படும்.

வினாக்களுக்கு விடையளி

                    1.செம்மொழிச்  சிலேடை என்றால் என்ன?

                     2.பிரிமொழிச் சிலேடை என்றால் என்ன?

                      3. தாமரை - என்ற சொல் எவ்வகைச் சிலேடை

                      4. படி என்ற சொல், எவ்வவைச் சிலேடை என்பதனைக் குறிப்பிடுக.

                       5. நீங்கள் படித்து இரசித்த, சிலேடை  நயங்களைக் குறிப்பிடுக

 

Saturday, 10 October 2020

அணிகள் சம்பந்தமான பாடப்பகுதியில் சிறு தேர்வு ( ஆன்லைன் வழியாக). மொத்த மதிப்பெண் 4

Friday, 9 October 2020

வஞ்சப்புகழ்ச்சி அணி


 அணி இலக்கணம்

வஞ்சப்புகழ்ச்சி அணி

அணி விளக்கம்-

ஒருவரைப் புகழ்வது போலப் இகழ்வதும், இகழ்வதினைப்போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சியணி எனப்படும்.

வஞ்சப்புகழ்ச்சியணியினை விளக்கும் காணொலி

வகுப்பு( 6-முதல் 12 வகுப்புக்களுக்கானது)




வினா

1.வஞ்சப்புகழ்ச்சியணி என்றால் என்ன?

2.


Thursday, 8 October 2020

தற்குறிப்பேற்ற அணி (வகுப்பு 8,9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்காக)...

தற்குறிப்பேற்ற அணி 
எளிய விளக்கங்களுடன்...


 தற்குறிப்பேற்ற அணி

இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.


வினா1.

தற்குறிப்பேற்ற அணி விளக்குக

Wednesday, 7 October 2020

இயல் 5 பாடறிந்து ஒழுகுதல்

 இயல் 5

பாடறிந்து ஒழுகுதல்


                                                         ஒலிப்பேழை

மனப்பாடப் பாடலை முறையாக மனப்பாடம் செய்யவும்.


                     1.ஆற்றுதல் என்பது யாது?

விடை-
ஆற்றுதல் என்பது வறுமையில் வாடியவர்களுக்கு பொருளினைக் கொடுத்து உதவுதல் மற்றும் இல்வாழ்க்கை நடத்துதல் ஆகும்.

விளக்கம்:
மக்களின் அனுபவத்தால், நெறிமுறையால் விளைந்த கருத்துக்களின் தொகுதி அறமாகும். அறக்கருத்துக்கள் மக்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து வாழ்வை செம்மையுறச் செய்கின்றன. தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
இப்பேர்ப்பட்ட கருத்துக்களை கலித்தொகை பாடல்கள் எடுத்துக் காட்டுகிறது. ஆற்றுதல் என்று சொல்லப்படுவது, இல்வாழ்க்கை நடத்துதல் என்றும் வறுமையுற்று இருப்பவர்களுக்கு ஒன்றைக் கொடுத்து உதவுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.


2. கேள்விக்கான விடையை தேடி, கண்டுபிடிக்கவும்

கேட்கப்பட்ட வினாக்களுக்கு தகுந்த பதிலினை அளிக்கவும்

வினா1.1. பண்பு. அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

                 2. முறை,பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
                                                                                         
             வெளியீடு-                                                             தமிழ்துறை,
                                                                               அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
                                                                                          கடையநல்லூர்


Saturday, 9 September 2017

தமிழால் சிறப்போம், - ” நீரோட்டகம் ” அறிவோம் !


சித்திரக் கவி வகைல இருபதுக்கு மேல இருக்கு. 


நீரோட்டகம் 

                    அதுல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். 

ஒட்டியம் 

உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம்.


                இப்ப நீரோட்டகத்துல நான் பெத்த மகளை மையப்படுத்தி ஒரு கவிதை! அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக சொல்லுல வராமப் பாடினா மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாது, குவியாது பாருங்க:


அழகே, கனியே, கணையே, எந்தன் நிலாளே,
கணணழகே, நெஞ்சே, தயாளினியே, தென்றல்நீ!
நாசிநிறை காற்றே, சீரே, எந்தன்ஆசை அறிநீ!!
நின்நகை காணல் சால்நிறை ஆகின்றேன்;
கலையரசி நீ ஆக, இறை ஆசி நினைச்சேர,
யான் ஈசனின் தயா இறைஞ்சி!!!


பொருளுரை: 
                  அழகே, கனியே, கணையாழி போன்றதொரு சிறப்பே, எந்தன் நிலா மகளே, விழியழகே, நெஞ்சில் எப்போதும் நினைவாய் இருப்பவளே, கருணையுள்ளம் கொண்டவளே, என்வாழ்வில் தென்றலாய்ப் பிறந்தவள் நீ. என் சுவாசமே, செல்வச்சீரே, என் ஆசை அறிவானவளே, உன் சிரிப்பைக் கண்டால் எனக்கு நெஞ்சம் நிறையும். நீ கலைகளில் சிறப்பு பெற, இறைவன் ஆசி உமக்குக் கிடைக்க, நான் எல்லாம் வல்ல இறைவன் அந்த சிவபெருமானின் அருள் வேண்டி இறைஞ்சுகிறேன். 

மேலதிகத் தகவல்: 

ஆசுகவி-
                பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்த பின், மற்றவர் "பாடும்" என்று சொன்னவுடன், பாடுவோன் ஆசுகவியாம்.



மதுரகவி -



              சொல்லினிமை, பொருளினிமை, தொடை, தொடை விகற்பம், செறிய உருவகம் முதலிய அலங்காரத்துடன் இன்னோசையுடைதாய் அமுதமுறப் பாடுபவன் மதுரகவியாம்.

சித்திரக்கவி -

                  மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்று கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப்பா, வல்லினப்பா, மெல்லினப்பா, இடையினப்பா, சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்பநடை, வினா உத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்துவருத்தனை, நாகபந்தம், முரசபந்தம், நீரோட்டகம், சித்து, ஒருபொருட்பாட்டு, பல பொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச்சுருக்கம் இவை முதலிய தெரிந்து பாடுவோன் சித்திரக்கவியாம். 



வித்தாரக்கவி -


மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடல் ஊர்தல், கிரீடை, இயல், இசை, கூத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப்பாடுவோன் வித்தாரக்கவியாம்.

                                                                                                       -( தொடரும்..)

Tuesday, 5 September 2017

அட்டநாகபந்தம்

சித்திரக்கவியின் வகைகள்

1.அட்டநாக பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்டநாக பந்தம், தமிழழகன் பாடல்
அட்டநாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று. எட்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும். பாடல் (கவிதை) ஒன்று அந்தப் பிணைப்பினூடே நுழைந்து படிக்கும்போது பாடல் பொருந்தி வருமாறு ஓவியப்பா அமைந்திருக்கும்[1]. பாடலைப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரையில் சென்று படித்துக்கொள்ள வேண்டும்.
சொல்வளம் மிக்கவர் இதனைப் பாடுவர். ஓவியப் பாவைச் சித்திரக்கவி என்பர்.
ஔவை சண்முகம் பற்றி திருவையாறு அப்துல்கபூர் சாயபு இருபதாம் நூற்றாண்டில் பாடிய சித்திரக்கவி நூல் ஒன்று உண்டு. [2] சொல்லணிப் பாடல்களில் நாட்டம் கொண்ட தமிழழகன் பாடிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
தமிழழகன் கவிதை
பாரதிக் கெல்லை
பாருக்குளே இல்லை
இதனைப் பாடுவதற்கு இவர் கூறும் எளிய வழி
  • 15 எழுத்தில் ஈரடிக் கவிதை அமையவேண்டும்
  • 4ஆவது எழுத்தும், 10ஆவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதனைப் பொருத்திப் பார்த்து அறிந்துகொள்க
நாரணனை நாடு
பூரணனைக் கொண்டாடு
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்[3]











Friday, 1 September 2017



இலக்கிய மன்றத்தின் உட்கூறுகள்



பேச்சின் திறன்


கவிதை வாசித்தல்

Wednesday, 30 August 2017

சித்திரக்கவி - விளக்கம்



சித்திரக் கவி- விளக்கம்
    பத்தாம் வகுப்பு  இயல் 1 ல் துணைப்பாடம் ”பரிதிமாற்கலைஞர்” பாடத்தில், பரிதிமாற்கலைஞர் சித்திரக்கவி எழுதும் புலமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சித்திரக்கவி என்றால் என்ன? என்பதற்கான விளக்கம்  இதோ உங்கள் முன்.

தமிழர்களது அழிந்து கொண்டுவரும் கலைகளில் ஒன்றான சித்திரக் கவி பற்றி ஆராய்வது எங்கள் முன்னே உள்ள தேவையை உணர்த்தி நிற்கின்றது . இந்த சித்திரக் கவி எப்படிப்பட்டது என்று பார்பதற்கு முதல் , சித்திரக் கவி என்றால் என்ன என்பதும் அதன் ஆதிமூலத்தையும் நாம் பார்க்க வேண்டும் .

தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றில் , அணி இலக்கணத்தை விளக்குமுகமாக எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்தத் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் அண்ணளவாக பனிரண்டாம் நூற்றாண்டுகளாகும் ( (1133-1150) . இந்த தண்டியலங்காரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டு ( பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ) சொல்லணியியலில் சித்திரக் கவி பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன .

எங்களால் உருவாகப்பட்ட அனைத்துக் கலை வடிவங்களுமே இலக்கியத்தை மையபடுத்தியே சுற்றிச் செல்கின்றன . எப்படி என்றால் , ஒரு இலக்கியத்தைக் கேட்பதாலும், எழுதுவதாலும், பேசுவதாலும், உணருவதாலும், காட்சியாக வரைவதாலும், காட்சியாகக் காண்பதாலும் மனித மனத்தை மகிழ்ச்சி அடையச் செய்ய இயலும் ஒரு கவிதையை இசையோடு இனிமையாகப் பாடினால் அதைக் கேட்பவர் மகிழ்ச்சி அடைகின்றார் . இதன் மூலம் இலக்கியம் இசையோடு கலந்து விடும் கலையாகி விடுகிறது.

அதேபோல் ஒரு கவிதையை அபிநயம் பிடித்து நடனம் ஆடினால், அது நாட்டியக் கலையாக அமைந்து விடுகிறது. அதே கவிதை தரும் பொருளை, இருவர் உரையாடும் நாடகக் காட்சியாக மாற்றி நடித்தால் நாடகக் கலை உருவாகி விடுகிறது. இதையே திரைப்படமாக , அசையும் படமாக , தொலைக்காட்சித் தொடராக , காட்சிப் படமாகவும் ஆக்கவும் முடியும் . இவ்வாறாக இலக்கியமானது மற்றய கலைகளுக்கு மையமாகவும், மற்ற கலைகள் இலக்கியத்தைச் சார்ந்து அமைவனவாகவும் விளங்குகின்றன.

இலக்கியத்தில் இடம் பெறும் மொழியே, சொல்லே, எழுத்தே ஓவியம் போல அமைந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அவ்வாறு எழுத்துகள் செய்யுளுக்குள்ளேயே ஓவியமாக மடங்கி நிற்கும் முறையே, அமைப்பே சித்திரகவி என்று வகைப்படுத்திக் கொள்ளலாம் .

ஒரு கவிதைக்குள் , எழுத்துகள் மடங்கி, மடங்கி நின்று ஓவியமாக அமைவதை சித்திரகவி என்று சொல்லலாம் . உதாரணமாகப் பின்வரும் பகுதியைப் பார்ப்போம் .


eohn.jpg

இந்தப் படத்திலே , "பாப்பா" என்ற சொல்லு நெடுக்கு வாட்டிலும், குறுக்கு வாட்டிலும் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட படத்தில் ஆறு இருமுனை அம்புக்குறிகள் காட்டப் பட்டுள்ளன . இதன் மூலமாக 12 முறை பாப்பா என்ற சொல்லை நீங்கள் எடுக்க முடியும். இது ஒருவகையான வடிவ விளையாட்டாகும் ஆனால் . இந்த விளையாட்டைக் கவிதைக்குள் செய்வது, சித்திரகவி எனப்படுகிறது.
 

இந்த சித்திரக் கவியின் வகைகளை இதன் ஆதி மூலமான தண்டியலங்கரத்தில் ஒரு நூற்பா வடிவத்தில் நாங்கள் காணலாம் ,

கோமூத் திரியே, கூட சதுக்கம்,
மாலை மாற்றே, எழுத்து வருத்தனம்,
நாக பந்தம், வினாவுத் தரமே,
காதை கரப்பே, கரந்துறைச் செய்யுள்,
சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம்,
அக்கரச் சுதகமும் அவற்றின் பால
(தண்டியலங்காரம்-97)

அதாவது , கோமூத்திரி , கூடச் சதுக்கம் , மாலைமாற்று , எழுத்து வருத்தனம் , நாக பந்தம் , வினாவுத்தரம் , காதை கரப்பு , கரந்துறைப்பாட்டு , சக்கர பந்தம் , சுழிகுளம் , சருப்பதோ பத்திரம் , அக்கரச் சுதகம் , என்று பன்னிரெண்டு வகைப்படும் . இந்த பன்னிரெண்டு வகையான சித்திரக் கவிகளுக்குமே விதிமுறைகள் உள்ளன . அவற்றை ஒவ்வன்றாக நாங்கள் பார்க்கலாம் .

01 கோமூத்திரி :

ஒரு பசுமாடு வீதியில் நடந்து செல்லும் பொழுது சிறுநீர் கழிப்பதைப் பார்த்து இருப்பீர்கள் . அந்த மாடு இயற்கையான முறையிலே சிறுநீரைக் கழித்து இருந்தால் அந்தச் சிறு நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அந்த வளைவு அமையும். அதுவே இரண்டு மாடுகள் சிறுநீர் கழிப்பதாக இருந்தால் இரு எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அந்தக் கவிதையை அமைப்பது கோமூத்திரி என்னும் சித்திரகவியாகும். (கோ = பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்). கோ மூத்திரி சித்திரக் கவிதை எழுதும் பொழுது பின்வருமாறு எழுதப் படவேண்டும் .

"கவிதையின் முதலடியில் உள்ள எழுத்துகளும், இரண்டாம் அடியில் உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக அமையும் முறையில் சித்திரக்கவி எழுதப் படவேண்டும்". உதாரணமாக ,

பருவ மாகவி தோகன மாலையே

பொருவிலாவுழை மேவன கானமே - (முதல் அடி)

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே - (இரண்டாம் அடி)


பொருள் :

தோழி ஒருவள் தனது தலைவிக்குப் பின்வருமாறு கூறுகின்றாள் “தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன. மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள் இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால் உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே”

இதை சித்திரக் கவியாக வரைந்தால் பின்வருமாறு அமையும் ,

(1)
முதல் அடி


gqlc.jpg

இரண்டாம்அடி

(2)
முதல் அடி

gqlc.jpg

(3)
முதல் அடி
இரண்டாம் அடி

7gbj.jpg

02 கூடச் சதுக்கம்:
ஒரு சித்திரக் கவியில் அமைந்துள்ள கவிதையில் இறுதி அடியில் அமைந்துள்ள எழுத்துக்கள் யாவும் முன்பாக அடியில் உள்ள அடிகளில் இருந்து இயற்ரப்பட்டல் அது கூடச் சதுக்க சித்திரக் கவி என்று வரையறை செய்து கொள்ளலாம் (கூடம் = மறைவு; சதுக்கம் = மறைவான நிறைவு அடியை உடையது) உதாரணமாக ,


2 3 4 5 6 7 8 9 10 11 1
மு க ந க/ ந ட் ப து/ ந ட் பு அ ன் று/ நெ ஞ் ச த் து

அ க ந க/ ந ட் ப து/ ந ட் பு
1 2 3 4 5 6 7 8 9 10 11


இது ஒரு திருக்குறளாகும் . இந்தக் குறளில் கீழடியில் உள்ள 11 எழுத்துகளும் முன்னடியில் இருந்து பெறப்பட்ட எழுத்துகளால் இயற்றப் பட்டதாகும் .

03 மாலைமாற்று :

maalai%20maRRu.jpg

மாலை மாற்று (Palindrome) என்பது எந்தத் திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் என்று நாங்கள் வரையறை செய்து கொள்ளலாம் . தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு போன்ற சொற்கள் மாலை மாற்றுகள் ஆகும். உதாரணமாக ,

பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூ நீறு நாளைவா பூ 


பொருள் : 

தலைவியைக் கூடி மகிழ வந்த தலைவனைத் தோழி
தடுத்ததாக இப்பாடல் அமைகிறது.

“ பூப்பு அடையாதவளை அடைய விரும்பிய மேகமே ! நீ
பூமழை பொழிய வந்தாயோ ! பூவும் நீறும் கொண்டு நாளை
வா ! இன்று அவள் பூப்பு அடைந்திருக்கிறாள்.”

இப்பாடல் தலைவி கூடி மகிழும் அளவிற்கு உடல் அளவில்
உரியவளாக இல்லை. அதனை மறைமுகமாகத் தலைவனுக்கு
உணர்த்த மேகத்தை அழைத்துச் சொல்வதாகத் தோழி
பேசுகிறாள்.


இதை விட ஒரு எளிமையான பாடல் ஒன்று ,

தேரு வருதே மோரு வருமோமோரு வருமோ தேரு வருதே

பொருள் :

வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.

தமிழரின் பக்தி இலக்கியங்களில் இந்த மாலை மாற்று ஒன்று வருகின்றது . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலை மாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன. அவற்றில் உள்ள ஒரு பாடல் இவ்வாறு சொல்கின்றது ,

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இதன் பொருள் :

யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
காழீயா-சீர்காழியானே
மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ
மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவனே

04 எழுத்து வருத்தனம் :

வருத்தனம் என்றால் வளருதல் என்று நாங்கள் பொருள் கொள்ளலாம் . ஒரு
கவிதையில் பல கருத்துகள் சொல்லப்பட்டதாகக் கொள்வோம். அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது என்று எடுத்துக் கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும் மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்ற சித்திரகவியாகும். இதை எளிய முறையில் சொலவதானால் ,
மதுரை என்பது ஓர் ஊரின் பெயர். அதில் ரை எழுத்து மறைந்தால் குடிக்கும் கள் கிடைக்கும். அதனோடு ந என்ற எழுத்து சேர்ந்தால் நமது என்ற உடமைச் சொல் கிடைக்கும். இவ்வகையில் கிடைத்த சொற்கள் மதுரை, மது, நமது என்பனவாகும்.

இதோ ஒரு உதாரணம் ,

"ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்
பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் - வாய்ந்த
உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் தாமரையென் றாம்."


பொருள் :

திருமால் சங்கு ஆயுதத்தை உடையவர். அவர் முன்னொரு காலத்தில் கோவராத்தன மலையை கைவிரலால் தூக்கினார். அவர் பொன்னாடை அணிபவர், அவரின் தொப்புழ்க் கொடியில் பிரம்மா இருக்கிறார்.

சொல் வளருதல்:

(1) ஏந்திய வெண்படை
(திருமாலின் வெள்ளை
ஆயுதம்) கம்பு (சங்கு)

(2) (கம்பு என்பதில் ஒரு எழுத்து
நீங்க கம் (தலை) என்பது
கிடைக்கும். கம்

(3) முன்னால் எடுத்தது
(கோவர்த்தன மலையைத்
திருமால் குடையாகப்
பிடித்தார்)

(ந என்ற எழுத்து வர நகம்
(மலை) கிடைத்தது.) (ந) கம் (மலை)

(4) பூந்துகில்
(திருமால் உடுத்தும் ஆடை)
(க என்ற எழுத்து மேலும்
இணைய கநகம் (பொன்)
கிடைத்தது.) கநகம்
(பொன்னாடை)

(5) மால் உந்தி பூத்தது
(திருமால் தொப்பூழ்க்
கொடியில் தாமரை பூக்க
அதில் பிரம்மா இருப்பார்)
(கோ என்ற எழுத்து மேலும்
வர கோகநகம் (தாமரை)
கிடைத்தது.) கோகநகம் 

இதில் எழுத்து வளருதலாக வந்த தலை, மலை, பொன், தாமரை ஆகியன செய்யுளின் இறுதியடியில் சொல்லப் பெற்றுள்ளன. இறுதியடியில் சொல்லப் பெற்ற இவற்றை எழுத்தடைவாக - எழுத்துப் பெறுதலாக - எழுத்து வருத்தனமாகக் கொண்டு இங்கு நாங்கள் சித்திரகவியாகக் காண முடிகிறது.

 

சித்திரக்கவி-
எல்லா பொருள்களும் முழுமையுர உணரும் பரஞானம் வாய்ப்பதற்காக அருளப் பட்டவை சித்திரக்கவிகள்" என்று சேக்கிழார் கூறியுள்ளார் (பெரிய புராணம் 2179 & 2180). பாடுபவரின் மொழிபுலமை மற்றும் மொழியின் செழுமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்படி அமைந்தவை சித்திரக்கவிகள் என்பது ஆய்வலர் முடிவு. தமிழ் தவிர பிற மொழிகளில் இந்த கவி அமைப்பு கிடையாது என்று கருதப்படுகிறது.


சித்திரக்கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கியப் பாங்குகளில் ஒன்று. தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணங்கள் சித்திரக் கவிகளின் தோற்றுவாய். [திருமங்கையாழ்வாரால்]] பாடப்பட்ட "திருஎழுகூற்றிருக்கை" ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி. இவரை பின்பற்றி அருணகிரிநாதரும் அமைத்துள்ளார். இவர்களின் வரிசையில் பாம்பன் சுவாமிகளும் சித்திரக்கவிகள் படைத்துள்ளார்.

எடுத்துக்காட்டு






மாலை மாற்று

                                                                  தொடரும்