1➤ நெல் கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
,=> தாள்
2➤ கீரை வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
,=> தண்டு
3➤ குத்துச்செடி புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
,=> தூறு
4➤ தாள் என்பது எதன் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்
,=> நெல்
5➤ கால்டுவெல் அவர்கள் எழுதிய நூல்
,=> திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
6➤ கம்பு சோளம் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> தட்டு அல்லது தட்டை
7➤ கரும்பின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> கழி
8➤ மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> கழை
9➤ புளி, வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> அடி
10➤ அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> கவை
11➤ கவையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> கொம்பு
12➤ கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> சினை
13➤ சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> போத்து
14➤ போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> குச்சு
15➤ இணுக்கு என்பது.......
,=> குச்சியின் பிரிவு
16➤ புளி வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> இலை
17➤ நெல் புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> தாள்
18➤ சோளம் கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> தோகை
19➤ காய்ந்த தாளும் தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> சண்டு
20➤ காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> சருகு
21➤ சுள்ளி என்பது.....
,=> காய்ந்த குச்சி
22➤ நெல் புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> துளிர் அல்லது தளிர்
23➤ புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> முறி அல்லது கொழுந்து
24➤ சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> குருத்து
25➤ கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> கொழுந்தாடை
26➤ பூவின் தோற்ற நிலை.....
,=> அரும்பு
27➤ பூவின் மலர்ந்த நிலை என்பது....
,=> மலர்
28➤ பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> போது
29➤ மரம் செடியினின்று பூ கீழே விழுந்த நிலை எது
,=> வீ
30➤ பூ வாடின நிலை என்பது எது
,=> செம்மல்
31➤ உலகப் பெருந்தமிழர் என்று அழைக்கக் கூடியவர் யார்
,=> இரா. இளங்குமரனார்
32➤ பூவோடு கூடிய இளம் பிஞ்சு
,=> பூம்பிஞ்சு
33➤ இளம் காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> பிஞ்சு
34➤ மூசு என்று அழைக்கப்படுவது எது
,=> பலாப்பிஞ்சு
35➤ கவ்வை என்று அழைக்கப்படுவது எது
,=> எள் பிஞ்சு
36➤ தென்னை பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> குரும்பை
37➤ நுழாய் என்று அழைக்கப்படுவது எது
,=> இளம் பாக்கு
38➤ கருக்கல் என்று அழைக்கப்படுவது எது
,=> இளநெல்
39➤ கச்சல் எனப்படுவது எது
,=> வாழைப்பிஞ்சு
40➤ அவரை துவரை முதலியவற்றின் குலை எவ்வாறு அழைக்கப்படும்
,=> கொத்து
41➤ கொடி முந்திரி போன்றவற்றின் குலை
,=> குலை
42➤ வாழைக்குலை எவ்வாறு அழைக்கப்படும்
,=> தாறு
43➤ கேழ்வரகு சோளம் முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்
,=> கதிர்
44➤ நெல் தினை முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்
,=> அலகு அல்லது குரல்
45➤ வாழைத்தாற்றின் ஒரு பகுதி எவ்வாறு அழைக்கப்படும்
,=> சீப்பு
46➤ நுனியில் சுருங்கிய காய்.......
,=> சூம்பல்
47➤ சுருங்கிய பழம்.....
,=> சிவியல்
48➤ புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி
,=> சொத்தை
49➤ குளுகுளுத்த பழம்......
,=> அளியல்
50➤ குளுகுளுத்து நாறிய பழம்
,=> அழுகல்
51➤ பதராய்ப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> சொண்டு
52➤ தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்....
,=> அல்லிக்காய்
53➤ தென்னையில் கெட்ட காய்
,=> ஒல்லிக்காய்
54➤ வரகு கேழ்வரகு முதலியவற்றின் உமி..... எனப்படும்
,=> கொம்மை
55➤ நெல் கம்பு முதலியவற்றின் தானியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
,=> கூலம்
56➤ அவரை உளுந்து முதலியவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன
,=> பயறு
57➤ கத்தரி மிளகாய் முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகின்றன
,=> விதை
58➤ புளி காஞ்சீரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> காழ்
59➤ அவரை துவரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
,=> முதிரை
60➤ நெல் கத்திரி முதலியவற்றின் இளநிலை.....
,=> நாற்று
61➤ மா புளி வாழை முதலியவற்றின் இளநிலை.....
,=> கன்று
62➤ வாழையின் இளநிலை....
,=> குருத்து
63➤ தென்னையின் இளநிலை....
,=> பிள்ளை
64➤ நெல் சோளம் முதலியவற்றின் பசும்பயிர் எவ்வளவு அழைக்கப்படும்
,=> பைங்கூழ்
65➤ வரகு காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய........ தமிழ்நாட்டில் அன்றி வேறெங்கும் விளைவதில்லை
,=> சிறு கூலங்கள்
66➤ உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே என்று கூறியவர்
,=> கா அப்பாத்துரையார்
67➤ திருவள்ளுவர் தவச்சாலை என்ற ஒன்றை அமைத்தவர் யார்
,=> ரா இளங்குமரனார்
68➤ தமிழ்த் தென்றல் திரு வி க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கொண்டவர்......
,=> ரா இளங்குமரனார்
69➤ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனராகப் பணியாற்றியவர் யார்
,=> தேவநேயப் பாவாணர்
70➤ உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்
,=> தேவநேயப் பாவாணர்
71➤ போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் 1554 கார்டிலா என்னும் நூல் முதன்முதலாக எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
👁 Show Answer
,👁 Show Answer
=> தமிழ்
72➤ இந்திய மொழிகளிலே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது
,=> தமிழ்
73➤ நிலவகை, நன்செய் வகை வேலி வகை ஆகியவற்றை பற்றி விளக்கியவர்
,=> தேவநேயப் பாவாணர்
74➤ வடலி என்பது.....
,=> பனையின் இளநிலை
75➤ பழங்களின் மேற்பகுதி மிக மிக மெல்லியதாக இருந்தால்..... என்பர்
,=> தொலி
76➤ கச்சல் என்பது....ன் பிஞ்சு வகை
,=> வாழை
77➤ கார்டிலா என்ற நூல் தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட ஆண்டு எது
,=> 1554
78➤ முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட தமிழ் நூலின் வண்ணம்
,=> கருப்பு மற்றும் சிவப்பு
79➤ தமிழகத்தில் விளையும் சம்பா நெல் வகைகள் மொத்தம்
,=> 60
80➤ முதன் முதலாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்
=> கார்டிகலா
No comments:
Post a Comment