1➤ உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்றவர்
,=> தொல்காப்பியர்
2➤ உலக உயிர்களின் இயக்கத்தை தீர்மானிப்பது......
,=> காற்று
3➤ மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறியவர்
,=> திருமூலர்
4➤ மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்
,=> திருமந்திரம்
5➤ திருமந்திரத்தை எழுதியவர் யார்
,=> திருமூலர்
6➤ உலகம் உருவானது எடுத்து சொல்லும் அறிவியல் கொள்கை.....
,=> பெருவெடிப்பு கொள்கை
7➤ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல.... பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
,=> பரிபாடல்
8➤ பரிபாடலை எழுதியவர் .....
,=> கீரந்தையார்
9➤ ஐம்பூதங்களில் முதலில் தோன்றியது
,=> காற்று
10➤ விசும்பு என்ற சொல்லின் பொருள்
,=> வானம்
11➤ வளர் வானம் - என்ற சொல்லின் இலக்கண குறிப்பு
,=> வினைத்தொகை
12➤ ஊழ் ஊழ் -இலக்கணக் குறிப்புத் தருக
,=> அடுக்குத்தொடர்
13➤ அண்ட வெளியில் கோடிக்கணக்கான பால்வீதிகள் உள்ளன எனக் கூறியவர்
,=> எட்வின் ஹப்பிள் 1924 ஆம் ஆண்டு நிரூபித்தார்
14➤ அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
,=> திருவாசகம்
15➤ திருவாசகத்தை எழுதியவர் யார்?
,=> மாணிக்கவாசகர்
16➤ பரிபாடல் எத் தொகை நூல்களில் ஒன்று?
,=> எட்டுத்தொகை
17➤ ஓங்கு பரிபாடல் எனக் குறிக்கப்படும் நூல் எது ?
,=> பரிபாடல்
18➤ பண்ணோடு பாடப்பட்ட நூல் எனக் குறிக்கப்படும் நூல் எது ?
,=> பரிபாடல்
19➤ பரிபாடலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளதாக கருதப்படுகிறது
,=> 70 பாடல்கள்
20➤ பரிபாடலில் தற்போது கிடைக்கப்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
,=> 24 பாடல்கள்
21➤ பண்டைக்கால மக்களின் வாழ்க்கை முறை சமூக உறவு அறிவாற்றல் போன்றவற்றை புரிந்து கொள்ள பயன்படும் இலக்கியம் எது ?
,=> சங்க இலக்கியம்
22➤ நாகூர் ரூமி - இவர்களின் இயற்பெயர் என்ன?
,=> முகமது ரஃபி
23➤ நாகூர் ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்
,=> கணையாழி
24➤ நாகூர் ரூமி எந்தெந்த துறைகளில் தனது பணியைத் தொடர்ந்தார்
,=> குறு நாவல்,சிறுகதை,மொழிபெயர்ப்பு
25➤ நாகூர் ரூமியின் கவிதைத் தொகுதிகள் யாவை?
,=> நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல்
26➤ நாகூர் ரூமி எழுதிய நாவலின் பெயர் என்ன?
,=> கப்பலுக்குப் போன மச்சான்
27➤ பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
,=> வைத்தியலிங்கம்
28➤ பிரபஞ்சன் பிறந்த ஊர் எது ?
,=> புதுச்சேரி
29➤ பிரபஞ்சன் எழுதிய பிரம்மம் என்ற நூல் ......வகையைச் சார்ந்தது
,=> சிறுகதை
30➤ வானம் வசப்படும் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
,=> பிரபஞ்சன்
31➤ பிரபஞ்சனுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது கிடைக்கப்பெற்றது
,=> 1995
32➤ பிரபஞ்சனுக்கு எந்த நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது?
,=> வானம் வசப்படும்
33➤ பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படும் என்ற நூல் ..... வகையைச் சார்ந்தது
,=> வரலாற்றுப் புதினம்
34➤ பிரபஞ்சனின் படைப்புகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?
,=> தெலுங்கு, கன்னடம் ,இந்தி, பிரஞ்சு ,ஆங்கிலம், ஜெர்மன்
35➤ பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி - பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
,=> அகநானூறு.
36➤ பல் பழப் பலவின் பயன் கெழு கொல்லி - பாடல் வரிகளில் குறிப்பிடப்படும் ஊர் எது ?
,=> கொல்லிமலை
37➤ சொற்கள் தொடர்வதைத் ...... எனலாம்
,=> தொடர்
38➤ தொடர் முடிவு தராவிட்டால் ..........எனப்படும்
,=> முடியாத் தொடர் எனப்படும்
39➤ ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது ......
,=> தொகாநிலைத் தொடர் எனப்படும்.
40➤ தொகாநிலைத் தொடர் .........வகைப்படும்
,=> 9 வகைப்படும்
41➤ எழுவாயுடன் பெயர் வினை, வினா ஆகிய பயனிலை கள் தொடர்வது ..... ஆகும்
,=> எழுவாய்த் தொடர்
42➤ விளியைத் தொடர்ந்து வினை அமைவது ...... ஆகும்
,=> விளித் தொடர் எனப்படும்
43➤ நண்பா எழுது! - எவ்வகைத்தொடர்
,=> விளித் தொடர்
44➤ தொடரின் இறுதியில் இடம் பெற வேண்டிய வினைமுற்று,தொடரின் முதலில் அமைந்து பெயரைக் கொண்டு முடிவது ---... தொடர்
,=> வினைமுற்று தொடர் ஆகும்
45➤ பாடினாள் கண்ணகி- இது எவ்வகை தொடர்
,=> வினைமுற்று தொடர்
46➤ முற்றுப்பெறாத வினை,பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது
,=> பெயரெச்சத் தொடர் எனப்படும்
47➤ முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லை கொண்டு முடிவது ..........தொடராகும்
,=> வினையெச்சத் தொடராகும்
48➤ பாடி மகிழ்ந்தனர் - எவ்வகைத் தொடர்
,=> வினையெச்சத் தொடர் ஆகும்
49➤ கேட்ட பாடல் - எவ்வகைத் தொடர்
,=> பெயரெச்சத் தொடர் ஆகும்.
50➤ வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் ......
,=> வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்
51➤ கட்டுரையை படித்தால் - எவ்வகைத் தொடர்
,=> வேற்றுமைத் தொகநிலை தொடர்கள்
52➤ அன்பால் கட்டினார் - எவ்வகைத் தொடர்
,=> மூன்றாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
53➤ அறிஞருக்குப் பொன்னாடை - எவ்வகைத் தொடர்
,=> நான்காம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
54➤ நிலை மொழியில் பெயர் வினைச்சொல்லின் முன்போ பின்போ இடைச்சொல் சேர்ந்துவரின் அது..........தொடராகும்
,=> இடைச்சொல் தொடர் ஆகும்
55➤ மற்றொன்று கிடைத்தது - எவ்வகைத் தொடர்
,=> இடைச்சொல் தொடர்
56➤ அவரே சொன்னார் - எவ்வகைத் தொடர்
,=> இடைச்சொல் தொடர்
57➤ உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ........ தொடராகும்.
,=> உரிச்சொல் தொடர்
58➤ சாலச் சிறந்தது - எவ்வகைத் தொடர் ...
,=> உரிச்சொல் தொடர்
59➤ ஒரு சொல் இரண்டு, மூன்று முறை அடுக்கித் தொடர்வது ...... தொடராகும்
,=> அடுக்குத் தொடராகும்
60➤ ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது ...........
,=> கூட்டு நிலைப் பெயரெச்சம் எனப்படும்
61➤ கூட்டு நிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு......
,=> வேண்டிய, கூடிய, தக்க | வல்ல முதலான பெயரெச்சங்கள்
62➤ வேண்டிய கூடிய தக்க வல்ல முதலான பெயரெச்சங்களை செய்ய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் ...........உருவாகின்றன.
,=> கூட்டு நிலைப் பெயரெச்சங்கள் எனப்படும்
63➤ கேட்க வேண்டிய பாடல் - இதில் இடம்பெற்றுள்ள பெயரெச்சம்......
,=> கூட்டு நிலைப் பெயரெச்சம்
64➤ சொல்லத்தக்க செய்தி - இதில் இடம்பெற்றுள்ள பெயரெச்சம்
,=> கூட்டு நிலைப் பெயரெச்சம்
65➤ Strom - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல் .....
,=> புயல்
66➤ Tornado - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
,=> சூறாவளி
67➤ Tempest - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
,=> வன் புயல்
68➤ Land Breeze - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
,=> நிலக்காற்று
69➤ Sea Breeze - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
,=> கடற் காற்று
70➤ whirlwind - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
,=> சுழல் காற்று
71➤ குயில் பாட்டினை எழுதியவர் .......
,=> பாரதியார்
72➤ அதோ அந்தப் பறவை போல > நூலினை எழுதியவர் ......
,=> ச முகமது அலி
73➤ உலகின் மிகச் சிறிய தவளை ---- நூலினை எழுதியவர்
,=> எஸ் ராமகிருஷ்ணன்
74➤ அகன் சுடர் - என்பதன் பொருள் யாது?
,=> பெரிய தீபம், அகன்ற ஒளி
75➤ ஆர்கலி - சொல்லின் பொருள் யாது?
=> ஆர்ப்பரிக்கும் கடல், கடல்
