செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 25 July 2023

வகுப்பு 9 .வரவேற்பு மடல்

 சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

வரவேற்பு மடல்

இடம் : அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

                       கடையநல்லூர்

நாள் : 05.06.23

நேரம் : 3.00 மணி

..

சுற்றுச்சூழலைப்பாதுகாக்கும் பள்ளிகளின் வரிசையில் முதலிடம் பெற்ற கடையநல்லூர் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியைப் பாராட்டும் விழாவிற்கு வருகை தரும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

பள்ளியை வழி நடத்தி நிர்வாக மேலாண்மை செய்ததோடு பள்ளிக்குள் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களைப் பராமரித்துப் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வழிகாட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே! ஆசிரியப் பெருமக்களே! பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அவர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவரையும் பள்ளிக்குழு மாணவர் தலைவர் என்ற முறையில் வரவேற்கிறேன். இன்று சூன் திங்கள் 5ஆம் நாள் சுற்றுச் சூழல் தினம். இவற்றிற்கெல்லாம் மேலாக மாவட்டத்திலேயே நம் பள்ளி கிடைத்தற்கரிய விருதினைப் பெற்ற நாளாகும்.

நம் மாவட்டக் கல்வி அலுவலர் மூன்றாண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டினார். இவ் அரசுப்பள்ளி அகன்ற வளாகம்: குடிநீரும் கிடைக்கிறது. நிலத்தடி நீரும் நன்றாக இருக்கிறது. இருக்கின்ற மரங்களுக்கு தண்ணீர் விட்டுப் பசுமை ஆக்குங்கள் பலன் கிடைக்கும் என்றீர்கள்! உங்கள் வாக்கு நிறைவேறியது. எங்கள் கனவு நிகழ்ந்தேறியது. இந்நேரத்தில் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பொருள் உதவி செய்தளித்த பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களுக்கு நன்றி.

எங்கள் பள்ளி வேளாண்மைப் பிரிவு மாணவர்களின் உதவியும் மாணவர்களின் ஒத்துழைப்பும் அளப்பரியது. மாவட்டக் கல்வி அலுவலர்களின் அரசு நிதியுதவி கிடைத்திட மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி!

இவண்,
...........,
பள்ளிக்குழு மாணவியர் தலைவி,
அரசு மேனிலைப் பள்ளி, கடையநல்லூர்


...........,
.

No comments:

Post a Comment