Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.3 பெரியபுராணம்

Question 2.
கவிதையின் விவரிப்பை உரைநடையில் எழுதுக.
Answer:
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ? – வெறுங்காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே
போனதனால் நானும் ஓர் கனவோ? – இந்த
ஞாலமும் பொய்தானோ? – பாரதியார்

பாடல் கருத்து:
வானகமே, வானில் தோன்றும் சூரியன் வெளிப்படுத்தும் இளவெளிலே, மரக்கூட்டங்களே, நீங்கள் கானல் நீர் அல்ல ……. கடவுளின் படைப்புகள். நீங்கள் வெறும் காட்சிப் பிழைகள் இல்லை . உண்மை வடிவம். ஆனால் வாழ்வின் கனவுகள் கனவைப் போலவே …… அழிந்து போனதால் நானும் அழிந்துபோகும் கனவா ……. இந்த நிலவுலகமும் பொய்யாகுமோ?


Question 1.
நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
Answer:
பெரிய புராணத்தில் அழகாக திருநாட்டின் சிறப்பு வருணிக்கப்படுகிறது. அந்நாட்டின் நீர் நிலைகள் அன்னங்கள் விளையாடும் அகலமான படித்துறைகளைக் கொண்டன. அதில் எருமைகள் வீழ்ந்து முழ்கும். அதனால் நீர் நிலைகளிலுள்ள வாளைமீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்குமரங்களின் மீது பாயும். இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்

Question 1.
பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
சைவ சமயப் பெரியவர்களான சுந்தரரும் நம்பியாண்டார் நம்பியும் பாடிய சைவ அடியார்களின் வரலாற்றுக் குறிப்புகளின் விரிவான நூலே பெரிய புராணம் ஆகும். இதைப் பாடியவர் சேக்கிழார். ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியவராக அறுபத்து மூவர் சிறப்புகளைப் பாடியிருக்கிறார் “பக்திச்சுவை நுனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று இவரை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாராட்டுவார். திருநாட்டுச் சிறப்பை இயற்கை வளத்துடன் விளக்கியிருக்கிறார் சேக்கிழார். அதை உற்று நோக்குவோம்.

காவிரிக் கால்வாய்கள் :
காவிரி நீர் மலையிலிருந்து தேன் நிரம்பிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது. அதை வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. நீர்நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளம் தரும் பொருட்டுக் காவிரிநீர் கால்வாய்களில் எங்கும் பரந்து ஓடுகிறது.

உழத்தியரின் கால்களை இடறும் சங்குகள் :
நாற்றுகள் செழித்து வளர்ந்து செடிகள் ஆயின. முதல் இலை சுருள் விழுந்ததால் களை பறிக்கும் பருவம் வந்தது. களைகளைந்து செல்லும் உழத்தியர்களின் நூல்களில் முத்துக்களை ஈனும் சங்குகள் இடறின. அதனால் இடைதளர்ந்து வண்டுகள் மொய்க்கும் மலர்களையுடைய கூந்தல் அசையுமாறு வரப்பினைச் சென்று அடைந்தனர்.

சோழநாட்டுச் சிறப்பு :
காடுகளில் கரும்புகளும் சோலைகள் எங்கும் மலர் அரும்புகளும் உள்ளன. வயலின் ஓரங்களில் கரியகுவளை மலர்கள் மலர்ந்துள்ளன. வயல்களில் சங்குகள் கிடக்கின்றன. நீர்நிலைகளில் அன்னங்கள் உலவுகின்றன. குளங்கள் நிறைந்து கடலைப் போல் காட்சியளிக்கின்றன. நாடு முழுவதும் நீர் நாடு என்று சொல்லத்தக்க அளவில் வளமுடையது திருநாடு.


வாளை மீனும் வானவில்லும் :
அன்னங்கள் நீந்தி விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் விழுந்து மூழ்கின. அதனால் அங்குள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகிலுள்ள பாக்கு மரங்களின் மீது தாவிப் பாயும். இக்காட்சி வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றதாகும். அரிந்த செந்நெல்லின் சூடுகளைப் (நெற்கற்றை) பெரிய போராகக் குவிப்பர். பிடித்த மீன்களையும் குன்றைப் போல் குவித்து வைப்பர். பக்கத்திலேயே தேன் வழியும் மலர்த் தொகுதியை மலைபோல் குவித்து வைப்பர்.

மேகங்கள் தவழும் பொன்மலை :
மேலேயிருந்து நெற்கற்றைகளைச் சாயச் செய்து எருமைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் ஏற்றுவர் வலமாக சுற்றிச் சுற்றி மிதக்கும் இத்தோற்றமானது கரிய மேகங்கள் பொன்மலையின் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சி போல் உள்ளது.