செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 27 January 2023

வகுப்பு 9- கட்டுரை .பயண அனுபவம்

 பயண அனுபவங்களை விவரிக்க.

‘எனது பயணம்’ என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.

இந்த ஆண்டு நான் பயணம் மேற்கொண்ட இடம் வயநாடு ஆகும். கேரளாவின் வற்றாத அழகு கொட்டிக்கிடக்கும் பகுதி இது. எங்கு திரும்பினும் பச்சைப் பசேல் தான். கடல் மட்டத்தில் இருந்து 700 முதல் 2100 மீட்டர் உயரத்தில் அமைந்த பகுதி இது. இயற்கை அன்னை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க பகுதி.

வயநாடு மாவட்டத்தில் கல்பெற்றா, மானந்தவாடி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவை.

இவ்விடங்களில் விலங்குகளின் சரணாலயங்கள் உண்டு. துள்ளித் திரியும் மான் கூட்டம், கூட்டம் கூட்டமாய் செல்லும் யானைகள், எங்கோ கேட்கும் பறவைகள் கரையும் ஓசை என மனதுக்கு இன்பம் தரும் இடம் ஆகும்.

கல்பெற்றாவில் இருந்து சிறிது தூரம் சென்றால் செம்ப்ரா மலை முகடு உள்ளது. இது வயநாட்டின் உயரமான மலை உச்சியாகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடமாகும். கல்பெற்றாவில் இருந்து 15 கல் தொலைவில் கரலாட் ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி செய்து கொண்டு ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து நாங்கள் குழந்தைகளாகி மகிழ்ந்தோம். வயநாட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும் அருவிகள் பல உண்டு. அவற்றுள் சிப்பாரா அருவி மிகப் புகழ் பெற்றது.

100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராகக் கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள் கண்களையும், கருத்தையும கொள்ளை கொள்கின்றன. அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழ்ந்து புத்துணர்வு பெற்றோம். இங்கு அபூர்வ மூலிகைகள், தங்குவதற்கு மரவீடுகள், இரவில் மிரளச் செய்யும் விலங்குகள் கூட்டம் என நம்மை இன்னொரு உலகுக்கு அழைத்துச் செல்லும். நீங்களும் ஒரு முறை சென்று வரலாமே.

“இயற்கை ஆட்சி செய்யும் இவ்விடம் அனைவருக்கும் பிடிக்கும்”.

No comments:

Post a Comment