செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 18 January 2023

வகுப்பு 7. இயல்1. பருவம் 3 கட்டுரை

 பின்வரும் தலைப்பில் கட்டுரை எழுதுக

என்னைக் கவர்ந்த நூல்

என்னைக் கவர்ந்த நூல் – திருக்குறள் :
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி’ என்பது முன்னோர் வாக்கு. உலகின் மிகத் தொன்மையான தமிழ்மொழி பண்டைக் காலத்திலிருந்து தற்காலம் வரை நமக்கு பல நூல்களைத் தந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் இன்றளவும் உலக மக்களால் போற்றப்படும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


உலகப்பொதுமறை :
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை செம்மையுற நமக்குக் கூறும் திருக்குறள் குறிப்பிட்ட ஒரு நாட்டினருக்கோ , மொழியினருக்கோ மட்டும் உரித்தன்று. உலகம் முழுவதிற்கும் சொந்தமானது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறள் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கும் இங்கு வந்து தமிழ் கற்று திருக்குறளைப் படித்து, பின் தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.

அறங்கள் கூறும் திருக்குறள் :
திருக்குறளில் மனிதனுக்குச் சொல்லாத அறங்களே கிடையாது. சாதாரண மனிதன் முதல் மன்னன் வரை அனைவருக்கும் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொதுவானவை; எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. திருவள்ளுவர் சாதாரணக் குடிமகனாக வாழ்ந்தவர்தான். ஆனால் அரசன், துறவி, குடும்பத்தலைவன் என்று அனைவருக்கும் வாழ்வியல் நெறிகளைக் கூறியுள்ளார். திருக்குறளைப் படிக்க படிக்க இன்பமும் பண்பும் வளரும்.


முடிவுரை :

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதி புகழ்ந்துள்ளார். ஏழே சீர்களில் உலக நீதியைச் சொல்லும் திருக்குறளே நான் இன்றும் என்றும் விரும்பும் நூலாகும்.

No comments:

Post a Comment