நெடுவினா

1

எங்கள் ஊர் சந்தை என்னும் தலைப்பில் நாளிதழ் செய்தி ஒன்றை எழுதுக.
Answer:

நாளிதழ் செய்தி

மானூர் சந்தையின் புகழ்:
ஜூன் 16 – நம் மக்களின் வணிக முறைகளில் ஒன்று சந்தை, தினசரி சந்தை, வாரச் சந்தை என இரண்டு உண்டு. எங்கள் ஊரில் வாரச் சந்தைதான் வாரத்தில் ஒரு நாள் (சனிக்கிழமை) மட்டும் கூடும். எங்கள் ஊர் சந்தையில் எம் கிராமத்திலும், பக்கத்து கிராமங்களிலும் விளையும் காய்கறி, கீரை, தானிய வகைகள் விற்பனைக்கு வரும். பக்கத்து மலைப்பகுதியில் இருந்து மிளகு, மல்லி, சீரகம் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

காய்கறிகள், தானியவகைகள், மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் ஈயம், மண், இரும்பு பாத்திரங்கள் தோட்ட வேலை செய்வதற்கு உரிய களைக்கொத்தி, மண்வெட்டி, மேலும் துணி மணி வகைகள் என அனைத்தும் எம் ஊர் சந்தையில் வாங்கலாம்.

நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு நேர்மையான விலையில் அனைத்தும் கிடைக்கும். என் தாத்தா சிறு வயதில் சந்தைக்குச் செல்லும் பொழுது திருவிழாவிற்குப் போவது போல் மகிழ்ச்சியாய்ச் செல்வாராம். ஏனெனில் அக்காலத்தில் கழைக்கூத்து, பொம்மலாட்டம் கூட சந்தைவெளியில் உண்டாம்.

எங்கள் ஊர்சந்தையிலே ஆடு, மாடு வாங்குவதை நினைச்சாலே வேடிக்கையா இருக்கும். துண்டைப் போட்டு கைகளை மறைச்சு விலைபேசுவது ஒரு பக்கம், பல், வால், கொம்பைப் பார்த்து விலை பேசுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாள்வர் சந்தை விற்கும் வாங்கும் வணிகத்தளம் மட்டுமல்ல, உறவுகளுக்கு உயிரூட்டும் இடமாகவும் இருக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.5 சந்தை

வாங்க! வாங்க! என கல்யாண வீடு போல வரவேற்று நலம் விசாரித்த பின்புதான் வியாபாரம் தொடங்கும்.

எம் ஊர் சந்தையில் வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு என்பது வெறுமனே பொருளை விற்று வாங்கும் உறவாக மட்டும் இருப்பதல்ல. சந்தையில் பழகியவர்கள் சம்பந்தியான கதைகளும் உண்டு.

சந்தையின் சாதாரண விசாரிப்புகளிலும் நேசம் உண்டு. நேர்மை உண்டு.

நீங்களும் ஒருமுறை எங்கள் சந்தைக்கு வந்துதான் பாருங்களேன்.