செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 7 December 2022

வகுப்பு. 7. எங்கள் ஊர் கட்டுரை

 எங்கள் ஊர்

(முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை )

முன்னுரை :
எங்கள் ஊர் காஞ்சிபுரம். இது இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்றாகும். பல்லவர்களின் தலைநகர் என்ற பெருமைக்குரிய ஊராகும்.

அமைவிடம் :
காஞ்சிபுரம், தமிழ்நாட்டு மாவட்டங்களில் சிறப்புப் பெற்ற மாவட்டமாகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.

பெயர்க் காரணம் :
இங்குக் காஞ்சி மரங்கள் நிறைந்திருந்ததால் காஞ்சியூர் என்றழைக்கப்பட்டுப் பிறகு காஞ்சிபுரம் எனக் காலப்போக்கில் மாறியிருக்கலாம். கா என்றால் பிரம்மன். அஞ்சித்தல் என்றால் பூசித்தல், புரம் என்றால் நகரம் என்பது பொருள். பிரம்மன் பூசித்த நகரம் ஆதலால் காஞ்சிபுரம் ஆயிற்று என்று பலவாறு பெயர்க்காரணங்கள் கூறப்படுகின்றன.


தொழில்கள் :
காஞ்சிபுரம் கோயில் நகரம் என்றும், பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு முதன்மைத் தொழிலாகப் பட்டு நெசவு நடைபெறுகிறது. காஞ்சிப்பட்டு உலகப் புகழ் பெற்றதாகும். பரம்பரை பரம்பரையாகப் பட்டுப்புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள். வேளாண்மையில் நெல், கரும்பு, நிலக்கடலை, பயறு வகைகள் நவதானியங்கள் பயிரிடப்படுகின்றன.

சிறப்புமிகு இடங்கள் :
காஞ்சிபுரம் முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாகும். இங்குப் பல கோயில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் மிகவும் முக்கியமானவை.

திருவிழாக்கள் :
காஞ்சிபுரத்தில் திருவிழா நடைபெறாத நாட்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நாள்தோறும் விழாக்கள் நடைபெறும். வரதராஜர் கோயிலில் வைகாசி மாதம் கருடர் சேவை மற்றும் தேர்த் திருவிழா நடைபெறும். ஏகாம்பரநாதர் கோயிலில் பிரம்மோற்சவம் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவாகவும் ஏலவார் குழலி அம்மன் திருமணமும் நடைபெறும். பிரம்மோற்சவம் நடைபெறும். இன்னும் பல விழாக்களும் நடைபெறும். அத்திவரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு நாற்பத்தெட்டு நாள்கள் காட்சியளிப்பார்.

மக்கள் ஒற்றுமை :
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுபட்டு 2 வாழ்கின்றனர். ஏற்றத்தாழ்வின்றியும் பூசலின்றியும் வாழ்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுகின்றனர்.


முடிவுரை :
எங்கள் கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து இங்குள்ள கடவுளர்களை வழிபட்டு நன்மையடையுங்கள்.


Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.5 தொழிற்பெயர்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள் …

1. நம் நாட்டுத் தொன்மைக் கலைகளை மதிப்பேன்.
2. கலைகளில் ஒன்றையேனும் கற்றுக் 

No comments:

Post a Comment