வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:
ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும் அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்த து.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய் விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும்முன் விழும்வேகத்தில் அருகிருந்த பாக்கு மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை, பலாச்சுளைகளோடு, வாழைப்பழங்களையும் உதிரச்செய்கிறது. இவ்வாறு ஏமாங்கத நாட்டை போலவே எம் ஊரும் முக்கனி வளமும், தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் நிறைந்தனவாய்க் காணப்படுகின்றது.

மண்வீசும் வயல்வளம்:
ஏமாங்கத நாட்டைப்போலவே, நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில் அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. அவ்வொலியால் அந்நீர்நிலையில் உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன. இவ்வாறு எருமைகளும், எருதுகளும், நீரைக் கலக்குவதாலும், சேறுமணமும், நீந்தும் மீன் மணமும் கலந்த வயல்பகுதிகளில் வெள்ளமென உழவர்கள் உழுதிருந்தனர்.

இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்:
கருக்கொண்ட பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள்.

அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன், தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

ஆயிரம் விழாக்கள்:
வளம்மிக்க எம் ஊரில் ஆயிரம் வகையான உணவு உண்டு. பசியுடன் நாடி வருவோருக்கு உணவு வழங்கும் அறச்சாலைகள் ஆயிரம் உண்டு. மகளிர் ஒப்பனை செய்துகொள்ளும் மணிமாடங்கள் ஆயிரம் உண்டு. சோம்பல் இன்றி தொழில் புரியும் கம்மியர்களும் ஆயிரக்கணக்கானோர் உண்டு. அதனால் திருமணங்களும், விழாக்களும் ஆயிரமாயிரமாய் நடைபெறுகின்றன.

முடிவுரை:
இவ்வாறு ஏமாங்கத நாட்டின் வளம் போலவே, வளமும்;, சிறப்பும் கொண்டனவாய் எம் ஊரும் உள்ளது என்பதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன்.