செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday, 19 November 2025

வகுப்பு - 7 - இயல் 2 கூடுதல் மீட்டறி வினாக்கள்

1➤ ஒவ்வொரு எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்குரிய கால அளவு.........
=> மாத்திரை
,
2➤ தமக்குரிய கால அளவை விட குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள்....... எனப்படும்
=> குறுக்கங்கள்
,
3➤ குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
=> 4
ஐகாரக்குறுக்கம் 2.ஔகாரக் குறுக்கம் 3.மகர குறுக்கம் 4. ஆய்தக் குறுக்கம்
,
4➤ இரண்டு மாத்திரையில் இருந்து குறுகி ஒலிக்கும் ஐகாரம் ..... எனப்படும்
=> ஐகார குறுக்கம்
,
5➤ ஐகாரக் குறுக்கம் எங்கு எங்கு குறுகும் ?
=> மொழிக்கு முதலில் ,இடையில் ,கடையில்
மொழிக்கு முதலில் 1 1/2 மாத்திரை, இடையிலும் கடையிலும் 1 மாத்திரை
,
6➤ ஒள என்னும் எழுத்து மொழிக்கு முதலில் வரும் போது எத்தனை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்?
=> 11/2 மாத்திரையாக
எ.கா. வெளவால், ஒளவையார் (குறிப்பு மொழிக்கு இடையிலும் கடையிலும் வராது)
,
7➤ ஆயுத எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது
=> ஆய்தக் குறுக்கம் எனப்படும்.
எ.கா முள் + தீது = முஃடீது , கல்+தீது = கஃ றீது. , குறிப்பு :
,
8➤ வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரையின் அளவு .......
=> ஒரு மாத்திரை
,
9➤ சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறும் குறுக்கம் ....
=> ஔகாரக் குறுக்கம்
,
10➤ மகரக் குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டு......
=> போலும் - போனம், மருளும் - மருணம்
,
11➤ சமையல் - என்ற சொல்லில் காணப்படும் குறுக்கம்.
=> ஐகாரக் குறுக்கம்
மொழிக்கு இடையில்
,
12➤ மகரம் எங்கு எங்கு குறுகும் ?
=> 1 ன், ண் என்ற மெய்யெழுத்திற்குப் பின் மகரம் வந்தால் 2. மகரத்தைத் தொடர்ந்து வ் - என்ற மெய் வந்தால் குறுகும்.குறுகும். 2 -
எதா 1 . போனம், மருணம் எகா 2. வரும் + வண்டி
,
13➤ எழுத்திலும் பேச்சிலும் சொற்களை பயன்படுத்தும் முறை...... எனப்படும்
=> வழக்கு
,
14➤ வழக்கு எத்தனை வகைப்படும்?
=> இரண்டு வகைப்படும்
1. இயல்பு வழக்கு 2. தகுதி வழக்கு
,
15➤ இயல்பு வழக்கு என்றால் என்ன ?
=> ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் கூப்பிடுவது
,
16➤ இயல்பு வழக்கின் வகைகள் எத்தனை ? அவை யாவை?
=> மூன்று வகைப்படும்
1. இலக்கணம் உடையது 2 இலக்கணப் போலி 3.ம௹ உ
,
17➤ இலக்கணம் உடையது என்றால் என்ன ?
=> இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணம் உடையது எனப்படும்
எடுத்துக்காட்டு : நிலம், மரம், அருவி .......
,
18➤ இலக்கணப் போலி என்றால் என்ன ?
=> இலக்கண முறைப்படி அமையாவிடினும் இலக்கணம் உடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப் போலி எனப்படும்
புறநகர் - நகர்ப்புறம் தசை - சதை
,
19➤ இலக்கணப் போலி எவற்றைக் குறிக்கும் ....
=> சொற்களின் முன் பின் மாறி வருவதை
தசை -> சதை கால்வாய் - வாய்க்கால்
,
20➤ மரூஉ - என்றால் என்ன ?
=> இலக்கண நெறியில் இருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள் ..... எனப்படும்
மரூஉ எனப்படும்
,
21➤ ம௹ உ - சொற்களுக்கு எடுத்துக்காட்டுத் தருக.
=> தஞ்சாவூர் - தஞ்சை , கும்பகோணம் - குடந்தை
,
22➤ தகுதி வழக்கு என்றால் என்ன ?
=> ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு எனப்படும்
,
23➤ தகுதி வழக்கின் வகைகள் யாவை?
=> மூன்று வகைப்படும்.
இடக்கரடக்கல் 2 மங்கலம் 3. குழூஉக்குறி
,
24➤ இடக்கரடக்கல் என்றால் என்ன ?
=> பிறரிடம் வெளிப்படையாகச் யார்கிட்ட இருக்கு சொல்லத் தகாத சொற்களைத் தகுதி உடைய வேறு சொற்களால் கூறுவது.
எ.கா . மலம் கழுவினான் - என்பதை கால் கழுவினான் எனக் குறிப்பிடுவது.
,
25➤ மங்கலம் என்றால் என்ன ?
=> மங்கலம் இல்லாத சொற்களைக் மங்கலமான வேறு சொற்களால் குறிப்பிடுவது.
எ.கா செத்தார் - என்பதை துஞ்சினார் என்பது
,
26➤ குழூஉக் குறி என்றால் என்ன ?
=> ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் குழு உக் குறி எனப்படும்
,
27➤ குழு உக் குறிக்கு எடுத்துக்காட்டு
=> பொன்னைப் பறி என்றல்
,
28➤ போலி என்றால் என்ன ?
=> சொல்லின் முதலிலோ இடையிலோ கடையிலோ இறுதியாக இருக்கவேண்டிய ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருளைத் தருவது போலி எனப்படும்
,
29➤ போலி எத்தனை வகைப்படும் ?
=> மூன்று வகைப்படும்
முதற்போலி 2 இடைப்போலி 3. கடைப் போலி
,
30➤ முதற் போலி என்றால் என்ன ?
=> .சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஒர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலி ஆகும்
எகா பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு
,
31➤ இடைப்போலி என்றால் என்ன ?
=> சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு சொல் அமைந்து அதே பொருளைத் தருவது.
எ.கா . அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி
,
32➤ கடைப் போலி என்றால் என்ன ?
=> செல்லில் இறுதியில் இருக்க வேண்டிய இடத்திற்கு பதிலாக வேறு ஒரு சொல் இருந்து அதே பொருளைத் . தருவது கடைப்பொருள் எனப்படும்
அகம் - அகன் எனவும் நிலம் - நிலன் எனவும் மாற்றிக் கூறுவது
,
33➤ ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்து வேறுபட்டாலும் குரல் மாறாமல் இருப்பது ........எனப்படும்
=> முற்றுப்போலி எனப்படும்
எ.கா ஐந்து - என்பது அஞ்சு என மாறி ஒலிப்பது
,
34➤ முதற்போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக
=> பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு மயல் - மையல் தயல் - தையல் நண்டு - ஞண்டு நமன் - ஞமன்
,
35➤ இடைப் போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக
=> அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி அரயர் - அரையர் தலமை - தலைமை கிழமை - கிழைமை பழமை - பழைமை
,
36➤ கடைப்போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
=> அகம் - அகன் நிலம் - நிலன் முகம், - முகன் பந்தல் - பந்தர் கலம் - கலன் . புலம் - புலன் குடல் - குடர்
,
37➤ வாய்மை எனப்படுவது ......
=> தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
,
38➤ ........ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்
=> பொறாமை உள்ளவன்
,
39➤ உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார் ?
=> பொய் இல்லாமல் வாழ்பவன்
,
40➤ அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி... இப்பாடலில் குறிப்பிடப்படும் இலக்கிய நூல் எது ?
=> திருக்குறள்
,
41➤ சிறந்த அரசின் செயலாக வள்ளுவர் எத்தனை செயல்களைக் குறிப்பிடுகிறார்?
=> நான்கு செயல்கள்
1.பொருள் வரும் வழிகளை அறிதல் 2-சேர்த்தல் 3.பாதுகாத்தல் 4.பிரித்து செலவு செய்தல்
,
42➤ செந்நாப் போதா என்று குறிப்பிடப்படுபவர்
=> திருவள்ளுவர்
,
43➤ அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
=> 38
,
44➤ பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?
=> 70
,
45➤ இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?
=> 25
,
46➤ சான்றோர்கள் ஆராயப்படுபவை என வள்ளுவர் குறிப்பிடுவது
=> பொறாமை கொண்டவர்களுடைய செல்வமும் பொறாமை இல்லாதவருடைய வறுமையும்
,
47➤ திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
=> முப்பால் |தெய்வ நூல்,பொய்யாமொழி
,
48➤ யாருடைய வாழ்வில் துன்பமில்லை என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
=> தன்னுடைய குற்றத்தை காண்பவருடைய வாழ்வில் துன்பமில்லை
,
49➤ வாய்மை எனப்படுவது .....
=> ஒருபோதும் தீங்கு தராத சொற்கள்
,
50➤ அழுக்காறு என்ற சொல்லின் பொருள் ..........
=> பொறாமை இல்லாத

வகுப்பு 7- இயல் 2. மீட்டறி வினாக்கள்

1➤ குறில் எழுத்துக்கான சாரியை
=> கரம்
அகரம், இகரம், உகரம்
,
2➤ நெடில் எழுத்துக்கான சாரியை
=> கான்
ஐகான், ஒளகான்
,
3➤ குறில், நெடில் எழுத்துகளின் சாரியை
=> காரம்
மகாரம், ஏகாரம், ஐகாரம்
,
4➤ ஆய்த எழுத்துகளின் சாரியை
=> கேனம்
அஃகேனம்
,
5➤ ஒன்று - எண்ணுப் பெயரின் மாத்திரை
=> 1 + 1/2 + 1/2 = 2
று என்பது குற்றியலுகரம் எனவே 1/2 மாத்திரை நினைவில் கொள்க
,
6➤ குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும் ?
=> 2 இடங்களில் வரும். (நாடு + யாது = நாடியாது, கொக்கு + யாது = கொக்கியது.
கொக்கு + யாது = கொக்கியது. அதாவது நிலை மொழியின் இறுதி எழுத்து உகரமாக இருந்து வருமொழியின் முதல் எழுத்து யா வில் இருந்தால் உகரம் இகரமாக மாறும்.
,
7➤ எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
=> இரண்டு வகைப்படும். 1.முதல் எழுத்து 2.சார்பெழுத்து
,
8➤ முதல் எழுத்துக்கள் எனப்படுபவை யாவை?
=> உயிர் 12, மெய் 18 ஆக 30
,
9➤ தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் எழுத்துச் சாரிகைகள் யாவை?
=> எழுத்துசாரிகைகள் 4. ( கரம், கான், காரம், கேனம்)
,
10➤ தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்........
=> நெடில் தொடர்க் குற்றியலுகரம்
எ.கா... பாகு, மாசு, பாடு, காது, ஆறு
,
11➤ ஆயுத எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்......
=> ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
எங்கு, அஃது , இஃது
,
12➤ தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்.......
=> உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எ.கா அரசு, கயிறு , ஒன்பது, வரலாறு
,
13➤ சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
=> 10
,
14➤ ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும் குற்றியலுகரம்
=> முற்றியலுகரம் எனப்படும்.
எகா. பசு, விடு, அது
,
15➤ திணை எத்தனை வகைப்படும்?
=> 2 வகைப்படும்
உயர்திணை , அஃறிணை
,
16➤ தொகைச் சொற்களை விரித்து எழுது? முக்கனி
=> மா, பலா, வாழை
,
17➤ காட்டுப் பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
=> கார்த்திகை விளக்குகளை
,
18➤ காடு என்ற நூலை எழுதியவர்
=> சுரதா
,
19➤ காட்டை இயற்கை விடுதி எனக் கூறியவர் யார்?
=> கவிஞர் சுரதா
,
20➤ நச்சரவம் - என்ற சொல் குறிக்கும் பொருள்
=> விடமுள்ள பாம்பு. (விசமுள்ள)
,
21➤ கிளிக்கண்ணி என்றால் என்ன?
=> கிளியே என்ற சொல்லை முன்னிலைப்படுத்தி,இரண்டு இரண்டு அடிகள் அடிகளாக பாடப்படுவது
,
22➤ சுரதாவின் இயற்பெயர் .......
=> இராசகோபாலன்
,
23➤ சுரதா என்பதன் விரிவாக்கம் ......
=> சுப்புரத்தினதாசன்
,
24➤ சுரதா என்ற பெயரில் சுப்புரத்தினம் என்பது யாரைக் குறிக்கும் ?
=> பாரதிதாசனாரை. (பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு இரத்தினம்)
,
25➤ கவிஞர் சுரதாவின் படைப்புகள் யாவை?
=> அமுதம் தேனும் , தேன்மழை, துறைமுகம்
,
26➤ உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
=> கவிஞர் சுரதா
(கவிதைகளில் உவமையை அதிகம் பயன்படுத்துவதால்)
,
27➤ ஒரு நாட்டின் வளம் இதனைப் பொறுத்து அளவிடப்படுகிறது?
=> மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொறுத்து
,
28➤ காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் .....
=> கா, அடவி வனம் அரண் கானகம்
,
29➤ அப்படியே நிற்கட்டும் அந்த மரம் - எழுதியவர்
=> ராஜ மார்த்தாண்டன்
,
30➤ நாவல் பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
=> கோலிக்குண்டு
,
31➤ கொல்லிப் பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் ......
=> ராஜ் மார்த்தாண்டன்
,
32➤ கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் தமிழ் கவிதைகளைத் தொகுத்தவர்
=> ராஜ மார்த்தாண்டன்
,
33➤ நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடமே மரங்கள் எனக் குறிப்பிட்டவர் ?
=> ராஜமார்த்தாண்டன்
,
34➤ தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்......
=> முண்டந்துறை
,
35➤ காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு எது ?
=> புலி
,
36➤ பண்புள்ள விலங்கு என்று அழைக்கப்படுவது .......
=> புலி
,
37➤ முண்டந்துறை புலிகள் காப்பகம் ......... சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது
=> 895
,
38➤ தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப் பெரிய புலிகள் காப்பகம்
=> முண்டந்துறை புலிகள் காப்பகம்
,
39➤ தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்........
=> மேட்டுப்பாளையம்
,
40➤ ஆசியச் சிங்கங்கள் ...... சரணாலயத்தில் மட்டுமே உள்ளன.
=> கிர்
,
41➤ ஆண் யானை பெண் யானை இரண்டுக்குமே கொம்பு உண்டு
=> ஆப்பிரிக்கா யானைக்கு
,
42➤ காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறும் விலங்கு எது ?
=> புலி
,
43➤ பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் மிகப்பெரிய தீவில் காட்டை உருவாக்கியவர் யார்?
=> ஜாதவ் பயேங்
அஸ்ஸாம் மாநிலம், ஜோர் விராட் மாவட்டம்
,
44➤ இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர் ......
=> ஜாதவ் பயேங்
,
45➤ ஜாதவ் பயேங்கிற்கு ஆலோசனை கூறிய வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்
=> ஜாதுநாத்
,
46➤ ஜாதவுக்கு இந்திய வனமகன் பட்டத்தை வழங்கியது யார் ?
=> ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம்
,
47➤ ஜாதவ் விற்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு
=> 2015
,
48➤ ஜாதவ்விற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் ......
=> கெளகாத்தி பல்கலைக்கழகம்
,
49➤ மண்ணின் தன்மையை மாற்ற உதவுபவை.... ......
=> மண் புழுக்கள் சிவப்பு கட்டெறும்புகள்
,
50➤ ஜாதவ் பயேங்கை பாராட்டிய வன அலுவலர் .........
=> ஜிட்டு கலிட்டா

Tuesday, 18 November 2025

வகுப்பு 7. இயல் 1 வினா விடைகள் - மீட்டறி வினா - விடை வடிவில்

1➤ நெறி என்று சொல்லின் பொருள்
=> வழி
,
2➤ எங்கள் தமிழ் - நூலை எழுதியவர்
=> நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
,
3➤ ஒன்றல்ல இரண்டல்ல - நூலை எழுதியவர்
=> உடுமலை நாராயணகவி
,
4➤ பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
=> பரணி
,
5➤ வானில் ........கூட்டம் திரண்டால் மழை பொழியும்
=> முகில்
,
6➤ ஒன்றல்ல இரண்டல்ல - பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் ...... ........
=> வள்ளல் வேள்பாரி, குமண வள்ளல்
முல்லைக்கு தேர்ந்த பாரி, புலவரின் சொல்லுக்காக தன் தலையைத் தந்த குமண வள்ளல்
,
7➤ தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவது
=> 1 பரணி 2. பரிபாடல், கலம்பக நூல்கள் எட்டுத்தொகை, 3.திருக்குறள் 4.சங்க இலக்கியங்கள்
,
8➤ வெள்ளை மயிர் பிடரி குதிரைகளை எல்லாம் புலவர்களுக்குத் தந்தவன்
=> காரி மன்னன். - சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
,
9➤ பகுத்தறிவு கவிராயர் எனப் புகழப்படுபவர் ........
=> உடுமலை நாராயணகவி
,
10➤ வான் புகழ் கொண்ட நூல் -----என அழைக்கப்படுவது
=> திருக்குறள்
,
11➤ அகம் ,புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்டது
=> சங்க இலக்கியங்கள்
,
12➤ தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர் .......
=> உடுமலை நாராயணகவி
,
13➤ முல்லைக்குத் தேர் ஈந்தவர் .....
=> வள்ளல் வேள் பாரி
,
14➤ நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் .....
=> உடுமலை நாராயணகவி
,
15➤ அற்புதம் என்ற சொல்லின் பொருள் ......
=> வியப்பு
,
16➤ புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன்
=> குமண வள்ளல்
,
17➤ கடையேழு வள்ளல்கள் எத்தனை பேர்?
=> 7
பேகன், பாரி, காரி, ஆய் அண்டிறன், அதியமான், நள்ளி, ஓரி,
,
18➤ மயிலுக்குப் போர்வை தந்தவன்.......
=> பேகன்
ஆவியர் குடியின் தலைவன், பழனி மலையைச் சுற்றி ஆட்சி புரிந்தவன்
,
19➤ பாரி மன்னன் - சிறு குறிப்பு
=> பறம்பு மலையை ஆண்டவன் , கபிலரின் நண்பன், ஒளவையை ஆதரித்தவன்,
நாகமலையில் உள்ள முல்லைக்குத் தேர் ஈந்தவன்
,
20➤ காரி மன்னன் - சிறு குறிப்பு தருக
=> 1. வாள் வீச்சில் பகைவர்களை வெல்பவன் 2. வெள்ளை மயிர் பிடரி குதிரைகளை புலவர்களுக்கு வழங்கியவன்.
சிறுபாணாற்றுப்படை -நல்லூர் நத்தத்தனாரால் சிறப்பிக்கப்படுகிறது -
,
21➤ ஆய் அண்டிறன் - சிறு குறிப்பு தருக
=> 1. பொதிய மலைப்பகுதியை ஆண்டவன். 2. கையில் வில்லும் அம்பும் கொண்டு திரிபவன் 3. நாகத்தின் உடையை புலவர்களுக்குக் கொடுத்தவன்.
,
22➤ "தென் தோள் ஆய நன்மொழி ஆய்" எனப் புகழப்பெற்றவன்
=> ஆய் அண்டிறன்
,
23➤ நெல்லிக்கனியை அவ்வையாருக்கு வழங்கிய மன்னன் .....
=> அதியமான்
,
24➤ அதியமான் சிறுகுறிப்பு தருக
=> 1. தகடூரை ஆண்டவன் 2.வேல் வீச்சில் வல்லவன் 3அவ்வையாரை நண்பராகக் கொண்டவன்
,
25➤ மக்களுக்கும் புலவர்களுக்கும் வேண்டிய பொருளைக் கொடுத்தவன் ........
=> நள்ளி
,
26➤ நள்ளி மன்னன் -சிறு குறிப்பு தருக
=> நெடுங்கோடு மலைமுகட்டை ஆட்சி செய்தவன். 2.ஊட்டி மக்களின் தலைவன்
,
27➤ மலைமான் திருமுடிக்காரியை வென்றவன் யார் ?
=> வல்வில் ஓரி
வென்ற குறும்பறை நாட்டை பாணர்களுக்கு தந்தவன். (சிறுபாணாற்றுப்படை)
,
28➤ குமண வள்ளல் எந்தப் புலவர்க்கு தன் தலையைப் பரிசாகத் தர முன்வந்தான்
=> பெருஞ்சித்திரனார் என்னும் புலவர்க்கு
,
29➤ மொழியின் முதல் நிலை..... மற்றும் ......
=> பேசுதல், கேட்டல்
,
30➤ ஒலியின் வரி வடிவம் ..... ஆகும்
=> எழுத்து
,
31➤ பேச்சு மொழியை ..... வழக்கு என்றும் கூறுவர்.
=> உலக
,
32➤ ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் ....... எனப்படும்
=> வட்டார மொழி
,
33➤ பேச்சு மொழி ....... வழக்கு
=> உலக
,
34➤ எழுத்து மொழி........ வழக்கு
=> இலக்கிய
,
35➤ கிளை மொழிகள் உருவாகக் காரணம் .........
=> வாழும் இடத்தின் இட அமைப்பு, இயற்கைத் தடைகள், மக்களின் தொடர்பு குறைதல்
,
36➤ இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு காரணம் .....
=> எழுத்து வடிவம்
,
37➤ ஒரு மொழி உயிரோடு வாழ்வதற்கு .......தேவைப்படுகிறது.
=> பேச்சு மொழி
,
38➤ வேறு வகை மொழி நிலைகள் பற்றி கூறியவர் யார் ?
=> மு. வரதராஜனார்
,
39➤ இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?
=> பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது இரட்டை வழக்கு மொழி எனப்படும்.
,
40➤ தமிழ் இரட்டை மொழி வழக்கு காரணம் ......
=> பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு உண்டு.
,
41➤ சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வருபவை ......
=> சொலவடைகள்
,
42➤ ....... உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது
=> அணை
,
43➤ விளைச்சலுக்கும் .......க்கும் சென்மப் பகை
=> வெள்ளாடு
,
44➤ ஆயிரம் ............நெல்லுக்கு ஒரு அந்து பூச்சி போதும்.
=> கலம்
,
45➤ குற்றியலுகரம் - பிரித்து எழுதுக
=> குறுமை + இயல் + உகரம்
,
46➤ குற்றியலிகரம் - பிரித்து எழுதுக
=> குறுமை + இயல் + இகரம்
,
47➤ தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் .......
=> குற்றியலுகரம்
ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக
,
48➤ தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம்
=> குற்றியலிகரம்
,
49➤ குற்றியலுகரம் ....... வகைப்படும்
=> ஆறு
,
50➤ குறில் எழுத்துக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் எழுத்துச் சாரியை ------ ஆகும்
=> கரம்

வகுப்பு 9 - இயல் 1,2 இலக்கண வினா விடைகள் .. மீட்டறி வினா - விடை

1➤ சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
=> 10
,
2➤ அளபெடுத்தல் என்பது ........ எனப்படும்
=> நீண்டு ஒலித்தல்
,
3➤ உயிரளபெடை எத்தனை வகைப்படும் ?
=> மூன்று
,
4➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட் எழுத்துக்கள் அளபெடுப்பது
=> செய்யுளிசை அளபெடை எனப்படும்.
,
5➤ செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயர் ........
=> இசைநிறை அளபெடை
,
6➤ ஓஒதல் , உறாஅர்க்கு, படாஅ .... பயின்று வரும் அளபெடை
=> செய்யுளிசை அளபெடை
,
7➤ செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளவெடுப்பது
=> இன்னிசை அளபெடையாகும்.
,
8➤ இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு?
=> கெடுப்பதூஉம் , எடுப்பதூஉம்
,
9➤ செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாக திரிந்து அளவெடுப்பது
=> சொல்லிசை அளபெடை
,
10➤ சொல்லிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு .........
=> உரனசை இ, வரனசை இ
,
11➤ நசை - என்ற சொல்லின் பொருள்
=> விருப்பம்
,
12➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய ஒற்றெழுத்துக்கள் அளவு எடுப்பது
=> ஒற்றளபெடை எனப்படும்
,
13➤ ஒற்றளபெடைக்கு எடுத்துக்காட்டு
=> எங்ங்கிறைவன், எஃஃ கிலங்கிய
,
14➤ ஓர் எழுத்து தனித்தோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து வந்து பொருளை உணர்த்துமானால் அது ........ எனப்படும்
=> சொல்
,
15➤ சொல்லின் வேறு பெயர்கள்
=> பதம், மொழி ,கிளவி
,
16➤ பதம் எத்தனை வகைப்படும்?
=> இரண்டு வகைப்படும். (பகு, பகா)
,
17➤ பிரித்தால் பொருள் தராத சொல் .......
=> பகாப்பதம் எனப்படும் ( மரம், உண், பிற , சால)
,
18➤ பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ..........
=> பகுபதம்
,
19➤ பகுபதம் எத்தனை வகைப்படும்?
=> 2 வகைப்படும். (பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம்)
,
20➤ பெயர் பகுபதத்திற்கு எடுத்துக்காட்டு....
=> வேலன் (வேல்+ அன் )
,
21➤ வினைப் பகுபதத்திற்கு எடுத்துக்காட்டு?
=> செய்தான்.. (செய் + த் + ஆன்)
,
22➤ பகுபத உறுப்புக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
=> 6வகைப்படும். (பகுதி, விகுதி ,இடைநிலை, சந்தி,சாரியை ,விகாரம்
,
23➤ பகுதியை .....என்றும் அழைப்பர்
=> முதனிலை, (வினைச்சொல்லில் ஏவலாக அமையும்)
,
24➤ விகுதி என்பது சொல்லின் .........நிற்கும்
=> இறுதியில் (கடைநிலை) ( திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும்)
,
25➤ பெயரெச்ச விகுதிகள் எது ?
=> அ, உம்
,
26➤ வினையெச்ச விகுதிகள் எது ?
=> உ , இ
,
27➤ வியங்கோள் வினைமுற்று விகுதி எது ?
=> க, இய, இயர்
,
28➤ தொழிற்பெயர் விகுதி எது ?
=> தல், அல், ஐ, கை, சி, பு
,
29➤ பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது ........
=> இடைநிலை ( காலம் காட்டும் இடைநிலை என்று அழைப்பர்)
,
30➤ நிகழ்கால இடைநிலைகள் யாவை?
=> கிறு, கின்று, ஆநின்று
,
31➤ இறந்த கால இடைநிலைகள் யாவை?
=> ர், ட், ற், இன்
,
32➤ எதிர்கால இடைநிலைகள் யாவை?
=> ப், வ்
,
33➤ எதிர்மறை இடைநிலைகள் யாவை ?
=> இல், அல், ஆ
,
34➤ பெயர் இடைநிலைகள் யாவை?
=> ஞ் , ந், வ், ச், த் .
,
35➤ பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது
=> சந்தி
,
36➤ இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது ......
=> சாரியை
,
37➤ உடம்படுமெய் ......
=> ய், வ்
,
38➤ பகுபத உறுப்புகளில் பகுதியிலும் சந்தியிலும் ஏற்படும் வடிவ மாற்றமே.......
=> விகாரம் (இது தனி உறுப்பு அன்று)
,
39➤ பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து ....... ஆகும்
=> எழுத்துப் பேறு எனப்படும்
,
40➤ எழுத்துப்பேறில் பெரும்பாலும் வரும் எழுத்து .......
=> த்
,
41➤ சாரியை இடத்தில் (த் ) வந்தால் .....
=> அது எழுத்துப்பேறு எனப்படும்
,
42➤ எழுத்துப் பேறுக்கு எடுத்துக்காட்டு......
=> செய்யாதே... ( செய் + ய் + ஆ + த் + ஏ ) த் என்பது எழுத்துப் பேறு

Monday, 17 November 2025

வகுப்பு 10 - படிப்போம்; பயன்படுத்துவோம்

1➤ vowel

=> உயிரெழுத்து

2➤ Consonant

=> மெய்யெழுத்து

3➤ Homograph

=> ஒப்பெழுத்து

4➤ monolingual

=> ஒரு மொழி

5➤ Conversation

=> உரையாடல்

6➤ Discussion

=> கலந்துரையாடல்

7➤ Storm

=> புயல்

8➤ Tornado

=> சூறாவளி

9➤ Tempest

=> வன் புயல்

10➤ Land Breeze

=> நிலக்காற்று

11➤ Sea Breeze

=> கடற்காற்று

12➤ whirlwind

=> சுழல்காற்று

13➤ Translation

=> மொழி பெயர்ப்பு

14➤ Culture

=> பண்பாடு

15➤ Human Resource

=> மனிதவளம்

16➤ Transfer

=> மாறுதல்

17➤ Multimedia

=> பல்துறை ஊடகம்

18➤ playwright

=> நாடக ஆசிரியர்

19➤ Storyteller

=> கதை சொல்லி

20➤ Screenplay

=> திரைக்கதை

21➤ AeSthetics

=> அழகியல், முருகியல்

22➤ Agreement

=> ஒப்பந்தம்

23➤ Discourse

=> சொற்பொழிவு

24➤ monarchy

=> முடியாட்சி

25➤ Border

=> எல்லை

26➤ Rebellion

=> கிளர்ச்சி

27➤ Happiness

=> மகிழ்ச்சி

28➤ Sceptor

=> செங்கோல்

29➤ Charity

=> ஈகை

30➤ Gratuity

=> பணிக்கொடை

31➤ Truth

=> வாய்மை