இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday, 17 March 2025

ஸ்டீபன் ஹாக்கிங் - சிறு வரலாறு





 வாழ்க்கை சிக்கலானது தான், அதற்கான தீர்வும் அதில்தான் உள்ளது!

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

https://thaaii.com/2025/03/14/stephen-hawking-spl-article/


உங்களுடைய ஒவ்வொரு உறுப்பும் வரிசையாக செயல் இழந்து வருகிறது என கலங்கிய கண்களுடன் மருத்துவர்கள் சொன்னபோது "அதனால் என்ன... மூளை இன்னும் செயல் இழக்கவில்லையே" என சிரித்த முகத்தோடு சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.


மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொடிய நரம்பியல் நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது ஸ்டீபன் ஹாக்கிங் பேசிய வார்த்தைகள் இவை.


ஐன்ஸ்டீனுக்கு பிறகு இவ்வுலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஒரே இயற்பியல் விஞ்ஞானி இவர் மட்டும்தான்.


'இந்த உலகம் எப்படி தோன்றியிருக்கும்?' என்ற கேள்வி சிறு வயதில் நம் எல்லோருக்கும் இயல்பாக எழுந்திருக்கும். அதற்கான விடையை நாம் தேட முயற்சித்திருக்கமாட்டோம்.


பலர் அதைத் தேடி, கடவுள் என்ற பதிலுடன் அந்தக் கேள்விக்கும் அது குறித்தான கற்பனைக்கும் முழுக்குப் போட்டிருப்போம்.


ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் இந்தக் கேள்வியை அணுகிய விதம் வேறு. அதன் விளைவாக மனதிற்குள் தட்டிய அந்த சிறு பொறி அனைத்தையும் கரைத்துக் குடித்த அறிவு பொங்கி வழியும் மூளைக்கு சொந்தக்காரராக அவரை மாற்றியது.


பொங்கி வழிந்த அந்த அறிவைப் பயன்படுத்தி அவர் எழுதிய 'A Brief History Of Time' எனும் நூல் இதுவரை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.


இவரை விட தலைசிறந்த ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் இனி தோன்றலாம். ஆனால், இனியொரு ஸ்டீபன் ஹாக்கிங் தோன்றுவதென்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.


வலுவில்லாத மெல்லிய உடல், அதில் பாதி செயல் இழந்த உறுப்புகள், வாழ்வின் முக்கால்வாசி நாட்கள் சக்கர நாற்காலியில் முடக்கம், வாய்பேச முடியாத நிலை என ஒரு மனிதனால் தாங்கக்கூடிய சோதனைகளை விட அதிகம் அனுபவித்தவர்.


இத்தனைக்கும் மத்தியிலும் அவர் செய்த கருந்துளைகள், பிக்பேங் கோட்பாடு, காலப்பயணம் குறித்தான ஆராய்ச்சிகள் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு யாரும் தொட முடியாத எல்லை.


கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் சாதாரணமாக டைப் செய்வதற்கு நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம்?


கன்னத்தில் செயல் இழந்த தசைகளுக்கு மத்தியில் இருந்த ஒரு சில செயலிழக்காத தசைகளின் அசைவுகள் மூலம் ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்து கணினி உதவியுடன் தன் கடைசிகாலம் வரை பேசி வந்திருக்கிறார் என்பது மிகவும் வியக்கத்தக்கது.


சூத்திரங்கள், சமன்பாடுகள், விதிமுறைகள் என சிக்கலான இயற்பியலுக்கு தன்னுடைய ஆராய்ச்சியால் எளிய இலக்கணம் எழுதிய ஸ்டீபன் ஹாக்கிங் வெற்றி குறித்து கூறியது... "ஆம்... வாழ்க்கை சிக்கலானது தான், அதற்கான தீர்வும் அதில்தான் உள்ளது.


ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழுங்கள். நான் சக்கர நாற்காலியில் முடங்கும்போது அனைவரும் வருத்தப்பட்டனர்.


உண்மையிலேயே அது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றுதான். நான் அவ்வாறு முடங்கியிருக்காவிட்டால் பல விஷயங்களில் கவனம் செலுத்தியிருப்பேன். நிச்சயமாக இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக ஆகியிருக்க முடியாது.


ஊனம் என்பது என் உடலுக்குத்தானேயொழிய மனதிற்கு அல்ல. முடிவுகளை எதிர்பார்த்து உழைக்காதீர்கள்.


நம்முடைய வேலை, உழைப்பது மட்டுமே. என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக தீவிரமாக உழைத்தேன்.


அதன் முடிவு வரும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன் என என்னுடைய மருத்துவர்கள் எனக்கு நாள் குறித்து வைத்திருந்தனர். ஆனாலும் உழைத்தேன்.


ஒருமுறை அப்படி உழைக்கப் பழகிவிட்டால் உங்களால் அதில் இருந்து விடுபட முடியாது. வாழ்க்கையை கொஞ்சம் நகைச்சுவைத் தன்மையோடு அணுகுங்கள்.


இன்னும் இரண்டு வருடங்களில் நீ இறந்து விடுவாய் என எந்த மனிதருக்கு மருத்துவர்கள் நாள் குறித்தார்களோ அதே மனிதன்தான் "நமக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள்தான் நேரமிருக்கிறது. வேறு கிரகத்தை தேடிக் கண்டுபிடிக்க" என நமக்கு நாள் குறித்து விட்டுச் சென்றிருக்கிறார்.


தான் நடக்க இயலாத நிலைக்கு ஆளான போதும் அதை நேர்மறையாகப் பார்த்து உலகுக்கே பயன்படும்படி வாழ்ந்தவர். அந்த நம்பிக்கையும் உழைப்பும்தான் அவரைப் பற்றி பேச வைக்கிறது, பேச வைக்கும்.


நன்றி: நக்கீரன் இதழ்


#stephen_hawking #ஸ்டீபன்_ஹாக்கிங்

Wednesday, 26 February 2025

கல்வெட்டுகள் - தமிழ் பிராமி எழுத்து

 தமிழி என்ற சொல் எங்கிருந்து வந்தது ?

முற்காலத் தமிழகத்தில் தமிழ் மொழியினை எவ்வாறு எழுதினார்கள் தெரியுமா? பனைஓலைச் சுவடி, நடுகல், பானை ஓடுகள், பறைகளின்மீது கல்வெட்டுப் பொறிப்பு, செப்பேடு ஆகிய ஊடகங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதினார்கள். ஓலைச் சுவடிகள் காலவெள்ளத்தில் அழிந்து போயின. அகழ்வாய்வுகளில் பானை ஓடுகள் கிடைத்து வருகின்றன. எழுத்துப் பொறிப்புப் பெற்ற நடுகற்கள், எழுத்துப் பொறிப்புப் பெற்ற பாறைகள், பலகைக் கற்கள், சிற்பங்கள், செப்பேடுகள் ஆகிய ஆவணங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தொல்லியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழி (தமிழ் பிராமி), தமிழ், வட்டெழுத்து ஆகிய எழுத்து (வரி) வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளனர்

.மு. எட்டாம் நூற்றாண்டு மதிக்கத்தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு

முதலில் குறிப்பிட்ட தமிழி (தமிழ் பிராமி) வரி வடிவத்தில் கல்வெட்டுகள் பண்டைக் காலத்து சமணர் குகைகள், பாளிகள், பாறைகள் ஆகிய ஊடகங்களின் மீது பொறிக்கப்பட்டன. இதுவே காலத்தால் முந்தைய தமிழ் வரிவடிவம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்கு முந்தைய வரிவடிவமாகக் தமிழ்க் குறியீடுகள் கருதப்படுகின்றன. இந்தத் தமிழ் வரி வடிவம் தமிழி மற்றும் தமிழ் பிராமி ஆகிய இரு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு பெயர்கள் உள்ளது என்றால் இருவேறு சாரார் இருக்கவேண்டும் அல்லவா?ஆமாம் ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகிறார்கள். வேறு சிலரோ தமிழ் பிராமி என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். ஏன் இந்தக் கருத்து வேறுபாடு?

மௌரியப் பேரரசன் அசோகனின் காலத்தில் பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டு வலிமை வாய்ந்த பேரரசாக மௌரியப் பேரரசு திகழ்ந்தது. அசோகப் பேரரசர் கலிங்கப் போரினால் தனக்குள் ஏற்பட்ட விரக்தியினை விட்டகலும் நோக்கில் தர்ம நெறிகளைப் பின்பற்றினார். இந்த தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அரும்பணிகளை ஆற்றினார். தன்னுடைய தர்மத்தை மக்களிடையே பரப்பும் நோக்கில் தன்னுடைய செய்தியினை பல கல்வெட்டு சாசனங்களை நாடெங்கும் பொறித்து வைத்தார். அசோகன் காலத்திய அரசியல், இம்மன்னன் கடைப்பிடித்த மத சகிப்புத்தன்மை, நிர்வாக முறைகள், விரும்பி ஏற்படுத்திய மாற்றங்கள் போன்றவற்றை இக்கல்வெட்டுச் சாசனங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இந்தச் சாசனங்கள் கண்டறியப்பட்டன. இந்தச் சாசனங்கள் பிராமி என்னும் வரி வடிவத்தில் பொறிக்கப்பட்டிருந்தன.

இதே அசோகனது காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல்வெட்டுகள் தமிழகத்தில் இருந்த இயற்கை குகைத் தளங்களிலும் கண்டறியப்பட்டன. தமிழகத்தின் குகைத்தள கல்வெட்டு வரி வடிவங்களுக்கும் அசோகனது கல்வெட்டு சாசன வரி வடிவங்களுக்கும் சில ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டது. பிராமி எழுத்து வடிவம் வடநாட்டிலேயே தோன்றியது என்றும் இதன் அடிப்படையிலேயே தமிழகத்தின் குகைத்தளங்களில் பிராமி வரி வடிவக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அசோகனது சாசன வரி வடிவத்திற்கு வடபிராமி என்று பெயரிட்டு அழைத்தார்கள். தமிழகத்தின் குகைத்தள கல்வெட்டு வரி வடிவத்திற்கு தென்பிராமி என்று பெயரிட்டு அழைத்தார்கள்.


தமிழகக் குகைக் கல்வெட்டு காட்டும் தென்பிராமி வரி வடிவத்திற்கும் அசோகனது சாசனம் காட்டும் வட பிராமி வரி வடிவத்திற்கும் சிற்சில நிலைகளில் வேறுபாடுகள் இருப்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன் அவர்களும் டாக்டர். இரா. நாகசாமி அவர்களும் கண்டறிந்தனர். புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழகத்தின் குகைக் கல்வெட்டு வரி வடிவங்களைத் தமிழ்-பிராமி என்று பெயரிட்டு அழைத்தார்.

டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் தமிழகக் குகைத்தளங்களில் கண்டறியப்பட்டுள்ள பிராமி வரி வடிவத்தில் தமிழ் மொழிக்கான தனித்தன்மைகள் இருப்பதனைக் கண்டறிந்தார். தமிழ்-பிராமி வரி வடிவத்தை வட பிராமி வரி வடிவத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கில், தமிழ்-பிராமி வரி வடிவத்திற்கு தமிழி என்று பெயரிட்டு அழைப்பதே சிறப்பானது என்ற வாதத்தை முன் மொழிந்தார். தமது வாதத்திற்கு வலு சேர்க்க இரண்டு சான்றுகளையும் எடுத்து வைத்து விளக்கியுள்ளார்.

சமவயங்க சுத்த என்பது கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்டசமண சமய நூலாகும். இந்த நூலில் 18 வகை வரி வடிவங்கள் (எழுத்துகள்) பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றாக ‘தம்ளி’ என்ற எழுத்து வடிவமும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர்கள் தம்ளி என்றே ஒலித்துள்ளனர்.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் ‘லலித விஸ்தாரம்’ என்ற பௌத்த நூல் இயற்றப்பட்டுள்ளது. பிராகிருத மொழியில் உள்ள இந்நூலில் தமிழ் எழுத்துகள் "தமிழி", "திராவிடி" என்று குறிப்பிடப்படுகின்றன. திராவிடி என்பது பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்த சொல்லாகக் கருதப்படுகிறது.

பொருந்தல் அகழாய்வில் கண்டறியப்பட்ட, முதல் நெல் மாதிரிக்கான காலக்கணிப்பை வெளியிடப்பட்டது. இந்த காலக்கணிப்பின் அடிப்படையில் ஐராவதம் மகாதேவன் மற்றும் டாக்டர். சுப்பராயலு ஆகியோர், தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்ற கருத்தை மறுத்துள்ளனர். திரு. கே.வி. இரமேஷ், இயக்குநர், அகழாய்வுத்துறை (ஓய்வு) தமிழ் பிராமி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்று சான்றுகளுடன் நிறுவியுள்ளார். மாங்குளம் தமிழ் கல்வெட்டுப்பொறிப்பு அசோகன் காலத்திற்கு முந்தியது என்பது இவர் வாதம். பொருந்தல் கண்டுபிடிப்புகள் இவர் கருத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இவர் கூறுகிறார்.

மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, தமிழ் சங்க காலத்தை (400 BCE- 200 CE) சேர்ந்தது.

பார்வை:

  1. தமிழ் எழுத்தின் பழமை. கணியன் பாலன் கீற்று 08 ஜூலை 2012
  2. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள். மா.பவானி. தமிழ் இணையக் கல்விக் கழகம்.
  3. An epigraphic perspective on the antiquity of Tamil.Iravatham Mahadevan The Hindu. June 24, 20

Wednesday, 12 February 2025

வகுப்பு: 8 கட்டுரை :உழைப்பே உயர்வு

 உழைப்பே உயர்வு

முன்னுரை

    'உழைப்பே உயா்வு தரும்' என்பதில் நம் தமிழ்மொழியில் உள்ள ஒரு பழமொழி. ஒருவரை வாழ்க்கையில் உயா்த்துவது அவருடைய உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கடின உழைப்பு தன்னையும் உயா்த்தும். தன் நாட்டையும் உயா்த்தும். அத்தகைய உழைப்பின் சிறப்பினைக் குறித்து தொிந்து கொள்ளலாம். 
 
உழைப்பின் பயன்கள்
 
    நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் ஆா்வத்துடனும், முழுமையான ஈடுபாட்டுடனும் செய்தாலே போதுமானது. அந்த செயலில் நமக்கு வெற்றி கிடைக்கும். 
 
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
 
    என்று திருவள்ளுவா் கூறியுள்ளாா். இறைவனால் முடியாத காாியத்தைக் கூட உழைப்பின் மூலமாக நம்மால் பெற முடியும் என்பதே இந்த திருக்குறளின் பொருள். உழைப்பினால் நம்முடைய உடலும், மனமும் வலுப்பெறுகின்றது. 

உழைப்பினது சிறப்புகள்

    ஒவ்வொருவரும் சொந்தக் காலில் நின்று தனக்கு தேவையானதைத் தானே பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருப்பது உழைப்பு. இந்த உலகில் உள்ள விலங்குகளும், பறவைகளும் தங்களுக்கு தேவையான உணவைத் தாமே தேடிக் கொள்கின்றன. அதேப் போல மனிதனும் தனக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள உழைப்பு உதவுகிறது. உழைப்பு மனிதனைப் பண்படுத்துகிறது. உழைப்பினால் உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை மனிதனுக்கு ஊட்டுகிறது. தவறான வழியில் சோ்க்கும் ஆயிரம் மடங்கு பணத்தில் கிடைக்கும் இன்பத்தை விட உடல் வியா்வை சிந்தி உழைப்பதால் கிடைக்கும் நூறு ருபாய் கூட பொியதாகத் தொியும். அதை அனுபவ ரீதியாகவே உணர முடியும்.

உழைப்பினால் உயா்ந்தவா்கள்

    உலக அளவில் மக்களை திரும்பிப் பாா்க்க வைத்த அனைவரும் தங்கள் உழைப்பினை நம்பி உயா்ந்தவா்கள் தான். சாா்லி சாப்லின், வறுமையிலும் உழைப்பினை மட்டுமே நம்பி உயா்ந்தவா். தன்னுடைய கடினமான உழைப்பின் மூலம் திரைத்துறையில் முத்திரை பதித்தவா். நமது முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாம் அய்யா அவா்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கூட விடாமுயற்சியுடன் படித்து, தன்னுடைய பணியில் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறினாா். 
 
சாதனையாளா்கள்
 
    ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காமல் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் மனிதா்களும், உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவா்களும் வாழ்க்கையில் சாதனையாளா்கள் ஆவது உறுதியான ஒன்று. வெறும் கனவு மட்டும் காண்பவா்கள் சோதனையை மட்டும் சந்திக்கிறாா்கள். அந்த கனவை நிறைவேற்றப் பாடுபடும் நபா்களே சாதனையாளா்கள் ஆகிறாா்கள். தாமஸ் ஆல்வா எடிசன் முதல் நமது தேசத்தந்தை காந்தியடிகள் வரை உழைப்பால் உயா்ந்த சாதனையாளா்களே!. 
 
முடிவுரை
 
     நம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் உழைப்பை உற்ற துணையாக கொள்ள வேண்டும். இன்று மட்டுமல்ல என்றும் உழைப்பே உயா்வு தரும்.
 

Wednesday, 29 January 2025

வகுப்பு : 8- அயோத்திதாசர் சிந்தனைகள்

 

அயோத்திதாசர்




இதழ்ப்பணி










இதழின் பெயர் மாற்றப்பட்ட பிறகு👆👆👆



அயோத்திதாசர் சிந்தனைகள்:
  1 .நல்ல சிந்தனை,
  2 . சிறப்பான செயல் 
   3. உயர்வான 
   4.பேச்சு உவப்பான எழுத்து                     5.  பாராட்டத்தக்க உழைப்பு

பெயர் மாற்றம்:
    1. ஆசிரியர் மீது கொண்ட பற்றுதலால் தனது  இயற்பெயரை மாற்றி  " அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார்.

சிந்தனைகளின் அடித்தளம் :
      இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம் , சமய தத்துவம் ஆழ்ந்து கற்றவர்.

கல்விச் சிந்தனைகள்:
.      கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல் , மரம் வளர்த்தல் போன்றவற்றையும் கற்க வேண்டும்.





Friday, 24 January 2025

வகுப்பு: 10. படம் பார்த்து கவி எழுது!



ஏடு எடுத்தேன் கவி எழுத

 எழுது எழுது என்றது

இந்தக் காட்சி!


கருத்தே ஓவியமாய் ...

ஓவியமே கருத்தாய்

ஒற்றைப் படத்தில்...

ஒராயிரம் கருத்து - 

உள்ளங் கை நெல்லிக்கு

விளக்கமது தேவையோ?!


சமூக விளைவை 

சட்டென்று விளக்கி

மனதை மயக்கும்

மாண்புறு கவியாய்..!

உணர்ந்தே நடப்போம்...

உல கதில் சிறப்போம் !


Thursday, 23 January 2025

வகுப்பு 9. விரிவாகும் ஆளுமை

 கணியன் பூங்குன்றனார்




யாதும் ஊரே யாவருங் கேளீர்


திருவள்ளுவர்


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

 சாந்துணையும் கல்லாத வாறு


முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள்:  கூறியவர் 

கோர்டன் ஆல்போர்ட் (உளவியல் வல்லுநர்)


1. ஈடுபாடு மற்றும் செழுமைப்படுத்துதல்

2. அறிந்து கொள்ளும் ஆற்றல்

3. வாழ்க்கைத் தத்துவத்தை கடைப்பிடித்து நடத்தல்



குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் - ஆலத்தூர் கிழார்

" பூட்கையிலோன் யாக்கைப் போல (புறம் 69)


சீன அறிஞர் லாவோட்சு



சீன அறிஞர் ( கன்பூசியசு)

கிரேக்க அறிஞர் பிளேட்டோ 




கிரேக்க அறிஞர் (அரிஸ்டாட்டில்)




விந்திய மலைத் தொடருக்கும் இமயமலைத் தொடருக்கு இடையே உள்ள நிலப்பரப்பே தரும பூமி - தர்ம சாஸ்திர நூல்கள்



ஒழுக்கவியலை ஆராய்ந்து எழுதியவர்
(ஆல்பர்ட் சுவைட்சர் )
"திருக்குறளைப் போல் உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்தில் காண்பது அரிது " - ஆல்பர்ட் சுவைட்சர்



"படு திரை வையம் பாத்திய பண்பே "  - தொல் காப்பியர்.

பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன்👇👇👇


"தமிழ் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தருவதாகும்"  -  பிசிராந்தையா
ர் கோப்பெருஞ்சோழனிடம்.

மார்க்ஸ் அரேலியஸ்:👇👇👇


       நான் அண்டோ நீனஸ் -ஆதலால்  ரோமக்கு உரியவன். நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்.


ஜி யு போப்


  திருவள்ளுவர் உலகப் புலவர் என போற்றுகிறார். ஜி.யூ. போப்.



நூற் குறிப்பு:






தனிநாயகம் அடிகள்:
தமிழுக்குத் தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்.
உலகத்தமிழ் ஆய்வு மன்றம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
தமிழ் பண்பாடு என்ற இதழைத் துவங்கியவர்.

Tuesday, 21 January 2025

வகுப்பு 8. கட்டுரை. புத்தகம் வாங்கி அனுப்புதல்

 எட்டாம் வகுப்பு இயல் 8 கடிதம் எழுதுதல்.

எட்டாம் வகுப்பு இயல்

 8 கடிதம்எட்டாம் வகுப்பு இயல் 8 கடிதம் எழுதுக

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக. 

அன்பு நகா், 

கடையநல்லூர் 

நாள் - 20.01.2

)

அன்புள்ள மாமாவுக்கு,

    உங்கள் மருமகள் சாந்தி எழுதுகின்ற கடிதம். நாங்கள் அனைவரும் இங்கு நலமாக இருக்கின்றோம். அதைப்போல தாங்களும் அத்தையும்  நலமாக இருக்கிறீா்களா?. நலம் அறிய ஆவல்!

    நான் படிக்கும் பள்ளியில் எங்கள் தமிழாசிாியா் அப்துல்கலாம் அய்யா அவா்கள் எழுதிய அக்னிச் சிறகுகள் பற்றி எங்களுக்கு கூறினாா். அந்த நூலில் அப்துல்கலாம் அய்யாவின் வாழ்க்கை, அவருடைய கனவு, வருங்கால இந்தியா என அனைத்தையும் கூறியுள்ளதாக தமிழாசிாியா் கூறினாா். அதைக் கேட்டதில் இருந்து அந்த புத்தகத்தை நான் முழுமையாக வாசித்துப் பாா்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். இங்கே அந்த நூல் கிடைக்கவில்லை. எனவே  மதுரையில் உள்ள புத்தக கடையில் அக்னிச் சிறகுகள் புத்தகம் இருந்தால் எனக்காக வாங்கி அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 

இப்படிக்கு 

அன்பு மருமகள்

சாந்தி

உறைமேல் முகவாி

    முருகன்.ஏ

    14, கூலக்கடைத் தெரு,

    மதுரை.

Wednesday, 20 November 2024

வகுப்பு 8 ஒன்றே குலம் (திருமந்திரம்)

 63 நாயன்மார்கள்



1அதிபத்தர்
2அப்பூதியடிகள்
3அமர்நீதி நாயனார்
4அரிவட்டாயர்
5ஆனாய நாயனார்
6இசைஞானியார்
7இடங்கழி நாயனார்
8இயற்பகை நாயனார்
9இளையான்குடிமாறார்
10உருத்திர பசுபதி நாயனார்
11எறிபத்த நாயனார்
12ஏயர்கோன் கலிகாமர்
13ஏனாதி நாதர்
14ஐயடிகள் காடவர்கோன்
15கணநாதர்
16கணம்புல்லர்
17கண்ணப்பர்
18கலிய நாயனார்
19கழறிற்றறிவார்
20கழற்சிங்கர்
21காரி நாயனார்
22காரைக்கால் அம்மையார்
23குங்கிலியகலையனார்
24குலச்சிறையார்
25கூற்றுவர்
26கலிக்கம்ப நாயனார்
27கோச்செங்கட் சோழன்
28கோட்புலி நாயனார்
29சடைய நாயனார்
30சண்டேசுவர நாயனார்
31சக்தி நாயனார்
32சாக்கியர்
33சிறப்புலி நாயனார்
34சிறுதொண்டர்
35சுந்தரமூர்த்தி நாயனார்
36செருத்துணை நாயனார்
37சோமசிமாறர்
38தண்டியடிகள்
39திருக்குறிப்புத் தொண்டர்
40திருஞானசம்பந்தமூர்த்தி
41திருநாவுக்கரசர்
42திருநாளை போவார்
43திருநீலகண்டர்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்
45திருநீலநக்க நாயனார்
46திருமூலர்
47நமிநந்தியடிகள்
48நரசிங்க முனையர்
49நின்றசீர் நெடுமாறன்
50நேச நாயனார்
51புகழ்சோழன்
52புகழ்த்துணை நாயனார்
53பூசலார்
54பெருமிழலைக் குறும்பர்
55மங்கையர்க்கரசியார்
56மானக்கஞ்சாற நாயனார்
57முருக நாயனார்
58முனையடுவார் நாயனார்
59மூர்க்க நாயனார்
60மூர்த்தி நாயனார்
61மெய்ப்பொருள் நாயனார்
62வாயிலார் நாயனார்
63விறன்மிண்ட நாயனார்












|




















திருமூலர்
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
பதினெண் சித்தர்களுள் ஒருவர்
திருமந்திர மாலையை எழுதியவர்
3000 பாடல் களைக் கொண்டது.