இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 15 July 2024

பத்தாம் வகுப்பு. தமிழ்-செயற்கை நுண்ணறிவு

வகுப்பு 10
பாடம். தமிழ்


செயற்கை நுண்ணறிவு எளிய விளக்கம்






செயற்கை நுண்ணறிவு சிறு விளக்கம்





   பெப்பர் ரோபட்



கூடுதல் தகவல்கள் (பாடப்பொருள் சார்ந்து) :




மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பல்வேறு நிறுவனங்களும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தேவையான நவீன ஆயுதங்களையும் தளவாட பொருட்களையும் தயாரித்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜென் டெக்னாலஜி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய அதிநவீன ரோபோட் ஒன்றை தயாரித்துள்ளது.

LiDAR (light detection and ranging) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் நான்கு கால்கள் கொண்ட இந்த ரோபோவுக்கு பிரஹஸ்தா (Prahasta) என பெயரிட்டுள்ளனர். இந்த மனிதர்களால் எளிதில் சென்றுவர முடியாத இடங்களுக்கு கூட சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என ஜென் டெக்னாலஜிஸ் தெரிவிக்கிறது. இந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலனாக இந்த பிரஹஸ்தா செயல்படும் என்றும் குறிப்பாக இது எளிதாக மாடிப்படிகளை ஏறும் என்றும் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது இதனை எளிதாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும் என தெரிவிக்கிறது. சிறிய துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்ஸ் ஆகியவற்றை எடுத்து கொண்டு செல்லும் திறன் கொண்டது என தெரிவ்க்கப்பட்டுள்ளது. 80 கிலோ எடை கொண்ட ஒரு ராணுவ வீரரை கூட தூக்கிக்கொண்டு இதனால் செல்ல முடியும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

பிரஹஸ்தாவின் செயல்பாடுகளை விளக்கி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் சிறிய துப்பாக்கியை ஏந்தி கொண்டு இலகுவாக மாடிப்படி ஏறி செல்வது மற்றும் தாவி செல்வது உள்ளிட்டவற்றை இந்த ரோபோ செய்கிறது. கீழே விழுந்தாலும் இதுவே தானாக மீண்டு வந்து தன்னுடைய வேலைகளை செய்யும் என்று ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 



No comments:

Post a Comment