இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 20 March 2023

வகுப்பு. 7 தமிழ் - கடிதம் -ஊர்த்திருவிழாவிற்கு அழைப்பு

 கடிதம் எழுதுக.

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

54, பெரிய தெரு,
கடையநல்லூர்,. 20.03.2023.

அன்புள்ள அத்தைக்கு,
உங்கள் மருமகள் எழுதும் கடிதம். நானும் என் அப்பா, அம்மா ஆகியோரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். 

அடுத்த மாதம் 3ம் தேதி எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது. ஒரு வாரம் இத்திருவிழா நடைபெறும்.

ஊரே அலங்காரமாக இருக்கும். பூச்சாட்டல், காப்புக்கட்டல் ,பூமிதித்தல், அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம் கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும் அழைப்பார்கள். அன்புடன் முடிக்கின்றேன். உடன் பதில் எழுதுங்கள்.

இப்படிக்கு,
அன்புள்ள மருமகள்,
அ. மீனா.

உறைமேல் முகவரி

க.கவிதா,

18.பாரதி தெரு,

தாம்பரம்-1

Tuesday 14 March 2023

வகுப்பு 8 . யாப்பு இலக்கணம் - அணி இலக்கணம் - வினா விடைகள் (ஆன்லைன் வழி)

 

1➤ உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது
=> பிறிது மொழிதல் அணி
,
2➤ கடலோடா கால்வல் நெடுந்தேர் - பயின்று வரும் அணி யாது?
=> பிறிது மொழிதல் அணி
,
3➤ இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது
=> வேற்றுமை அணி
,
4➤ தீயினால் சுட்ட புண் உள்ளாறும் -பயின்று வரும் அணி யாது ?
=> வேற்றுமையணி
,
5➤ ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது
=> இரட்டுறமொழிதல் அணி
,
6➤ ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்து இருக்கும்- பயின்று வரும் அணியை விளக்கு
=> இரட்டுறமொழிதல் அணி
,
7➤ இரட்டுறமொழிதல் அணியின் மற்றொரு பெயர்
=> சிலேடை அணி
,
8➤ பிரிது மொழிதல் அணியில் ....... மட்டும் இடம்பெறும்
=> உவமை
,
9➤ மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம்
=> யாப்பிலக்கணம்
,
10➤ யாப்பிலக்கணத்தின் உறுப்புகள் எத்தனை ?
=> 6
,
11➤ எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது .......எனப்படும்
=> அசை
,
12➤ ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது.....
=> சீர் எனப்படும்.
,
13➤ சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை...... என்பர்
=> தளை
,
14➤ தளைகள் ........ வகைப்படும்
=> 7
,
15➤ இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது.... ஆகும்.
=> அடி ஆகும்
,
16➤ செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமை ....... எனப்படும்
=> தொடை எனப்படும்
,
17➤ தொடை எத்தனை வகைப்படும்
=> 8 வகைப்படும்.
,
18➤ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ...... எனப்படும்
=> மோனை
,
19➤ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
=> எதுகை
,
20➤ இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றி வரத் தொடுப்பது
=> இயைபு எனப்படும்
,
21➤ ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப் பகுதி அடுத்த பாடலின் முதல் சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது ....... தொடை எனப்படும்
=> அந்தாதித் தொடை
,
22➤ பா எத்தனை வகைப்படும்
=> 4 வகைப்படும்
,
23➤ வெண்பாவின் ஓசை என்ன?
=> செப்பலோசை
,
24➤ ஆசிரியப்பாவின் ஓசை என்ன ?
=> அகவல் ஓசை
,
25➤ கலிப்பாவின் ஓசை என்ன ?
=> துள்ளல் ஓசை
,
26➤ வஞ்சிப்பாவின் ஓசை என்ன ?
=> தூங்கல் ஒசை
,
27➤ கருத்துக்கு முதன்மை கொடுத்து பாடப்படும் கவிதை
=> புதுக்கவிதைகள் எனப்படும்
,
28➤ இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்பட்ட கவிதைகள் ..... கவிதைகள் எனப்படும்
=> மரபுக் கவிதைகள்
,
29➤ யாப்பிலக்கத்தின் படி எழுத்துக்கள் ..... வகைப்படும்
=> 3
,
30➤ ஒற்றெழுத்து என்று குறிப்பிடப்படுவது
=> மெய்யெழுத்தும் ஆயுத எழுத்தும்

Wednesday 8 March 2023

வகுப்பு9- விரிவானம்-தாய்மைக்கு வறட்சி இல்லை

 

தாய்மைக்கு வறட்சி இல்லை

1. கதை ஆசிரியர் : சு.சமுத்திரம்

2. குறிப்புச் சட்டகம்

3.முன்னுரை

தோட்டத்தின் அமைப்பு

சென்னப்பா குடும்பத்தின் வறிய நிலை

அதிகாரியின் மனிதாபிமானம்

முடிவுரை

4. கதை உணர்த்தும் நீதி: எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் கருத வேண்டும்.

 

முன்னுரை

   எது வறண்டாலும் மனிதம் வறண்டு விடக்கூடாது தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை இக்கதை உணர்த்துகிறது.

 

தோட்டத்தின் அமைப்பு

   கர்நாடகா மாநிலத்தின் குல்பர்கா மாவட்டத்தில் காடுகளுக்கு நடுவே அரை கிலோமீட்டர் தொலைவில் முள் வேலி போட்டத் தோட்டம். அத்

தோட்டத்தில் ஒரு கல் மாளிகை, முக்கோண வாசல் கொண்ட குடிசை, அதில் தோட்டத்தைப் பராமரிக்க வேலையாள் குடும்பம்.

 

குடும்பத்தின் வறிய நிலை :

 

தோட்டத்தில் நீர் பற்றாக்குறை அதனால் வேலை இழந்த தோட்டத்து வேலையாள் சென்னப்பா.

பாதி நேரம் உணவின்றி சென்னப்பாவின்

மனைவி, மூன்று வயது பெண் குழந்தை,ஒரு வயது குழந்தை.ஆகியோர் பசியால் வாடுகின்றனர்.

 

அதிகாரியின் மனிதாபிமானம்

    அத்தோட்டத்திற்குள் உணவருந்த வந்த ஓர் அதிகாரி தன்னிடமிருந்த சாப்பாட்டில் ஒரு பகுதியை சென்னப்பாவிடம் கொடுக்கிறார்.

அதிகாரி வழங்கிய உணவினை தன்மான உணர்வு மேலிட ஏற்க மறுத்த தோட்டத்து வேலையாளின் மனைவி, குடும்பத்தின் வறிய நிலையை உணர்ந்தும்,அதிகாரியின் நல்ல உள்ளத்தை உணர்ந்தும் உணவினை பெற்றுக் கொள்கிறார்.

 

தனக்கு வழங்கப்பட்ட உணவில் பெரும் பகுதியை தனது குழந்தைகளுக்கும்  தன்னால் ஆசையாக வளர்க்கப்பட்ட நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டி பசியைப் போக்குகிறார்.

முடிவுரை:

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாக்குக்கு இணங்க உணவுத் தட்டில் இருந்த உணவு குறைய குறைய தாய்மை கூடிக் கொண்டே இருந்தது

Tuesday 7 March 2023

வகுப்பு 7. தொடர் அகமதிப்பீடு

 வகுப்பு 7

 தொடர் அகமதிப்பீடு (CCE)

மூன்றாம் பருவம்

மாணவியர் செயல்பாடுகள்.

சுழலட்டைகள், பொருத்தட்டைகள்
ஒப்படைப்புகள்
திருக்குறள் நீள் அட்டைகள்