இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 31 December 2020

வகுப்பு 10 - பாவகை அலகிடுதல்- வினா விடைகள்.

 Question 1.

பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் பாவகைகளையும் வகைப்படுத்தி பட்டியல் இடுக.
Answer:
1. குறள்வெண்பா : திருக்குறள்
2. வெண்பா : நீதி வெண்பா, திருவிளையாடற்புராணம், தேம்பாவணி,
3. கலிவெண்பா : முல்லைப்பாட்டு, பரிபாடல்
4. ஆசிரியப்பா : அன்னைமொழியே, மலைபடுகடாம், திருமால் திருமொழி, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மெய்க்கீர்த்தி, சிலப்பதிகாரம், ஞானம், காலக்கணிதம், ஏர் புதிதா?
5. இணைக்குறள் ஆசிரியப்பா : காற்றே வா, பூத்தொடுத்தல், சித்தாளு.
6. கலிப்பா : கம்பராமாயணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 2.
வெண்பாவில் அமைந்த நூல்கள், ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வெண்பாவில் அமைந்த நூல்கள் : திருக்குறள், நாலடியார்.
ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.

Question 3.
யாப்போசை தரும் பாவோசைகள் எவையெனப் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்?
Answer:
யாப்போசை தரும் பாவோசை

1. செப்பலோசை : இருவர் உரையாடுவது போன்ற ஓசை.


2. அகவலோசை : ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை


3. துள்ளலோசை : கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது


4. தூங்கலோசை : சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை,
தாழ்ந்தே வருவது – யாப்பதிகாரம், புலவர் குழந்தை

மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

மனக்கோட்டை:
கண்ணும் கருத்தும்:
அள்ளி இறைத்தல்:
ஆறப்போடுதல்:
Answer:
மனக்கோட்டை:
படிக்காமலே தேர்வில் வெற்றிபெற்றுவிடலாம் என்று சில மாணவர்கள் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.

கண்ணும் கருத்தும்:
கண்ணும் கருத்தாய் கவனமுடன் படித்தால் முதல் மதிப்பெண் பெறலாம்.

அள்ளி இறைத்தல்:
பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தால் விரைவில் வறுமைநிலை அடைவாய்.

ஆறப்போடுதல்:
பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாது ஆறப்போடுதல் அநேக தீயவிளைவுகளைத் தடுக்கும்.

No comments:

Post a Comment