இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 25 May 2017

மாற்றமே ..ஏற்றத்துக்கு முதல் படி

மாற்றமே… ஏற்றத்துக்கு முதல் படி
-------------------------------------------------------




ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தினமும் மாட்டிலிருந்து பாலைக் கறந்து பக்கத்து ஊரில் விற்று வந்தான். ஒரு நாள் இரண்டு கேன்னில் பால் கறந்து வைத்து இருந்தான். அப் பாலை தயிராக மாற்ற வேண்டி உரிய ஏற்பாடுகள் செய்து வந்தான். அப்போது முதல்  கேனிலிருந்த பால் விவசாயிடம் என்னை, என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதாம். அதற்கு விவசாயி உன்னை சூடாக்கி பின் தயிராக மாற்றப் போகிறேன். என்று சொன்னானாம். உடனே அக் கேனிலிருந்து பால் , ஐயோ என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன். என்னை இப்படியே  இருக்க அனுமதியுங்கள் .. நான் பாலாகவே இருந்து விட்டு போகிறேன்.. என்னை எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று கூறியதாம்.பால் கெஞ்சிக் கேட்டதால்.. விவசாயியும் அப்படியே உன் விருப்பம் போல் ஆகட்டும் என்று விட்டுவிட்டான்.





 இரண்டாவது கேனிலிருந்த பாலோ.. என்னை உங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளுங்கள். என்று கூறியதாம். உடனே விவசாயியும் அப்பாலை சூடேற்றி மறுநாள் தயிராக மாற்றினான். பாலாக இருந்த போது லிட்டர் 30 ரூபாயாக இருந்த பாலின் விலை தயிராக மாற்றிய பின்  60 ரூபாயாக விலை மதிப்பு உயர்ந்த்து
                            


அதன் பின்பு விற்காத தயிரை  நன்கு கடைந்து மோராக மாற்றினான். அப்போது  அவ் விவசாயிக்கு வெண்ணைய் கிடைத்தது. அவ் வெண்ணெய் லிட்டர் 200 ரூபாய்க்கு விலை மதிக்கப்பெற்றதாம் .



 அவ் வெண்ணைய்யையும் நன்கு காய்ச்சி நெய்யாக உருக்கினான் அவ் விவசாயி. இப்போது நெய்யின் விலை ரூபாய் 400 ஆக விலை மதிக்கப்பெற்றதாம்

      மாற்றத்தை விரும்பாத பால் .. மறு நாள் புளித்து வீணாக சாக்கடையில் கொட்டப்பட்டது.

         மாற்றத்தை விரும்பிய பால் … தயிராக மதிப்பு உயர்ந்து பின் மோராக மாறி வெண்ணைய்யை தந்து அதன் பின் நெய்யாக மாறி உயர்ந்த மதிப்பு மிக்க பொருளாக மாறிவிட்டதாம்.

கதை உணர்த்தும் நீதி-
          ” மாற்றம் அவசியம், தன் நிலையை நன்மக்கள்சொல்கிற மாதிரி நாம் நம்மை  மாற்றினால் இவ் உலகில் மதிப்பு மிக்க பொருளாக பிறரால் மதிக்கப்படுவோம்.”


”மாற்றத்தை விரும்புவோம்… ஏற்றத்தை எளிதில் பெறுவோம்”

No comments:

Post a Comment