தரம் குறையாத மாற்றமே.. தகுதியான மாற்றம்
------------------------------------------------------------------------------------
ஒரு ஊரில் மிகப்பெரிய நகைக்கடை இருந்தது. அந் நகைக்கடை முழுவதும் பல வண்ண
டிசைன்களில் ஆபரணங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன. அவற்றினை வாடிக்கையாளர்கள் மிக ஆச்சரியத்துடன்
பார்த்து பார்த்து மெய் சிலிர்த்தனர். அக் கடையின் ஒரு ஓரத்தில் 24 கேரட் தங்ககட்டி
ஒன்று இருந்த்து. அந்த தங்க்கட்டிக்கு ஒரே வருத்தம்… 24 கேரட்டாக நாம் இருந்தும் ஒருவர்
கூட நம்மை எட்டிப் பார்க்கவில்லையே…. என்று ஏக்கமுடன் இருந்தது. அதன் கவலைகளை புரிந்து
கொண்ட பொற்கொல்லன், 24 கேரட் தங்க கட்டியிடம், உன் வருத்தம் எனக்குப் புரிகிறது. உன்னை
அனைவரும் திரும்பி பார்க்க வைக்க என்னால் முடியும் என்றான். உடனே, தங்ககட்டிக்கு ஒரே
சந்தோசம். என்னை எப்படியாவது அப்படி மாற்றி விடேன் என்று பொற்கொல்லனிடம் கூறியது. உடனே
பொற்கொல்லனும் நீ இப்படி தங்க கட்டியாக இருந்தால் உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள்.
உன்னை ஆபரணமாக செய்து விடுகிறேன் என்று கூறி, தங்க கட்டியை உருக்கி, அழகான செயினாக
உருவாக்கி விட்டான். அந்த செயினை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டனர். தங்கட்டியாக
இருந்த செயினுக்கு மிக்க சந்தோசமாக இருந்த்து. ஒரு பணக்காரப் பெண் அந்த செயினை வாங்கிக்கொண்டு
சென்று விட்டார்.
No comments:
Post a Comment