இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 15 February 2017

இலக்கியமலர்கள்

அனிச்சம்பூ


அனிச்சம்பூ என்றவுடனே எல்லோர்க்கும் ஞாபகத்திற்கு வருவது அதனது மென்மையான இயல்புதான். எம் கைகளால் தீண்டினாலே வாடிவிடக்கூடிய மென்மையான பூ. ஏன் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் இந்த அனிச்சம்பூ. மென்செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்கு தனியழகு. அந்த அழகான மலரின் சில படங்களை இங்கே தருகின்றேன். நீங்களும் பார்த்துத் இரசித்துக் கொள்ளுங்களேன்.





சரி விடையத்திற்கு வருவோம். தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இந்த அனிச்சம்பூ கையாளப்பட்டு இருந்தாலும் திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக இந்த அனிச்சம் பூவின் இயல்மை அழகாகக் கையாண்டுள்ளார். இணையத்தில் தேடிய போது பல சுவாரசியமான விடையங்கள் எனக்குக் கிடைத்தன. அவற்றை இந்த ஊஞ்சலில் ஒரேயிடத்தில் தருவதில் மிகமகிழ்ச்சி எனக்கு.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”. – எண் : 90 – விருந்தோம்பல் 9
பொருள்: முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம் பூ அதுபோல எமது முகத்தில் சிறுமாறுபாடும் நோக்கிய உடனே விருந்தினரின் உள்ளமும் வாடி விடுவிடும்.
“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவன்”
 – எண் : 1111 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: அனிச்ச மலரின் மென்மையைக் காட்டிலும் என் தலைவி  மென்மையானவள்.
“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை”
 – எண் : 1115 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: தலைவியின் நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்.
“அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.” 
– எண் : 1120 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் தலைவியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.

எப்படியிருக்கின்றது இந்தப்பூ. நான் பெற்றுக்கொண்ட விடையங்கள் மிகக்குறைவானவையே. இன்னும் ஏராளமான விடையங்கள் இருக்கலாம். நீங்கள் அறிந்திருந்தால் சற்று சொல்லுங்களேன்…!

திருத்தம்- 20 பிப்ரவரி
( அனிச்சம் பூ  சில நேரங்களில் வாடிய பிறகும் மலரலாம்...!  - (ஆ. சொ.க) )

No comments:

Post a Comment