இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 26 February 2017

தற்குறிப்பேற்ற அணி - எளிய பாடல்களுடன் விளக்கம்

         தற்குறிப்பேற்ற அணி 


"தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்."

சிறிய எடுத்துக்காட்டின் மூலம் இங்கு பார்ப்போம்.

              ஊரின் தென்கோடியில், ஒரு தலைவனது பிறந்த நாளை முன்னிட்டு, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து, தயார் நிலையில் இருக்கின்றனர்.



              ஊரின் வடகோடியில், ஒரு பாரம்பரிய மிக்க தலைவன் தன் உலக வாழ்வை நீத்து, இறுதியாத்திரையாக அவனது உடல் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறது.



அப்போது அவ்வூரில், மேகம் கறுத்து, சிறு மழைத்தூறலை தூவுகிறது…

               வடகோடியில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தவர்கள். கூறுகிறார்கள்… ” மாபெரும் தலைவன் மறைந்ததை எண்ணி வானம் கண்ணீர் மழைத்துளிகளைப் பொழிகின்றன.. என்று!

தென்கோடியில்,தலைவனின்பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தவர்களோ…
என் தலைவனின் பிறந்த தினத்தை வானம் பன்னீர் தெளித்து கொண்டாடுகிறது என்று கூறுகிறார்கள்..
                                                                                    ஆக மழைப்பொழிவது என்பது இயற்கை, ஆனால்,. தென்புலத்தாரும், வடபுலத்தாரும் அவரவர் தன் குறிப்பை ஏற்றி கூறுகிறார்கள் – இது தற்குறிப்பேற்ற அணியை எளிதில் புரிந்து கொள்ள ஒர் எளிய எடுத்துகாட்டாய் அமையும்.
 எ.கா.1:

    


 போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                                                                                         சிலப்பதிகாரம்
விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
எ.கா.2:




     தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம்.
                                                                                                      நளவெண்பாவிளக்கம்:
                        நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.
எ.கா.3:

காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட
பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம்
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ உரை.
                                                                                                நளவெண்பாவிளக்கம்:







              நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.

திரைப்படப்பாடல்களில்”தற்குறிப்பேற்ற அணி

இளையநிலா பொழிகிறது என்ற பாடலில் வரும் பாடல்கள் எனக்கு மிக மிக பிடித்த வரிகள்


முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ”




              என்ற பாடலின் கருத்துக்கள் , மேகங்கள் முகவரியைத் தொலைத்து விட்டு அலைந்து திரிந்து அழுகின்றதால் வருகிற கண்ணீர்தான் மழையா? என்று தன் குறிப்பை ஏற்றி, தற்குறிப்பேற்ற அணியை அசாதாரணமாய் கையாண்டிருப்பார் கவிஞர்
                                                                                                                   - இரா.மு
- ( அணி இலக்கணம் தொடரும்)

Saturday 25 February 2017

வருங்கால வைப்புநிதி, தன்பங்பேற்பு ஓய்வூதிய கணக்குதாள் ஊதிய சான்று பெறுவதற்கான இணைய விளக்கம்



1.GPF ACCOUNT SLIP பெறுவதற்கு

 தங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு மற்றும் கணக்குத்தாள் பெறுவதற்கு  வலப்புறம் உள்ள GPF   IMAGE யை சொடுக்கவும். பின்பு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடவும்

2.CPS ACCOUNT SLIP பெறுவதற்கு

. தங்களின் பங்பேற்பு ஊதிய கணக்கு மற்றும் கணக்குத்தாள் பெறுவதற்கு  வலப்புறம் உள்ள CPS   IMAGE யை சொடுக்கவும். பின்பு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடவும்


3.PAY SLIP, ANNUAL STATEMENT பெறுவதற்கு

தங்களின் PAY SLIP, ANNUAL STATEMENT பெறுவதற்கு அருகில் உள்ள PAY SLIP, யை சொடுக்கவும். பின்பு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடவும். Emp code என்னுமிடத்தில்.. தங்களின் GPF/ CPS எண்ணை உள்ளிடவும்.


தேவையான விவரங்களை  அவ்வப்போது தங்களது அலைபேசியில் PDF வடிவில் சேமிக்கலாம்.

Wednesday 15 February 2017

இலக்கியமலர்கள்

அனிச்சம்பூ


அனிச்சம்பூ என்றவுடனே எல்லோர்க்கும் ஞாபகத்திற்கு வருவது அதனது மென்மையான இயல்புதான். எம் கைகளால் தீண்டினாலே வாடிவிடக்கூடிய மென்மையான பூ. ஏன் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் இந்த அனிச்சம்பூ. மென்செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்கு தனியழகு. அந்த அழகான மலரின் சில படங்களை இங்கே தருகின்றேன். நீங்களும் பார்த்துத் இரசித்துக் கொள்ளுங்களேன்.





சரி விடையத்திற்கு வருவோம். தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இந்த அனிச்சம்பூ கையாளப்பட்டு இருந்தாலும் திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக இந்த அனிச்சம் பூவின் இயல்மை அழகாகக் கையாண்டுள்ளார். இணையத்தில் தேடிய போது பல சுவாரசியமான விடையங்கள் எனக்குக் கிடைத்தன. அவற்றை இந்த ஊஞ்சலில் ஒரேயிடத்தில் தருவதில் மிகமகிழ்ச்சி எனக்கு.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”. – எண் : 90 – விருந்தோம்பல் 9
பொருள்: முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம் பூ அதுபோல எமது முகத்தில் சிறுமாறுபாடும் நோக்கிய உடனே விருந்தினரின் உள்ளமும் வாடி விடுவிடும்.
“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவன்”
 – எண் : 1111 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: அனிச்ச மலரின் மென்மையைக் காட்டிலும் என் தலைவி  மென்மையானவள்.
“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை”
 – எண் : 1115 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: தலைவியின் நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்.
“அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.” 
– எண் : 1120 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் தலைவியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.

எப்படியிருக்கின்றது இந்தப்பூ. நான் பெற்றுக்கொண்ட விடையங்கள் மிகக்குறைவானவையே. இன்னும் ஏராளமான விடையங்கள் இருக்கலாம். நீங்கள் அறிந்திருந்தால் சற்று சொல்லுங்களேன்…!

திருத்தம்- 20 பிப்ரவரி
( அனிச்சம் பூ  சில நேரங்களில் வாடிய பிறகும் மலரலாம்...!  - (ஆ. சொ.க) )