கையடக்க அகராதி வேண்டி எழுதப்படும் கடிதம்
அனுப்புநர்:
மாலதி,
9 ஆம் வகுப்பு உ பிரிவு,
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
கடையநல்லூர்.
பெறுநர்:
மேலாளர்,
வானதி பதிப்பகம்,
வடக்கு மாசி வீதி,
மதுரை.
மதிப்பிற்குரிய ஐயா/அம்மையீர்,
நான், கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறேன். எனது பள்ளி நூலகத்திற்குத் தமிழ்-ஆங்கிலம்/தமிழ்-தமிழ் போன்ற கையடக்க அகராதிகள் 10 தேவைப்படுகின்றன. அவற்றுக்கு உரிய பணத்தினை வங்கி மூலமாக அனுப்பி அதன் ரசீதை இத்துடன் அனுப்பி வைத்துள்ளேன்.அதனைப் பெற்றுக் கொண்டு மேற்கண்ட முகவரிக்கு உரிய புத்தகங்களை அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன்
நன்றி.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
மாலதி.
உறைமேல் முகவரி:
மேலாளர்,
வானதி பதிப்பகம்,
வடக்கு மாசி வீதி,
மதுரை.
No comments:
Post a Comment