செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 30 August 2022

வகுப்பு 7. கட்டுரை - நான் விரும்பும் தலைவர்

 நான் விரும்பும் தலைவர்

நான் விரும்பும் தலைவர்

திரு.வி. கல்யாணசுந்தரனார் 

---------------------------+--------------------------

முன்னுரை :


திரு.வி.க. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் விருத்தாசலம், சின்னம்மா. இவரின் முன்னோர்கள் திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.


இளமைக் காலம் :


தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னை இராயப்பேட்டையில் வெஸ்லி பள்ளியில் பயின்றார். நான்காம் வகுப்பு படிக்கும் போது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் படிப்பு தடைப்பட்டது.
வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா.

கதிர்வேற்பிள்ளை என்பவரிடம் தமிழும் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களையும் கேட்டறிந்தார். பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களையும் ஜஸ்டிஸ் சதாசிவராவ் அவர்களின் தொடர்பால் ஆங்கில அறிவையும் பெற்றார்.


விடுதலை இயக்கம் :


விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. தேசபக்தன்’ பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் இருந்தார். தனது எழுச்சிமிக்க எழுத்துகளால் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களைப் பொங்கி எழச் செய்தார். அந்நிய அடக்குமுறையை எதிர்த்து மேடைகளில் ஆவேசமாக உரையாற்றினார். காந்தியடிகள் சென்னையில் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். இவருடைய அரசியல் குரு திலகர் ஆவார்.

தமது பேச்சால் தமிழ் வளர்த்தவர். திரு.வி.க. நடை என்றே ஒரு தனிநடையை நடைமுறைப்படுத்தும் அளவுக்குப் பேசுவது போலவே எழுதுவது; எழுதுவது போலவே பேசுவது என்னும் முயற்சியில் வெற்றி கண்டவர். பிணிக்கும் தகைவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசுவதில் வல்லவர். அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை உணர்ச்சிமிகு பேச்சினால் தம்பால் ஈர்த்து மேடைத்தமிழின் முன்னோடியாகத் திகழ்ந்த வர். திரு.வி.க.


முடிவுரை :


செய்யுள் நூல்கள், உரைநடை நூல்கள் எனப் பல நூல்களை இயற்றியுள்ளார். தேசபக்தன் , நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டவர்

No comments:

Post a Comment