செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 14 July 2022

வகுப்பு 10- உரைநடை-விருந்து போற்றுதும்! வினா விடைகள்

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பின்வருவனவற்றுள் முறையான தொடர்.
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
Answer:
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

Question 2.
விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
Answer:
ஆ) இன்மையிலும் விருந்து


குறுவினா

Question 1.
‘தானியம் ஏதும் இல்லாதநிலையில்விதைக்காகவைத்திருந்ததினையை உரலில் இட்டுக்குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:
விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருதமுடியாது.

ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை யாரும் ஏற்கமாட்டார்கள். எனவே, செல்வத்தைவிட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

சிறுவினா

Question 1.
புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
Answer:

  • அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
  • காலமாற்றத்தால் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காணமுடிகின்றது.
  • வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
  • விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினர்களாகப் போற்றப்படுவது இல்லை.
  • இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.


நெடுவினா

Question 1.
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 1
முன்னுரை :
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 2
என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல் :
வீட்டிற்குவந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முகமலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.


உணவு உபசரிப்பு :

  • • வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.
  • தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
  • உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
  • வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன்.
  • வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
  • உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு :

  • ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்டு அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
  • பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
  • உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
  • உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள
  • உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பிவைத்தேன்.

முடிவுரை:
விருந்தினர் பேணுதல் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும் அருளோடும் செய்தல் நனிசிறப்பாகும்.

No comments:

Post a Comment