இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 23 February 2022

வகுப்பு - 9- இலக்கிய நயம் பாராட்டுதல்

 நயம் பாராட்டுக 

விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே! – ம.இலெ. தங்கப்பா
Answer:

இலக்கிய நயம் பாராட்டுதல் 

முன்னுரை :

        ம.இலெ.தங்கப்பா ஓர் இயற்கைக் கவிஞர் பாரதியாரின் ‘குயில்பாட்டு’ போல பாடியிருக்கிறார். பாட்டு என்பது இசையுடன் தொடர்பு கொண்டது. அப்போது தான் பாட்டு உயிர் பெறுகிறது. அத்தகைய உயிர்ப்பை இப்பாடலில் காண முடிகிறது.

திரண்ட கருத்து :
        நெடுவானம், கடற்பரப்பு, பெருமலை, பள்ளத்தாக்கு, பொழிகின்ற, புனலருவி அழகில், காட்டில், புல்வெளியில், நல் வயலில், விலங்கில், பறவைகளில் இன்னும் தெரிகின்ற பொருள்களில். எல்லாம் பயின்று எம் நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே! மக்கள் மனத்திலும் நீ குடியிருக்க வேண்டும். தூய்மை ஊற்றே, அழகு என்னும் பெருமை கொண்ட ஒழுங்கே மக்கள் மனத்தில் நீ குடியிருக்க வேண்டுவேன்.

எதுகை நயம் :
       அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

சீர் எதுகை :
    பொழிகின்ற         பொழிலில்
    புல்வெளியில்            நல்வயலில்

மோனை நயம் :

     அடிதோறும், சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.


விரிகின்ற –         விண்ணோங்கு
பொழிகின்ற –     புனலருவி பொழிலில்
தெரிகின்ற –         திகழ்ந்து
தெவிட்டாத –         தூய்மை
அழகு –                     அகத்திலும்


சொல் நயம் :
        கவிஞர், நுண்பாட்டு என்ற சொல்லில் ‘நுட்பமான பாட்டு’ என்றே குறிப்பிடுகிறார். பாட்டுக்கு, ‘அழகு என்னும் பேரொழுங்கு’ என்ற அடை கொடுத்துப் பாடுகிறார்.

பொருள் நயம் :
        விண்ணோங்கு, புனலருவிப் பொழில், தெவிட்டாத நுண்பாட்டே என்று பொருள் நயம் புலப்படப் பாடுகிறார்.

நிறைவுரை :
        இயற்கையை வருணிப்பதில் தலை சிறந்து விளங்கும் ம.இலெ.தங்கப்பாவை அழகியல் கவிஞர்’ என்று கூறினால் அது மிகையாது.


No comments:

Post a Comment