இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 23 February 2022

வகுப்பு - 9- இலக்கிய நயம் பாராட்டுதல்

 நயம் பாராட்டுக 

விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே! – ம.இலெ. தங்கப்பா
Answer:

இலக்கிய நயம் பாராட்டுதல் 

முன்னுரை :

        ம.இலெ.தங்கப்பா ஓர் இயற்கைக் கவிஞர் பாரதியாரின் ‘குயில்பாட்டு’ போல பாடியிருக்கிறார். பாட்டு என்பது இசையுடன் தொடர்பு கொண்டது. அப்போது தான் பாட்டு உயிர் பெறுகிறது. அத்தகைய உயிர்ப்பை இப்பாடலில் காண முடிகிறது.

திரண்ட கருத்து :
        நெடுவானம், கடற்பரப்பு, பெருமலை, பள்ளத்தாக்கு, பொழிகின்ற, புனலருவி அழகில், காட்டில், புல்வெளியில், நல் வயலில், விலங்கில், பறவைகளில் இன்னும் தெரிகின்ற பொருள்களில். எல்லாம் பயின்று எம் நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே! மக்கள் மனத்திலும் நீ குடியிருக்க வேண்டும். தூய்மை ஊற்றே, அழகு என்னும் பெருமை கொண்ட ஒழுங்கே மக்கள் மனத்தில் நீ குடியிருக்க வேண்டுவேன்.

எதுகை நயம் :
       அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

சீர் எதுகை :
    பொழிகின்ற         பொழிலில்
    புல்வெளியில்            நல்வயலில்

மோனை நயம் :

     அடிதோறும், சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.


விரிகின்ற –         விண்ணோங்கு
பொழிகின்ற –     புனலருவி பொழிலில்
தெரிகின்ற –         திகழ்ந்து
தெவிட்டாத –         தூய்மை
அழகு –                     அகத்திலும்


சொல் நயம் :
        கவிஞர், நுண்பாட்டு என்ற சொல்லில் ‘நுட்பமான பாட்டு’ என்றே குறிப்பிடுகிறார். பாட்டுக்கு, ‘அழகு என்னும் பேரொழுங்கு’ என்ற அடை கொடுத்துப் பாடுகிறார்.

பொருள் நயம் :
        விண்ணோங்கு, புனலருவிப் பொழில், தெவிட்டாத நுண்பாட்டே என்று பொருள் நயம் புலப்படப் பாடுகிறார்.

நிறைவுரை :
        இயற்கையை வருணிப்பதில் தலை சிறந்து விளங்கும் ம.இலெ.தங்கப்பாவை அழகியல் கவிஞர்’ என்று கூறினால் அது மிகையாது.


வகுப்பு.9. வடிவம் மாற்றுக.பத்தியைப் படித்து அறிவிப்பாக மாற்றுதல்.

 4. வடிவம் மாற்றுக.

பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.

....,..,.................................................
மருதூர் அரசு மேனிலைப் பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த ‘உள்ளங்கை உலகம்’ என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் (கின்னஸ் சாதனை படைத்த) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.


விடை


அறிவிப்பு
நூல் வெளியீட்டு விழா

இடம் : வெள்ளி விழா அரங்கம், அரசு மேனிலைப் பள்ளி, மருதூர்.


நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆனிமாதம் 7 ஆம் நாள் (21.06.2018)


முன்னிலை : பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், திருமிகு. மலரவன் அவர்கள்


தலைமை : பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. முஸ்தபா, M.A., M.Ed., அவர்கள்,


வரவேற்புரை : இலக்கிய மன்றச் செயலர்


சிறப்புரை : கின்னஸ் சாதனை படைத்த முன்னாள் மாணவர் கவிஞர். இன்சுவை


நூல் வெளியீடு : பூங்குழலி படைத்த “உள்ளங்கை உலகம்”


நன்றியுரை : ரா. அன்பரசன், பள்ளி மாணவர் தலைவர்.
அனைவரும் வருக! அமுதச் சுவை பருக!!

Monday 21 February 2022

வகுப்பு.9.புணர்ச்சி இலக்கணம்

 Question 1.

மரவேர் என்பது ……………. புணர்ச்சி
அ) இயல்பு
ஆ) திரிதல்
இ) தோன்றல்
ஈ) கெடுதல்
Answer:
ஈ) கெடுதல்

சிறுவினா

Question 1.
கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.
Answer:
“கை பிடி” – கையைப் பிடித்துக் கொள் என்று பொருள்.
“கைப்பிடி” – கைப்பிடி அளவைக் குறிப்பது. (ஒரு கைப்பிடி பருப்பு கொடு)
கை + பிடி → கைபிடி – இயல்புப் புணர்ச்சி ஆகும்.
கை + பிடி → கைப்பிடி (தோன்றல்) – விகாரப்புணர்ச்சி ஆகும்.


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எழுத்து வகையால் சொற்கள் ………… வகைப்படும்.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
Answer:
இ) 4

Question 2.
நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும் உடம்படுமெய் …………..
அ) யகர உடம்படுமெய்
ஆ)வகர உடம்படுமெய்
இ) இரண்டும் வரும்
ஈ) இரண்டும் வராது
Answer:
யகர உடம்படுமெய்


Question 3.
வட்டு + ஆடினான் = எவ்வகை புணர்ச்சியில் வரும்?
அ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி
ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி
இ) இயல்பு புணர்ச்சி
ஈ) திசைப்பெயர் புணர்ச்சி
Answer:
ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி

Question 4.
விகாரப் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களில் இடம்பெறுபவை
அ) தோன்றல்
ஆ) திரிதல்
இ) கெடுதல்
ஈ) விரிதல்
i) முதல் மூன்றும் சரி
ii) முதல் இரண்டும் சரி
iii) இறுதி மூன்றும் சரி
iv) அனைத்தும் சரி
Answer:
i) முதல் மூன்றும் சரி

Question 5.
காது, பேசு – இது எவ்வகைக் குற்றியலுகரம்.
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
இ) வன்தொடர்க் குற்றியலுகரம்
ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்
Answer:
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

Question 6.
பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு – வன்தொடர்க் குற்றியலுகரம்
அ) 4, 3, 2, 1
ஆ) 4, 2, 3, 1
இ ) 3, 2, 1, 4
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1


குறுவினா

Question 1.
உடம்படு மெய் என்றால் என்ன? அவை யாவை?
Answer:

  • உயிர் எழுத்தை இறுதியில் கொண்ட சொல்லும், உயிர்எழுத்தை முதலாக உடைய சொற்களும் வரும்போது, அவற்றை ஒன்று சேர்க்க ஒரு மெய் தோன்றும் அதுவே உடம்படுமெய் ஆகும்.
  • அவை: யகர உடம்படுமெய், வகர உடம்படுமெய் ஆகும்.

சிறுவினா

Question 1.
இயல்புப் புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி – விளக்குக.
Answer:
இயல்புப் புணர்ச்சி

  • புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்புப்புணர்ச்சி எனப்படும்.
  • சான்று : மண் + மலை = மண்மலை

விகாரப் புணர்ச்சி

  • புணர்ச்சியின் போது மாற்றங்கள் நிகழ்ந்தால் அது விகாரப்புணர்ச்சி எனப்படும். மாற்றம் மூன்று நிலைகளில் வரும். [தோன்றல், திரிதல், கெடுதல்)
  • சான்று : கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை


Question 2.
குற்றியலுகரப் புணர்ச்சியைச் சான்று தந்து விளக்குக.
Answer:

  • வட்டு + ஆடினான் = வட்(ட்+உ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்
    நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள்வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.
  • குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரத்துக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும். உறவு + அழகு = உற(வ்+உ) + அழகு = உறவ் + அழகு = உறவழகு

வகுப்பு.9. நாச்சியார் திருமொழி

)

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
Answer:
அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
Answer:
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

குறுவினா

Question 1.
கண்ண ன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
Answer:

  • கண்ணன் புகுந்த பந்தலானது முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டதாக இருந்தது.
  • மத்தளம் முழங்கியதாகவும், வரிகளை உடைய சங்குகளைஊதுபவர்கள் நின்றுகொண்டிருந்தனர் என்று, கண்ணன் புகுந்த பந்தல் இருந்த நிலையை ஆண்டாள் கூறுகிறாள்.
    “மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
    முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற்”

சிறுவினா

Question 1.
ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
Answer:

  • சதிராடும் இளம்பெண்கள், தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
  • மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
  • மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத, முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்.

வகுப்பு 9.இராவணகாவியம்


பலவுள் தெரிக

Question 1.
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……………….
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல்
இ) முல்லை
ஈ) கெடுதல்
Answer:
இ) முல்லைகற்பவை கற்றபின்


Question 1.

ஐவகை நிலங்களில் உங்கள் மாவட்டம்/ஊர் அமைந்த நிலவகை பற்றியும் அதன் கவின்மிகு காட்சியையும் படக் கட்டுரையாக்குக.

Answer:

என்னுடைய மாவட்டம் கன்னியாகுமரி. ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த நிலமாக இருப்பது என் மாவட்டத்தின் பெருமை.


கன்னியாகுமரியின் கவின்மிகு காட்சிகள்


தமிழகத்திற்குத் தென் எல்லையாகத் திகழும் எம் மாவட்டம் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. சுற்றுலாப்

குறுவினா

Question 1.
இடிகுரல், பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
இடிகுரல் – உவமைத் தொகை
பெருங்கடல் – பண்புத் தொகை

Question 2.
பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
Answer:
மராமலர்களை மாலையாக அணிந்த சிறுவர்கள், எருதின் கொம்புகளைப் போல் இருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின.
“வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால் அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே”

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு உவமைகளை எடுத்துக் காட்டுக.
Answer:
குன்று போல:
முல்லை நிலத்தவர்கள், முதிரை. சாமை, கேழ்வரகு மணி போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.

மதியம் தொடரும் மேகம் போல:
கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது, தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும். அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின் காட்சி போல் உள்ளது என்று உவமைப்படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.