இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 19 January 2022

இயல் 1 பத்தாம் வகுப்பு. கூடுதல் வினாக்கள்

 1.) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம்.

2. ) "தென்னன் மகளே” இதில் தென்னன் என்பவன் பாண்டியன்

3.) பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலமாக அமைந்தது.

4 ) சாகும் போதும் தமிழைப் படித்துச் சாக வேண்டும் எனக் கூறியவர் க.சச்சிதானந்தன்.

5 ) அன்னை மொழியே எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் கனிச்சாறு.

6.) செந்தமிழ் - பிரித்து எழுது செம்மை + தமிழ்

7 ) தும்பி என்பதன் பொருள் வண்டு

8 ) இரட்டுற மொழிதல் சிலேடை எனவும் அழைக்கப்படுகிறது.

9 ) ஒரு சொல்லோ, தொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுறமொழிதல் ஆகும்.

10 ) சந்தக்கவிமணி எனக் குறிக்கப்படுபவர் தமிழழகனார்.

11 )தமிழழகனாரின் இயற்பெயர் சண்முக சுந்தரம்

12 ) ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாக பெற்ற மொழி தமிழ்.

13 ) புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பு தனிப்பாடல் திரட்டு.

14 ) தமிழழகனார் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

15 ) 'நாடும் மொழியும் நமதிரு கண்கள் ' என்று கூறியவர் மகாகவி பாரதியார்.

16 )  “திருவள்ளுவர் தவச்சாலை “ ஒன்றை அமைத்தவர் இராஇளங்குமரனார்.

17. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் படைத்தவர் கால்டுவெல்.

18. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர்.

19. தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வருபவர் இரா. இளங்குமரனார்.

20. இரா. இளங்குமரனார் பாவாணர் நுலகத்தை உருவாக்கியவர்.

21. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கம் அமைந்திருக்கும்.

22. நெல், கேழ்வரகு இவற்றின் அடி தாள் ஆகும்.

23. கீரை, வாழை இவற்றின் அடி தண்டு ஆகும்.

24. நெட்டி, மிளகாய்ச்செடி இவற்றின் அடி கோல் ஆகும்.

25. குத்துச்செடி, புதர் இவற்றின் அடி தூறு ஆகும்.

26. கம்பு, சோளம் இவற்றின் அடி தட்டு (அதட்டை ஆகும்.

27. கரும்பின் அடி கழி ஆகும்.

28. மூங்கிலின் அடி கழை ஆகும்.

29. புளி, வேம்பு இவற்றின் அடி, அடி எனவே வழங்கப்பெறும்.

30. அடிமரத்திலிருந்து பிரியும் மாபெரும் கிளை, கவை என அழைக்கப்படும்.

31. கவையின் பிரிவு கொம்பு (அ) கொப்பு எனப்படும்.

32. கொம்பின் பிரிவு கிளை ஆகும்.

33. கிளையின் பிரிவு சினை ஆகும்.

34. சினையின் பிரிவு போத்து ஆகும்.

35. போத்தின் பிரிவு குச்சு ஆகும்.

36. குச்சியின் பிரிவு இணுக்கு ஆகும்.

37. சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை என்பன காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் பெயர்களாகும்.

38. இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு என்பன தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும்.

39. துளிர் அல்லது தளிர் என்பது நெல்புல் முதலியவற்றின் கொழுந்தாகும்.

40. முறி அல்லது கொழுந்து என்பது புளிவேம்பு இவற்றின் கொழுந்தாகும்.

41. சோளம், கரும்பு, தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து குருத்து என அழைக்கப்படுகிறது.

42. கரும்பின் நுனிப்பகுதி கொழுந்தாடை ஆகும்.

43. பூவின் தோற்ற நிலை அரும்பு

44. பூ விரியத் தொடங்கும் நிலை போது.

45. பூவின் மலர்ந்த நிலை மலர்.

46. வீ என்பது மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை.

47. பூ வாடின நிலை செம்மல்.

48. பூவோடு கூடிய இளம்பிஞ்சுக்குப் பூம்பிஞ்சு எனப் பெயர்.

49. இளம் காய் பிஞ்சு எனப்படும்.
50. மாம்பிஞ்சு வடு எனவும், பலாப்பிஞ்சு முசு எனவும் எள் பிஞ்சு கவ்வை எனவும், வழங்கப்படும்.

51. தென்னை, பனை இவற்றின் இளம்பிஞ்சு குரும்பை எனப்படும்.

52. முற்றாத தேங்காய் இளநீர் என அழைக்கப்படும்.

53. வாழைப் பிஞ்சு கச்சல் என வழங்கப்படும்.

54. வாழைக் குலை தாறு எனப்படும்.

55. புழு பூச்சி அரித்த காய்களுக்கு சொத்தை என்று பெயர்.

56. கோட்டான் காயின் வேறு பெயர் கூகைக்காய்.

57. வரகு, கேழ்வரகு, முதலியவற்றின் உமி கொம்பை ஆகும்.

58. மா, பனையின் வித்து கொட்டை எனவும், தென்னையின் வித்து தேங்காய் எனவும் வழங்கப்படும்.

59. நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை நாற்று என்றழைக்கப்படும்.

60. கடலாகக் காட்சி தருவது தமிழ்.

61. கடல் தன் அலைகளால் சங்கினைத் தடுத்து நிறுத்துகிறது.

62. கடல் மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.

63. முதலெழுத்துகள் மொத்தம் 30

64. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.

65. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தருவது சொல்.

66. அளபெடை இரண்டு வகைப்படும்.

67. உயிரளபெடை மூன்று வகைப்படும்.

68. திணை உயர்திணை, அஃறிணை என இரண்டு வகைப்படும்.

69. பால் ஐந்து வகைப்படும்.

70. இடம் தன்மைமுன்னிலைபடர்க்கை என மூன்று வகைப்படும்.

71. மொழி மூன்று வகைப்படும்.

72. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி.

73. பல சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி.

74 .தாமரை என்பது பொது மொழி.

75. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர்.

76. எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர்

No comments:

Post a Comment