இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 13 April 2017

தமிழ் புத்தாண்டு வாழ்த்து




 தன்னிழை கொண்டு
தன்னை சிறை வைக்கும்
பட்டுப்புழுவின்
தன்மையாய்...                    
எண்ணங்களால்
தன்னை சிறை வைக்கும்
எந் தோழா ..!

பட்டுப்புழு கூட
ஈரேழு நாட்களில்
வண்ணச் சிறக டித்து
விண்ணை வலம் வரும்

உந்தன் எண்ணச் சிறையிட்டு
எழுந்து வா..!

வண்ணச் சிறகடித்து 
விண்ணை வலம் வந்த நீ..
கூட்டுப் புழுவாய் 
குறுகுவது ஏன்?

நாளை உனக்காக
விடிவதில்லை
விடியும் நாளை
உனதாக்கு...!

சிந்தனையை
திசை திருப்பு
சித்திரை திருமகள்
வழிகாட்டும்
                                               ( இரா.)


No comments:

Post a Comment