இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday, 24 August 2025

இயல் 6 பாய்ச்சல் மீட்டறி வினாக்கள் (திறனாய்வுத் தேர்வு)

 

1➤ பாய்ச்சல் என்னும் சிறுகதை இடம்ை பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு
=> தக்கையின் மீது நான்கு கண்கள்
,
2➤ தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்
=> சா கந்தசாமி
,
3➤ சாயா வனம் புதினத்தால் எழுத்துலகில் மிகவும் புகழ் பெற்றவர் யார் ?
=> சா கந்தசாமி
,
4➤ விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்தை எழுதியவர் யார் ?
=> சா கந்தசாமி
,
5➤ சா கந்தசாமி எழுதிய எந்தப் புதினத்திற்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது ?
=> விசாரணைக் கமிஷன்
,
6➤ சா கந்தசாமி எழுதிய எந்த குறும்படத்திற்கு அனைத்து உலக விருது பெறப்பட்டது?
=> சுடுமண் சிலைகள்
சுடுமண் சிலை என்பது குறும்படம் என்பதை மனதில் கொள்க
,
7➤ சா கந்தசாமி எழுதிய புதினங்களில் சிலவற்றைக் குறிப்பிடு
=> சூரிய வம்சம், சாந்தகுமாரி, தொலைந்து போனவர்கள்
,
8➤ ஓங்கு இரும்பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் " என்ற வரி இடம்பெறும் நூல் எது
=> சிலப்பதிகாரம் (ஊர்காண் காதை)
இதில் காதை என்பது பெரும் பிரிவு என்பதை மனதில் கொள்க
,
9➤ தொண்டி எனக் குறிப்பிடப்படும் ஊரின் மாவட்டம்
=> ராமநாதபுரம்
,
10➤ அனுமார் வேடம் தரித்த கதை இடம்பெறும் நூல்
=> பாய்ச்சல்