இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Saturday 20 November 2021

இயல் 1 ( அன்னை மொழியே, தமிழ்ச்சொல் வளம், தொகைநிலைத் தொடர்) ஒரிரு மதிப்பெண் வினா-விடைகள்


இயல் 1

அன்னை மொழியே

 பலவுள் தெரிக
1.         ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.
அ) யசோதர காவியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) சீவக சிந்தாமணி
விடை
அ) யசோதர காவியம்
2.         உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
அ) தேன்சிட்டு
ஆ) வண்டு
இ) தேனீ
ஈ) வண்ணத்துப்பூச்சி
விடை
ஆ) வண்டு
3.        
அன்னை மொழியேஎன்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
விடை
இ) பாண்டியன்


4.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) பாவியக்கொத்து
ஆ) நூறாசிரியம்
இ) தென்தமிழ்
ஈ) பள்ளிப்பறவைகள்
விடை
இ) தென்தமிழ்

 5.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தமிழ்ச்சிட்டு
ஆ) பள்ளிப்பறவைகள்
இ) எண்சுவை எண்பது
ஈ) உலகியல் நூறு
விடை
அ) தமிழ்ச்சிட்டு


6.பொருத்துக.
1.
மாண்புகழ் அ) சிலப்பதிகாரம்
2.
மன்னும் ஆ) திருக்குறள்
3.
வடிவு இ) பத்துப்பாட்டு
4.
பாப்பத்தே ஈ) மணிமேகலை
அ) 1.2.3.4.
ஆ) 1.2.3.4.
இ) 1.2.3.ஈ. 4.
ஈ) 1.2.3.4.
விடை
அ) 1.2.3.4.


7. ‘
அன்னை மொழியேகவிதை இடம் பெறும் நூல்
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) பாவியக்கொத்து
விடை
ஆ) கனிச்சாறு

 

8.         முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
விடை
அ) பெருஞ்சித்திரனார்


9. “
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்
அ) க.சச்சிதானந்தன்
ஆ) துரை. மாணிக்கம்
இ) வாணிதாசன்
ஈ) முடியரசன்
விடை
ஆ) துரை. மாணிக்கம்



10. “
நற்கணக்கேஎன்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
அ) 18
ஆ) 10
இ) 8
ஈ) 5
விடை:
அ) 18


11.“
மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) எட்டு
விடை
ஆ) மூன்று
12. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்
விடை அ) பெருஞ்சித்திரனார்


13.       பெருஞ்சித்திரனார் பாடலில் பழமைக்குப் பழமைஎன்னும் பொருள் தரும் சொல்.
அ) முன்னை முகிழ்ந்த
ஆ) முன்னைக்கும் முன்னை
இ) முன்னும் நினைவால்
ஈ) முந்துற்றோம் யாண்டும்
விடை
ஆ) முன்னைக்கும் முன்னை


14.      
பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.
அ) பாடல் பத்து, எண் தொகை
ஆ) பா பத்து, எட்டுத் தொகை
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
ஈ) பத்தும் எட்டும்
விடை
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

15. பெருஞ்சித்திரனாரின் முந்துற்றோம் யாண்டும்’, ‘தமிழ்த்தாய் வாழ்த்துஎன்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன? அ) எண்சுவை எண்பது
ஆ) உலகியல் நூறு
இ) நூறாசிரியம்
ஈ) கனிச்சாறு
விடை
ஈ) கனிச்சாறு

 

16.செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல பயின்று வரும் அணி
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) தற்குறிப்பேற்றணி
விடை:
அ) உவமையணி

17. செந்தமிழ் பிரித்து எழுதுக.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) செ + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
விடை
ஈ) செம்மை + தமிழ்

 18.      செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) அன்மொழித்தொகை
விடை
அ) பண்புத்தொகை
19.உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள இவ்வடியில் காணும் நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
விடை
அ) மோனை

20. தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

இப்பாடலில் அமைந்த எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) தென்னன்
ஆ) மன்னும்
இ) இன்ன றும்
ஈ) இவையனைத்தும்
விடை
ஈ) இவையனைத்தும்

21.‘அன்னை மொழியேஎன்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர்
அ) சுந்தரனார்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) பாவாணர்
விடை
இ) பெருஞ்சித்திரனார்

 22.“சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்என்று பாடியவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) சச்சிதானந்தன்
ஈ) ஆறுமுகநாவலர்
விடை
இ) சச்சிதானந்தன்

23. பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?
அ) பாவியக்கொத்து
ஆ) கனிச்சாறு
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
ஈ) உலகியல் நூறு
விடை
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை

 24. தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
அ) கண்ண தாசன்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) திரு.வி.க
விடை
இ) பெருஞ்சித்திரனார்

பாடம்- 2. தமிழ்ச்சொல் வளம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?
அ) அரும்பு
ஆ) மலர்
இ) வீ
ஈ) செம்மல்
விடை
இ) வீர

2.திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) பாவாணர்
ஆ) கால்டுவெல்
இ) இரா. இளங்குமரனார்
ஈ) திரு.வி.க
விடை
ஆ) கால்டுவெல்

 3.திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?
அ) அல்லூர்
ஆ) திருவள்ளூர்
இ) கல்லூர்
ஈ) நெல்லூர்
விடை
அ) அல்லூர்

4. குச்சியின் பிரிவு எச்சொல்லால் அழைக்கப்படுகிறது? அ) போத்து
ஆ) குச்சி
இ) இணுக்கு
ஈ) சினை
விடை
இ) இணுக்கு

5.பொருத்துக.
1.
தாள் அ) குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
2.
தண்டு ஆ) நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
3.
கோல் இ) தண்டு, கீரை முதலியவற்றின் அடி
4.
தூறு ஈ) நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
அ) 1.2.3.4.
ஆ) 1.2.3.4-
இ) 1.2.3.4.
ஈ) 1.2.3.4.
விடை
அ) 1.2.3.4.

6.பொருத்துக.
1.
தட்டு அ) கரும்பின் அடி
2.
கழி ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் அடி
3.
கழை இ) கம்பு, சோளம்
முதலியவற்றின் அடி ஈ) மூங்கிலின் அடி
அ) 1.2.3.ஈ. 4.
ஆ) 1.2.3.ஈ. 4.
இ) 1.2.3.4.
ஈ) 1.2.3.4.
விடை
ஆ) 1.2.3.4.

7. பொருத்துக.
1.
கவை அ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
2.
கொம்பு ஆ) கிளையின் பிரிவு
3.
சினை இ) கவையின் பிரிவு
4.
போத்து ஈ) சினையின் பிரிவு
அ) 1.2.3.4.
ஆ) 1.2.3.4.
இ) 1.2.3.ஈ. 4.
ஈ) 1.2.3.4.
விடை
அ) 1.2.3.4.

8.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தூறு
ஆ) கழி
இ) கழை
ஈ) கவை
விடை:
ஈ) கவை

9.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தாள்
ஆ) தண்டு
இ) கிளை
ஈ) கோல்
விடை
இ) கிளை

10.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) கவை
ஆ) தட்டு
இ) கொம்பு
ஈ) சினை
விடை
ஆ) தட்டு

11.பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) கவை குச்சியின் பிரிவு
ஆ) கொம்பு கவையின் பிரிவு
இ) போத்து சினையின் பிரிவு
ஈ) குச்சி போத்தின் பிரிவு
விடை
அ) கவை-குச்சியின் பிரிவு

 

12.வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) தாள், தண்டு, கோல், தூறு
ஆ) கவை, கொம்பு, கிளை, சினை
இ) சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை
ஈ) கழி, குச்சு, இணுக்கு, கழை
விடை
ஈ) கழி, குச்சு, இணுக்கு, கழை

 13.பொருத்துக.
1.
இலை அ) தென்னை , பனை முதலியவற்றின் இலை
2.
தாள் ஆ) சோளம், கம்பு முதலியவற்றின் அடி
3.
தோகை இ) புளி, வேம்பு முதலியவற்றின் இலை
4.
ஓலை ஈ) நெல், புல் முதலியவற்றின் இலை
அ) 1.2.3.4.
ஆ) 1.2.3.4.
இ) 1.2.3.4.
ஈ) 1.2.3.4.
விடை
ஆ) 1.2.3.4.

14.பொருத்தமற்ற ஒன்றைக் கண்டறிக.
அ) சண்டு
ஆ) சருகு
இ) தோகை
ஈ) கட்டை
விடை:
ஈ) கட்டை

15. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) சண்டு காய்ந்த தாளும் தோகையும்
ஆ) சருகு காய்ந்த இலை
இ) தாள் புலி, வேம்பு முதலியவற்றின் இலை
ஈ) தோகை சோளம், கம்பு முதலியவற்றின் இலை
விடை
இ) தாள் புலி, வேம்பு முதலியவற்றின் இலை

16. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) தோகை, ஓலை, சண்டு, சருகு
ஆ) துளிர், முறி, கொழுந்து, கொழுந்தாடை
இ) பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, கவ்வை
ஈ) கருக்கல், கச்சல், கொத்து, குலை
விடை
ஈ) கருக்கல், கச்சல், கொத்து, குலை

 17. தும்பி இச்சொல்லின் பொருள்
அ) தும்பிக்கை
ஆ) வண்டு
இ) துந்துபி
ஈ) துன்பம்
விடை
ஆ) வண்டு

18.தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் சரியானவற்றைச் தேர்ந்தெடு.
அ) இலை, தாள், தோகை, ஒலை, சண்டு, சருகு
ஆ) இலை, தோகை, தாள், தளிர், குருத்து, அரும்பு
இ) தாள், தோகை, தூறு, தட்டு, தண்டு, ஓலை
ஈ) இலை, தாள், ஓலை, தளிர், கொழுந்து, சண்டு
விடை
அ) இலை, தாள், தோகை, ஒலை, சண்டு, சருகு

 19.‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்என்று பாடியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன் இ) பெருஞ்சித்திரனார்
ஈ) தேவநேயப் பாவாணர்
விடை
அ) பாரதியார்

20.சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.கலியாணசுந்தரனார்
ஈ) மறைமலையடிகள்
விடை
ஆ) இளங்குமரனார்

21.பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.க
ஈ) மறைமலையடிகள்
விடை
ஆ) இளங்குமரனார்

22.தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) இளங்குமரனார்
ஈ) பெருந்தேவனார்
விடை
இ) இளங்குமரனார்

23.விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?
அ) ஜி. யு. போப்
ஆ) வீரமாமுனிவர்
இ) இளங்குமரனார்
ஈ) பெருங்குமரனார்
விடை
இ) இளங்குமரனார்

24. இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்?
அ) திரு.வி.க
ஆ) பாவாணர்
இ) மு.வ
ஈ) ஜீவா
விடை
அ) திரு.வி.க

 25. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்
அ) தமிழழகனார்
ஆ) அப்பாத்துரையார்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) இரா.இளங்குமரனார்
விடை
ஈ) இரா.இளங்குமரனார்

26.விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் வாய்ந்த வர்கள் ………… …………
அ) திரு.வி.க., இளங்குமரனார்
ஆ) தமிழழகனார், அப்பாத்துரையார்
இ) தேவநேயப் பாவாணர், கால்டுவெல்
ஈ) பெருஞ்சித்திரனார், சுந்தரனார்
விடை
அ) திரு.வி.க., இளங்குமரனார்

27.தமிழ்த்தென்றல்என்று போற்றப்பட்டவர் யார்?
அ) இளங்குமரனார்
ஆ) பெருந்தேவனார்
இ) திரு.வி.க
ஈ) ம.பொ .சி
விடை
இ) திரு.வி.க

28.உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் யார்?
அ) மலேசியா, க. அப்பாத்துரையார்
ஆ) சிங்கப்பூர், தேவநேயப் பாவாணர்
இ) இந்தியா, இளங்குமரனார் ஈ) கனடா, ஜி.யு. போப்
விடை
அ) மலேசியா, க. அப்பாத்துரையார்

29.‘பன்மொழிப் புலவர்என்றழைக்கப்பட்டவர் யார்?
அ) க.அப்பாத்துரையார்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) ஜி.யு.போப்
விடை
அ) க.அப்பாத்துரையார்

30.சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?
அ) 30
ஆ) 60
இ) 40
ஈ) 80
விடை
ஆ) 60

31. ‘மொழி ஞாயிறுஎன்றழைக்கப்பட்டவர் யார்? அ) க.அப்பாத்துரை
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) ஜி.யு.போப்
விடை
ஆ) தேவநேயப் பாவாணர்

 32. ‘தமிழ்ச்சொல் வளம்என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் எது?
அ) சொல்லாய்வுக் கட்டுரைகள், தேவநேயப் பாவாணர்
ஆ) தேவநேயம், இளங்குமரனார்
இ) மொழி மரபு, மு.வ ஈ) ஆய்வியல் நெறிமுறைகள், பொற்கோ
விடை
அ) சொல்லாய்வுக் கட்டுரைகள், தேவநேயப் பாவாணர்

 33.
பொருத்திக் காட்டுக.
i)
சுள்ளி – 1. காய்ந்த குச்சு (குச்சி)
iii)
விறகு – 2. காய்ந்த சிறுகிளை
iii)
வெங்கழி – 3. காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
iv)
கட்டை – 4. காய்ந்த கழி
அ) 1, 2, 4, 3
ஆ) 2, 1. 3, 4
இ) 1, 3, 4, 2
ஈ) 4, 3, 2, 1
விடை
அ) 1, 2, 4, 3

 34. பொருத்திக் காட்டுக.
i)
இளநீர் – 1. வாழைப்பிஞ்சு
ii)
நுழாய் – 2. இளநெல்
iii)
கருக்கல் – 3. இளம்பாக்கு
iv)
கச்ச ல் – 4. முற்றாத தேங்காய்
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 4, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 4, 2, 1
விடை
அ) 4, 3, 2, 1

 35. பொருத்திக் காட்டுக.
i)
சிவியல் சூட்டினால் பழுத்த பிஞ்சு
ii)
அளியல் பதராய்ப் போன மிளகாய்
iii)
சொண்டு குளுகுளுத்த பழம்
iv)
வெம்பல் சுருங்கிய பழம்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 3, 4, 2
ஈ) 1, 3, 4, 2
விடை
அ) 4, 3, 2, 1

 36. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களுக்கு எது அமைந்திருக்கும்? அ) அன்பொழுக்கம்
ஆ) அறிவொழுக்கம்
இ) களவொழுக்கம்
ஈ) கற்பொழுக்கம்
விடை:
ஆ) அறிவொழுக்கம்

 37.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) வெள்ளைவாரணார்
இ) இளங்குமரனார்
ஈ) பெருந்தேவனார்
விடை
அ) தேவநேயப் பாவாணர்

 38.
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
அ) தனிநாயகம் அடிகள்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) மு. வரதராசனார்
விடை
ஆ) தேவநேயப் பாவாணர்

39. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் எது?
அ) லெபனான்
ஆ) லிசுபன்
இ) கெய்ரோ
ஈ) ஹராரே
விடை
ஆ) லிசுபன்

 

40.இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
அ) இந்தி
ஆ) தமிழ்
இ) தெலுங்கு
ஈ) வங்காளம்
விடை
ஆ) தமிழ்

41.கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது?
அ) ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
ஆ) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
இ) செம்மொழி மாநாட்டு மலர்
ஈ) தமிழிலக்கிய வரலாறு மு.வ.
விடை
அ) ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

 42. கொழுந்தாடை என்பது யாது?
அ) நெல், புல் ஆகியவற்றின் கொழுந்து
ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
இ) தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து
ஈ) கரும்பின் நுனிப்பகுதி
விடை
ஈ) கரும்பின் நுனிப்பகுதி

இலக்கணம்

எழுத்து

-------------------------------------------------

 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.      குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) இரண்டு
விடை
ஆ) நான்கு

2.      எஃஃகிலங்கிய, உரனசைஇ இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை
ஈ) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை
விடை
அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை

3.      ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
அ) 11)
ஆ) 13
இ) 15
ஈ) 12
விடை
அ) 11

4.      பொருத்துக.
i)
ஓ ஒதல் வேண்டும் – 1. இன்னிசை அளபெடை
ii)
கெடுப்பதூஉம் 2. செய்யுளிசை அளபெடை
iii)
உரனசைஇ – 3. ஒற்றளபெடை
iv)
எஃஃகிலங்கிய – 4. சொல்லிசை அளபெடை
அ) i.2 ii.1 ili.4 iv.3
ஆ) i.4 ii.3 ili.2 iv.1
இ) i.2 ii.3 iii.4 iv.1
ஈ) ii.4 iii.1 iv.2
விடை
அ) i.2 ii.1 iii.4 iv.3

5.      வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) உறாஅர்
ஆ) கெடுப்பதூஉம்
இ) வரனசைஇ
ஈ) எஃஃகிலங்கிய
விடை
ஈ) எஃஃகிலங்கிய

6.பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) ஓஒதல்
ஆ) உறாஅர்க்கு
இ) படாஅபறை
ஈ) தம்பீஇ
விடை
ஈ) தம்பீஇ

 

6.      பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க.
அ) படி
ஆ) வேங்கை
இ) கண்ண ன்
ஈ) கண்ணன் வந்தான்
விடை
ஆ) வேங்கை

7.      எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்
அ) எட்டு
ஆ) எள்ளை உண்
இ) வேகின்ற கை
ஈ) எள்ளை எடு
விடை
ஆ) எள்ளை உண்

8.      பொருத்துக.
1.
நடத்தல் அ) எதிர்மறைத் தொழிற்பெயர்
2.
கொல்லாமை ஆ) வினையாலணையும் பெயர்
3.
கேடு இ) தொழிற்பெயர்
4.
வந்தவர் ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
அ) 1.2.3.4.
ஆ) 1.2.3.ஈ. 4.
இ) 1.2.3.ஈ. 4.
ஈ) 1.2.3.4.
விடை
ஆ) 1.2.3.ஈ. 4.

9.      எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க.
அ) கொல்லாமை
ஆ) வாழ்க்கை
இ) நடத்தல்
ஈ) சூடு
விடை
அ) கொல்லாமை

10.  மொழியின் சிறப்புகளை அறிய துணை செய்வது
அ) கவிதை
ஆ) இலக்கணம்
இ) உரைநடை
ஈ) எதுவுமில்லை
விடை
ஆ) இலக்கணம்

11.  சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
அ) முப்பது
ஆ) பன்னிரண்டு
இ) பத்து
ஈ) ஒன்பது
விடை
இ) பத்து

12.  உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
விடை
ஆ) மூன்று

13.  நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?
அ) செய்யுளிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
ஈ) எதுவுமில்லை
விடை
அ) செய்யுளிசை அளபெடை

14.  சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?
அ) செய்யுளிசை அளபெடை
ஆ) சொல்லிசை அளபெடை
இ) இன்னிசை அளபெடை
ஈ) எதுவுமில்லை
விடை
ஆ) சொல்லிசை அளபெடை

15.  மொழி என்பது எத்தனை வகை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
விடை
ஆ) மூன்று

 

16.  அந்தமான்என்பது எவ்வகை மொழி?
அ) தொடர் மொழி
ஆ) தனி மொழி
இ) பொது மொழி
ஈ) எதுவுமில்லை
விடை
இ) பொது மொழி

17.  பொருத்திக் காட்டுக.
1.
அந்தமான் அ) தொடர்மொழி
2.
கண் ஆ) தொழிற்பெயர்
3.
நடத்தை இ) பொதுமொழி
4.
கண்ணன் வந்தான் ஈ) தனிமொழி
அ) 1.2.3.4.
ஆ) 1.2.3.4.
இ) 1.2.3.4.
ஈ) 1.2.3.4.
விடை
இ) 1.2.3.4.

18.  உறாஅர்க்கு, வரனசைஇ அளபெடை வகை
அ) சொல்லிசை, இன்னிசை
ஆ) ஒற்றளபெடை, சொல்லிசை
இ) செய்யுளிசை, சொல்லிசை
ஈ) இன்னிசை, சொல்லிசை
விடை
இ) செய்யுளிசை, சொல்லிசை

19.  தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது
அ) தொழிற்பெயர்
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) வினையாலணையும் பெயர்
விடை:
ஈ) வினையாலணையும் பெயர்]

20.  மூவிடத்திற்கும் உரியது ………….; படர்க்கைக்கே உரியது ………….
அ) தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்
ஆ) வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்
இ) உரிச்சொற்றொடர், வினையாலணையும் பெயர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை
ஆ) வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்

21.  நடத்தல்என்னும் சொல்லில் நடஎன்பது
அ) வினையடி
ஆ) விகுதி
இ) தொழிற்பெயர்
ஈ) இடைநிலை
விடை
அ) வினையடி

22.  வேம் + கைஎன்பதன் பொருள்
அ) வேட்கை
ஆ) வேங்கை
இ) வேகின்ற கை
ஈ) வேகாத கை
விடை
) வேகின்ற கை

23.  வாழ்க்கை என்னும் சொல்லுக்குரிய விகுதியைக் குறிப்பிடுக.
அ) வாழ்
ஆ) க்
இ) கை
ஈ) ஐ
விடை
இ) கை

24.  அளபெடுத்தல் என்பதன் பொருள்
அ) நீண்டு ஒலித்தல்
ஆ) குறுகி ஒலித்தல்
இ) அளவாக ஒலித்தல்
ஈ) ஒலித்தல் இல்லை
விடை:
அ) நீண்டு ஒலித்தல்

25.  நசைஇஎன்பதன் பொருள்
அ) விருப்பம்
ஆ) விரும்பி
இ) துன்பம்
ஈ) கவனித்து
விடை
ஆ) விரும்பி

இயல் – 2

காற்றே வா

பலவுள் தெரிக

1.கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி.
அ) மயலுறுத்து மயங்கச்செய்
ஆ)ப்ராண ரஸம் உயிர்வளி
இ) லயத்துடன் சீராக
ஈ) வாசனை மனம்
விடை:
ஈ) வாசனை மனம்

 2. பொருத்திக் காட்டுக.
i)
பாஞ்சாலி சபதம் – 1. குழந்தைகளுக்கான நீதிப்பாடல்
ii)
சுதேசமித்திரன் – 2. பாராட்டப்பெற்றவர்
iii)
புதிய ஆத்திசூடி – 3. இதழ்
iv)
சிந்துக்குத் தந்தை – 4. காவியம்
அ) 3, 4, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
விடை:
இ) 4, 3, 1, 2

 3.
‘‘
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலாஎன்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
விடை:
அ) பாரதியார்

 4.
சிந்துக்குத் தந்தைஎன்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
விடை:
அ) பாரதியார்

 5.
கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
விடை:
அ) பாரதியார்

 6.
பாட்டுக்கொரு புலவன் என்று பாராட்டப்பெறுபவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
விடை:
அ) பாரதியார்

 7.
காற்றுஎன்னும் தலைப்பில் வசன கவிதை எழுதியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
விடை:
அ) பாரதியார்

 8.
காற்றே , வா மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா” – என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
விடை:
அ) பாரதியார்

 9.
ப்ராண-ரஸம் என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) சீராக
ஆ) அழகு
இ) உயிர்வளி
ஈ) உடல்உயிர்
விடை:
இ) உயிர்வளி

 10.
வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வல்லிக்கண்ணன்
இ) பிச்சமூர்த்தி
ஈ) பாரதியார்
விடை:
ஈ) பாரதியார்

 11.
காற்றே வாஎன்னும் கவிதையின் ஆசிரியர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
விடை:
அ) பாரதியார்

 12.
காற்று எதைச் சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?
அ) கவிதையை
ஆ) மகரந்தத்தூளை
இ) விடுதலையை
ஈ) மழையை
விடை:
ஆ) மகரந்தத்தூளை

 13.
பொருத்திக் காட்டுக:
i)
மயலுறுத்து – 1. மயங்கச் செய்
ii)
ப்ராண ரஸம் – 2. உயிர்வளி
iii)
லயத்துடன் – 3. மணம்
iv)
வாசனை – 4. சீராக
அ) 1, 2, 4, 3
ஆ) 2, 3, 1, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
விடை:
அ) 1, 2, 4, 3

 14.
ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
விடை:
ஆ) பாரதியார்

 15.
புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம்
அ) பாரதியின் வசன கவிதை
ஆ) ஜப்பானியரின் ஹைக்கூ
இ) வீரமாமுனிவரின் உரைநடை
ஈ) கம்பரின் கவிநயம்
விடை:
அ) பாரதியின் வசன கவிதை

 16.
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i)
இந்தியா
ii)
சுதேசமித்திரன்
iii)
எழுத்து
iv)
கணையாழி
அ) i, ii – சரி
ஆ) முதல் மூன்றும் சரி
இ) நான்கும் சரி
ஈ) i, ii – தவறு
விடை:
அ) i, ii – சரி

 17.
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட என்ற இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
விடை:
அ) பாரதியார்

 18.
இனிய வாசனையுடன் வாஎன்று பாரதி அழைத்தது
அ) காற்று
ஆ) மேகம்
இ) குழந்தை
ஈ) அருவி
விடை:
அ) காற்று

 19.
பாரதியார் காற்றை மயலுறுத்துஅழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்
அ) மணம் வீசும் காற்றாய் நீ வா
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா
இ) மயிலாடும் காற்றாய் நீ வா
ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா
விடை:
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா

தொகைநிலைத் தொடர்

பலவுள் தெரிக

 1.தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
விடை:
ஈ) ஆறு

 2.கீழ்க்காணும் சொற்களில் உம்மைத்தொகை அல்லாத சொல் எது?
அ) தேர்ப்பாகன்
ஆ) அண்ண ன் தம்பி
இ) வெற்றிலை பாக்கு
ஈ) இரவு பகல்
விடை:
அ) தேர்ப்பாகன்

 3.‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?
அ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை
விடை:
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

 4. பொருத்துக.
1.
மதுரை சென்றார் அ) வினைத்தொகை
2.
வீசு தென்றல் ஆ) பண்புத்தொகை
3.
செங்காந்தள் இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4.
மார்கழித் திங்கள் ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
அ) 1.2.3.4.
ஆ) 1.2.3.4.
இ) 1.2.3.4.
ஈ) 1.2.3.4.
விடை:
அ) 1.2.3.4.

 5.பொருத்துக.
1.
உவமைத்தொகை அ) முறுக்கு மீசை வைத்தார்
2.
உம்மைத்தொகை ஆ) மலர்க்கை
3.
அன்மொழித்தொகை இ) வட்டத்தொட்டி
4.
பண்புத்தொகை ஈ) அண்ணன் தம்பி
அ) 1.2.ஈ. 3.4.
ஆ) 1.2.3.4.
இ) 1.2.3.4.
ஈ) 1.2.3.4.
விடை:
அ) 1.2.3.4.

 6.பண்புத்தொகை அல்லாத ஒன்று அ) செங்காந்தள்
ஆ) வட்டத்தொட்டி
இ) இன்மொழி
ஈ) கொல்களிறு
விடை:
ஈ) கொல்களிறு

 7.காலம் கரந்த பெயரெச்சம்
அ) வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை:
அ) வினைத்தொகை

 8.வேற்றுமையுருபு அல்லாதது
அ) ஐ, ஒடு
ஆ) கு, இன்
இ) ஆகிய, ஆன
ஈ) அது, கண்
விடை:
இ) ஆகிய, ஆன

 9.பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) வினைத்தொகை தேர்ப்பாகன்
ஆ) பண்புத்தொகை இன்மொழி
இ) உம்மைத்தொகை தாய் சேய்
ஈ) அன்மொழித்தொகை சிவப்புச்சட்டை பேசினார்
விடை:
அ) வினைத்தொகை தேர்ப்பாகன்

 10.‘மலர் போன்ற கைஇதில் மலர்என்பது ………………….. ‘போன்றஎன்பது ……………… ‘கைஎன்பது…………………..
அ) உவம உருபு உவமை உவமேயம்
ஆ) உவமை உவம உருபு உவமேயம்
இ) உவமேயம் உவமை உவம உருபு
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
விடை:
ஆ) உவமை உவம உருபு உவமேயம்

 11.சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும் தொகைச்சொல்
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை:
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

 12.மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?
அ) மார்கழி, சாரை
ஆ) திங்கள், பாம்பு
இ) மார்கழி, பாம்பு
ஈ) திங்கள், சாரை
விடை:
ஆ) திங்கள், பாம்பு

 13.‘செங்காந்தள்’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) ஐ
விடை:
ஆ) ஆகிய

 14.‘இன்மொழி’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) இன்
விடை:
அ) ஆன

 15.‘மதுரை சென்றாள்’ – இவ்வேற்றுமைத்தொகைச் சொல்லில் இடம்பெறும் வேற்றுமை உருபு
அ) கு
ஆ) கண்
இ) ஆல்
ஈ) அது
விடை:
அ) கு

 16.கரும்பு தின்றான் இத்தொடர் …………………………….. வேற்றுமைத்தொடர்.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) நான்காம்
ஈ) ஆறாம்
விடை:
அ) இரண்டாம்

 17.நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கான சொல்
அ) தேர்ப்பாகன்
ஆ) தமிழ்த்தொண்டு
இ) கரும்பு தின்றான்
ஈ) மதுரை சென்றார்
விடை:
ஆ) தமிழ்த்தொண்டு

 18.பொருத்திக் காட்டுக.
i)
வீசு தென்றல் – 1. உம்மைத் தொகை
ii)
செங்காந்தள் – 2. உவமைத்தொகை
iii)
மலர்க்கை – 3. பண்புத்தொகை
iv)
தாய்சேய் – 4. வினைத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 3, 4, 1
விடை:
அ) 4, 3, 2, 1

 19. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்
அ) மலர்க்கை
ஆ) அண்ண ன் தம்பி
இ) மார்கழித்திங்கள்
ஈ) தேர்ப்பாகன்
விடை:
இ) மார்கழித்திங்கள்

 20.பொருத்துக.
i)
இன்மொழி – 1. உவமைத்தொகை
ii)
தாய்சேய் – 2. வினைத்தொகை
iii)
முத்துப்பல் – 3. உம்மைத் தொகை
iv)
வருபுனல் – 4. பண்புத்தொகை
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
விடை:
ஈ) 4, 3, 1, 2

 21.சிவப்புச்சட்டை பேசினார் அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை:
அ) பண்புத்தொகை