செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Saturday 9 September 2017

தமிழால் சிறப்போம், - ” நீரோட்டகம் ” அறிவோம் !


சித்திரக் கவி வகைல இருபதுக்கு மேல இருக்கு. 


நீரோட்டகம் 

                    அதுல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். 

ஒட்டியம் 

உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம்.


                இப்ப நீரோட்டகத்துல நான் பெத்த மகளை மையப்படுத்தி ஒரு கவிதை! அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக சொல்லுல வராமப் பாடினா மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாது, குவியாது பாருங்க:


அழகே, கனியே, கணையே, எந்தன் நிலாளே,
கணணழகே, நெஞ்சே, தயாளினியே, தென்றல்நீ!
நாசிநிறை காற்றே, சீரே, எந்தன்ஆசை அறிநீ!!
நின்நகை காணல் சால்நிறை ஆகின்றேன்;
கலையரசி நீ ஆக, இறை ஆசி நினைச்சேர,
யான் ஈசனின் தயா இறைஞ்சி!!!


பொருளுரை: 
                  அழகே, கனியே, கணையாழி போன்றதொரு சிறப்பே, எந்தன் நிலா மகளே, விழியழகே, நெஞ்சில் எப்போதும் நினைவாய் இருப்பவளே, கருணையுள்ளம் கொண்டவளே, என்வாழ்வில் தென்றலாய்ப் பிறந்தவள் நீ. என் சுவாசமே, செல்வச்சீரே, என் ஆசை அறிவானவளே, உன் சிரிப்பைக் கண்டால் எனக்கு நெஞ்சம் நிறையும். நீ கலைகளில் சிறப்பு பெற, இறைவன் ஆசி உமக்குக் கிடைக்க, நான் எல்லாம் வல்ல இறைவன் அந்த சிவபெருமானின் அருள் வேண்டி இறைஞ்சுகிறேன். 

மேலதிகத் தகவல்: 

ஆசுகவி-
                பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்த பின், மற்றவர் "பாடும்" என்று சொன்னவுடன், பாடுவோன் ஆசுகவியாம்.



மதுரகவி -



              சொல்லினிமை, பொருளினிமை, தொடை, தொடை விகற்பம், செறிய உருவகம் முதலிய அலங்காரத்துடன் இன்னோசையுடைதாய் அமுதமுறப் பாடுபவன் மதுரகவியாம்.

சித்திரக்கவி -

                  மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்று கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப்பா, வல்லினப்பா, மெல்லினப்பா, இடையினப்பா, சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்பநடை, வினா உத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்துவருத்தனை, நாகபந்தம், முரசபந்தம், நீரோட்டகம், சித்து, ஒருபொருட்பாட்டு, பல பொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச்சுருக்கம் இவை முதலிய தெரிந்து பாடுவோன் சித்திரக்கவியாம். 



வித்தாரக்கவி -


மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடல் ஊர்தல், கிரீடை, இயல், இசை, கூத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப்பாடுவோன் வித்தாரக்கவியாம்.

                                                                                                       -( தொடரும்..)

Tuesday 5 September 2017

அட்டநாகபந்தம்

சித்திரக்கவியின் வகைகள்

1.அட்டநாக பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்டநாக பந்தம், தமிழழகன் பாடல்
அட்டநாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று. எட்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும். பாடல் (கவிதை) ஒன்று அந்தப் பிணைப்பினூடே நுழைந்து படிக்கும்போது பாடல் பொருந்தி வருமாறு ஓவியப்பா அமைந்திருக்கும்[1]. பாடலைப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரையில் சென்று படித்துக்கொள்ள வேண்டும்.
சொல்வளம் மிக்கவர் இதனைப் பாடுவர். ஓவியப் பாவைச் சித்திரக்கவி என்பர்.
ஔவை சண்முகம் பற்றி திருவையாறு அப்துல்கபூர் சாயபு இருபதாம் நூற்றாண்டில் பாடிய சித்திரக்கவி நூல் ஒன்று உண்டு. [2] சொல்லணிப் பாடல்களில் நாட்டம் கொண்ட தமிழழகன் பாடிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
தமிழழகன் கவிதை
பாரதிக் கெல்லை
பாருக்குளே இல்லை
இதனைப் பாடுவதற்கு இவர் கூறும் எளிய வழி
  • 15 எழுத்தில் ஈரடிக் கவிதை அமையவேண்டும்
  • 4ஆவது எழுத்தும், 10ஆவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதனைப் பொருத்திப் பார்த்து அறிந்துகொள்க
நாரணனை நாடு
பூரணனைக் கொண்டாடு
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்[3]











Friday 1 September 2017



இலக்கிய மன்றத்தின் உட்கூறுகள்



பேச்சின் திறன்


கவிதை வாசித்தல்

Wednesday 30 August 2017

சித்திரக்கவி - விளக்கம்



சித்திரக் கவி- விளக்கம்
    பத்தாம் வகுப்பு  இயல் 1 ல் துணைப்பாடம் ”பரிதிமாற்கலைஞர்” பாடத்தில், பரிதிமாற்கலைஞர் சித்திரக்கவி எழுதும் புலமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சித்திரக்கவி என்றால் என்ன? என்பதற்கான விளக்கம்  இதோ உங்கள் முன்.

தமிழர்களது அழிந்து கொண்டுவரும் கலைகளில் ஒன்றான சித்திரக் கவி பற்றி ஆராய்வது எங்கள் முன்னே உள்ள தேவையை உணர்த்தி நிற்கின்றது . இந்த சித்திரக் கவி எப்படிப்பட்டது என்று பார்பதற்கு முதல் , சித்திரக் கவி என்றால் என்ன என்பதும் அதன் ஆதிமூலத்தையும் நாம் பார்க்க வேண்டும் .

தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றில் , அணி இலக்கணத்தை விளக்குமுகமாக எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்தத் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் அண்ணளவாக பனிரண்டாம் நூற்றாண்டுகளாகும் ( (1133-1150) . இந்த தண்டியலங்காரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டு ( பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ) சொல்லணியியலில் சித்திரக் கவி பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன .

எங்களால் உருவாகப்பட்ட அனைத்துக் கலை வடிவங்களுமே இலக்கியத்தை மையபடுத்தியே சுற்றிச் செல்கின்றன . எப்படி என்றால் , ஒரு இலக்கியத்தைக் கேட்பதாலும், எழுதுவதாலும், பேசுவதாலும், உணருவதாலும், காட்சியாக வரைவதாலும், காட்சியாகக் காண்பதாலும் மனித மனத்தை மகிழ்ச்சி அடையச் செய்ய இயலும் ஒரு கவிதையை இசையோடு இனிமையாகப் பாடினால் அதைக் கேட்பவர் மகிழ்ச்சி அடைகின்றார் . இதன் மூலம் இலக்கியம் இசையோடு கலந்து விடும் கலையாகி விடுகிறது.

அதேபோல் ஒரு கவிதையை அபிநயம் பிடித்து நடனம் ஆடினால், அது நாட்டியக் கலையாக அமைந்து விடுகிறது. அதே கவிதை தரும் பொருளை, இருவர் உரையாடும் நாடகக் காட்சியாக மாற்றி நடித்தால் நாடகக் கலை உருவாகி விடுகிறது. இதையே திரைப்படமாக , அசையும் படமாக , தொலைக்காட்சித் தொடராக , காட்சிப் படமாகவும் ஆக்கவும் முடியும் . இவ்வாறாக இலக்கியமானது மற்றய கலைகளுக்கு மையமாகவும், மற்ற கலைகள் இலக்கியத்தைச் சார்ந்து அமைவனவாகவும் விளங்குகின்றன.

இலக்கியத்தில் இடம் பெறும் மொழியே, சொல்லே, எழுத்தே ஓவியம் போல அமைந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அவ்வாறு எழுத்துகள் செய்யுளுக்குள்ளேயே ஓவியமாக மடங்கி நிற்கும் முறையே, அமைப்பே சித்திரகவி என்று வகைப்படுத்திக் கொள்ளலாம் .

ஒரு கவிதைக்குள் , எழுத்துகள் மடங்கி, மடங்கி நின்று ஓவியமாக அமைவதை சித்திரகவி என்று சொல்லலாம் . உதாரணமாகப் பின்வரும் பகுதியைப் பார்ப்போம் .


eohn.jpg

இந்தப் படத்திலே , "பாப்பா" என்ற சொல்லு நெடுக்கு வாட்டிலும், குறுக்கு வாட்டிலும் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட படத்தில் ஆறு இருமுனை அம்புக்குறிகள் காட்டப் பட்டுள்ளன . இதன் மூலமாக 12 முறை பாப்பா என்ற சொல்லை நீங்கள் எடுக்க முடியும். இது ஒருவகையான வடிவ விளையாட்டாகும் ஆனால் . இந்த விளையாட்டைக் கவிதைக்குள் செய்வது, சித்திரகவி எனப்படுகிறது.
 

இந்த சித்திரக் கவியின் வகைகளை இதன் ஆதி மூலமான தண்டியலங்கரத்தில் ஒரு நூற்பா வடிவத்தில் நாங்கள் காணலாம் ,

கோமூத் திரியே, கூட சதுக்கம்,
மாலை மாற்றே, எழுத்து வருத்தனம்,
நாக பந்தம், வினாவுத் தரமே,
காதை கரப்பே, கரந்துறைச் செய்யுள்,
சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம்,
அக்கரச் சுதகமும் அவற்றின் பால
(தண்டியலங்காரம்-97)

அதாவது , கோமூத்திரி , கூடச் சதுக்கம் , மாலைமாற்று , எழுத்து வருத்தனம் , நாக பந்தம் , வினாவுத்தரம் , காதை கரப்பு , கரந்துறைப்பாட்டு , சக்கர பந்தம் , சுழிகுளம் , சருப்பதோ பத்திரம் , அக்கரச் சுதகம் , என்று பன்னிரெண்டு வகைப்படும் . இந்த பன்னிரெண்டு வகையான சித்திரக் கவிகளுக்குமே விதிமுறைகள் உள்ளன . அவற்றை ஒவ்வன்றாக நாங்கள் பார்க்கலாம் .

01 கோமூத்திரி :

ஒரு பசுமாடு வீதியில் நடந்து செல்லும் பொழுது சிறுநீர் கழிப்பதைப் பார்த்து இருப்பீர்கள் . அந்த மாடு இயற்கையான முறையிலே சிறுநீரைக் கழித்து இருந்தால் அந்தச் சிறு நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அந்த வளைவு அமையும். அதுவே இரண்டு மாடுகள் சிறுநீர் கழிப்பதாக இருந்தால் இரு எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அந்தக் கவிதையை அமைப்பது கோமூத்திரி என்னும் சித்திரகவியாகும். (கோ = பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்). கோ மூத்திரி சித்திரக் கவிதை எழுதும் பொழுது பின்வருமாறு எழுதப் படவேண்டும் .

"கவிதையின் முதலடியில் உள்ள எழுத்துகளும், இரண்டாம் அடியில் உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக அமையும் முறையில் சித்திரக்கவி எழுதப் படவேண்டும்". உதாரணமாக ,

பருவ மாகவி தோகன மாலையே

பொருவிலாவுழை மேவன கானமே - (முதல் அடி)

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே - (இரண்டாம் அடி)


பொருள் :

தோழி ஒருவள் தனது தலைவிக்குப் பின்வருமாறு கூறுகின்றாள் “தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன. மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள் இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால் உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே”

இதை சித்திரக் கவியாக வரைந்தால் பின்வருமாறு அமையும் ,

(1)
முதல் அடி


gqlc.jpg

இரண்டாம்அடி

(2)
முதல் அடி

gqlc.jpg

(3)
முதல் அடி
இரண்டாம் அடி

7gbj.jpg

02 கூடச் சதுக்கம்:
ஒரு சித்திரக் கவியில் அமைந்துள்ள கவிதையில் இறுதி அடியில் அமைந்துள்ள எழுத்துக்கள் யாவும் முன்பாக அடியில் உள்ள அடிகளில் இருந்து இயற்ரப்பட்டல் அது கூடச் சதுக்க சித்திரக் கவி என்று வரையறை செய்து கொள்ளலாம் (கூடம் = மறைவு; சதுக்கம் = மறைவான நிறைவு அடியை உடையது) உதாரணமாக ,


2 3 4 5 6 7 8 9 10 11 1
மு க ந க/ ந ட் ப து/ ந ட் பு அ ன் று/ நெ ஞ் ச த் து

அ க ந க/ ந ட் ப து/ ந ட் பு
1 2 3 4 5 6 7 8 9 10 11


இது ஒரு திருக்குறளாகும் . இந்தக் குறளில் கீழடியில் உள்ள 11 எழுத்துகளும் முன்னடியில் இருந்து பெறப்பட்ட எழுத்துகளால் இயற்றப் பட்டதாகும் .

03 மாலைமாற்று :

maalai%20maRRu.jpg

மாலை மாற்று (Palindrome) என்பது எந்தத் திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் என்று நாங்கள் வரையறை செய்து கொள்ளலாம் . தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு போன்ற சொற்கள் மாலை மாற்றுகள் ஆகும். உதாரணமாக ,

பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூ நீறு நாளைவா பூ 


பொருள் : 

தலைவியைக் கூடி மகிழ வந்த தலைவனைத் தோழி
தடுத்ததாக இப்பாடல் அமைகிறது.

“ பூப்பு அடையாதவளை அடைய விரும்பிய மேகமே ! நீ
பூமழை பொழிய வந்தாயோ ! பூவும் நீறும் கொண்டு நாளை
வா ! இன்று அவள் பூப்பு அடைந்திருக்கிறாள்.”

இப்பாடல் தலைவி கூடி மகிழும் அளவிற்கு உடல் அளவில்
உரியவளாக இல்லை. அதனை மறைமுகமாகத் தலைவனுக்கு
உணர்த்த மேகத்தை அழைத்துச் சொல்வதாகத் தோழி
பேசுகிறாள்.


இதை விட ஒரு எளிமையான பாடல் ஒன்று ,

தேரு வருதே மோரு வருமோமோரு வருமோ தேரு வருதே

பொருள் :

வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.

தமிழரின் பக்தி இலக்கியங்களில் இந்த மாலை மாற்று ஒன்று வருகின்றது . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலை மாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன. அவற்றில் உள்ள ஒரு பாடல் இவ்வாறு சொல்கின்றது ,

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இதன் பொருள் :

யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
காழீயா-சீர்காழியானே
மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ
மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவனே

04 எழுத்து வருத்தனம் :

வருத்தனம் என்றால் வளருதல் என்று நாங்கள் பொருள் கொள்ளலாம் . ஒரு
கவிதையில் பல கருத்துகள் சொல்லப்பட்டதாகக் கொள்வோம். அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது என்று எடுத்துக் கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும் மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்ற சித்திரகவியாகும். இதை எளிய முறையில் சொலவதானால் ,
மதுரை என்பது ஓர் ஊரின் பெயர். அதில் ரை எழுத்து மறைந்தால் குடிக்கும் கள் கிடைக்கும். அதனோடு ந என்ற எழுத்து சேர்ந்தால் நமது என்ற உடமைச் சொல் கிடைக்கும். இவ்வகையில் கிடைத்த சொற்கள் மதுரை, மது, நமது என்பனவாகும்.

இதோ ஒரு உதாரணம் ,

"ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்
பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் - வாய்ந்த
உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் தாமரையென் றாம்."


பொருள் :

திருமால் சங்கு ஆயுதத்தை உடையவர். அவர் முன்னொரு காலத்தில் கோவராத்தன மலையை கைவிரலால் தூக்கினார். அவர் பொன்னாடை அணிபவர், அவரின் தொப்புழ்க் கொடியில் பிரம்மா இருக்கிறார்.

சொல் வளருதல்:

(1) ஏந்திய வெண்படை
(திருமாலின் வெள்ளை
ஆயுதம்) கம்பு (சங்கு)

(2) (கம்பு என்பதில் ஒரு எழுத்து
நீங்க கம் (தலை) என்பது
கிடைக்கும். கம்

(3) முன்னால் எடுத்தது
(கோவர்த்தன மலையைத்
திருமால் குடையாகப்
பிடித்தார்)

(ந என்ற எழுத்து வர நகம்
(மலை) கிடைத்தது.) (ந) கம் (மலை)

(4) பூந்துகில்
(திருமால் உடுத்தும் ஆடை)
(க என்ற எழுத்து மேலும்
இணைய கநகம் (பொன்)
கிடைத்தது.) கநகம்
(பொன்னாடை)

(5) மால் உந்தி பூத்தது
(திருமால் தொப்பூழ்க்
கொடியில் தாமரை பூக்க
அதில் பிரம்மா இருப்பார்)
(கோ என்ற எழுத்து மேலும்
வர கோகநகம் (தாமரை)
கிடைத்தது.) கோகநகம் 

இதில் எழுத்து வளருதலாக வந்த தலை, மலை, பொன், தாமரை ஆகியன செய்யுளின் இறுதியடியில் சொல்லப் பெற்றுள்ளன. இறுதியடியில் சொல்லப் பெற்ற இவற்றை எழுத்தடைவாக - எழுத்துப் பெறுதலாக - எழுத்து வருத்தனமாகக் கொண்டு இங்கு நாங்கள் சித்திரகவியாகக் காண முடிகிறது.

 

சித்திரக்கவி-
எல்லா பொருள்களும் முழுமையுர உணரும் பரஞானம் வாய்ப்பதற்காக அருளப் பட்டவை சித்திரக்கவிகள்" என்று சேக்கிழார் கூறியுள்ளார் (பெரிய புராணம் 2179 & 2180). பாடுபவரின் மொழிபுலமை மற்றும் மொழியின் செழுமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்படி அமைந்தவை சித்திரக்கவிகள் என்பது ஆய்வலர் முடிவு. தமிழ் தவிர பிற மொழிகளில் இந்த கவி அமைப்பு கிடையாது என்று கருதப்படுகிறது.


சித்திரக்கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கியப் பாங்குகளில் ஒன்று. தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணங்கள் சித்திரக் கவிகளின் தோற்றுவாய். [திருமங்கையாழ்வாரால்]] பாடப்பட்ட "திருஎழுகூற்றிருக்கை" ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி. இவரை பின்பற்றி அருணகிரிநாதரும் அமைத்துள்ளார். இவர்களின் வரிசையில் பாம்பன் சுவாமிகளும் சித்திரக்கவிகள் படைத்துள்ளார்.

எடுத்துக்காட்டு






மாலை மாற்று

                                                                  தொடரும்





Tuesday 29 August 2017

சதாவதானி ஷைகுத்தம்பி பாவலர் 





ஷைகு தம்பி பாவலர் என்றாலே நமக்கெல்லாம் ஞாபகத்திற்கு உடன் வரும் நிகழ்வு ஒன்று அது.. ஒருவர் பாவலரிடம் நூறு ரூபாய் கேட்டுப் போக பாவலர் அவர்கள் அந்த நூறு ரூபாய் கொடுக்கையில் அதைப்பற்றி சொல்லிக்காட்டிய சிலாகிப்புகள் எல்லாராலும் அன்றிலிருந்து இன்று வரை ரசிக்கப்பட்டவை அது

"ஒரு" நூறு தருகிறேன்..
"இரு" நூறு தருகிறேன்
"முன்" நூறு தருகிறேன்
"நான்" நூறு தருகிறேன்
"ஐ" நூறு தருகிறேன்
"அற" நூறு தருகிறேன்
"எழு"  நூறு தருகிறேன்

இன்னும் சொன்னார்களா என எனக்கு தெரியவில்லை. இத்தனை கூறியும் குறிப்பிட்டதெல்லாம் அந்த ஒரு நூறு ரூபாயைத்தான் அது தான் சதாவதானி. நிலத்தில் தசாவதானிகளை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் தசாவதானிகளை காண்பது சிரமம் என்பார்கள்.. ஆனால் தமிழுலகம் ஏற்று போற்றிய தமிழின் உயர்வல்லமை பொருந்திய ஒருவர் இருந்தார் என்றால் அது சதாவதானி அவர்கள் தான்.

பாவலர் சதாவதானம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் ஈற்றடி கொடுத்து பாடச் சொன்னார்...

''கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே"
எல்லோரும் திகைத்தனர்...
அது எப்படி முடியும்...?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல் அல்லவா இருக்கிறது...
பாவலர் திகைத்தாரில்லை...

இந்து மத வேதங்களையும் இலக்கியங்களையும் விரல் நுனியில் வைத்து விளையாடும் அவர்க்கு இந்த ஈற்றடித் தலைப்பு எம்மாத்திரம்...?

அவர்க்குப் பெரிய புராணத்தின் காட்சி ஓன்று கண்களில் ஆடியது.
ஆமாம். திண்ணப்பர் கண்ணப்பரான கதையது..
வேட குல கண்ணப்பர் ஒரு சிவ பக்தர்...
காட்டுப் பொருட்களையும் வேட்டைப் பொருட்களையும் சிவனுக்குக் காணிக்கையாய் படைப்பவர்...
ஆனாலும் அனுதினமும் அயராமல் சிவ பூசை செய்பவர்...
அவரிடம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிவனுக்கு வந்தது...
என்ன செய்தார் தெரியுமா...?
அவர் பூசை செய்யும் நேரத்தில் தன்னுடைய கண்களில் இருந்து இரத்தக் கண்ணீரை வழிய விட்டார்...
பதறிப் போனார் திண்ணப்பர்...
ஐயையோ...! என்னுடைய சிவன் கண்களில் இரத்தமா...
எப்படித் துடைப்பேன் என்று யோசித்தார்..
ஏதேதோ செய்து பார்த்தார்...
வேடருக்கு என்ன மருத்துவம் தெரியும்...?
பக்கத்திலே கிடந்த மூலிகைகளைப் பறித்து வைத்தியம் செய்தார்...
அப்போதும் இரத்தம் நிற்கவில்லை..
ஒன்றுமே புரிய வில்லை..
திகைத்து நின்றவருக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது...
அப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று நினைத்தவர் தன கையில் இருந்த வேலைக் கொண்டு தன்னுடைய ஒரு கண்ணைப் பெயர்த்தார்...
அப்படியே சிவன் கண்ணில் பொருத்தினார்...
வழிந்த ரத்தம் நின்றது...
கண்ணுக்குக் கண் சரியாயிற்று.....!
மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் திண்ணப்பர் ...
ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை...
சிவனுக்கு மீண்டும் ஒரு விபரீத எண்ணம்...
இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்த்தால் என்ன...?
திடீரென்று அடுத்த கண்ணிலும் இரத்தத்தை வழிய விட்டார்..
இப்போது திண்ணப்பர் திணறவே இல்லை..
உடனே தன்னுடைய மற்றொரு கண்ணையும் பெயர்த்துப் பொருத்தி விட்டார்...
அகமகிழ்ந்து போனார் சிவபெருமான்...
இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட வேட பகதனையா சோதித்தோம்...?
அவனுக்கு தன்னுடைய திருக்காட்சியை வழங்கி விட வேண்டியதுதான் என்று திருக்காட்சி வழங்கினார்..
திண்ணப்பருக்கு இப்போது சிவக் காட்சி கிடைத்தது..
ஊனக்கண் போன பிறகு ஞானக் கண் கிடைத்து இதுவரை காணாத காட்சி கிடைத்தது..
திண்ணப்பனே! ...எனக்குக் கண் வழங்கிய காரணத்தால் இன்று முதல் உனக்குக் கண்ணப்பன் என்ற பெயரை வழங்குகிறேன் என்று கூறி திருக்காட்சி வழங்கினார் சிவ பெருமான்...
பக்தனுக்கு இறைக் காட்சியை விட வேறென்ன வேண்டும்...?
இதை அப்படியே கவிதையாக்கி ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்துக் கவிதையாக்கினார் பாவலர்...

"விண் தொட்டசையும் தருமலி கானில்
பண்பட்ட செந்தமிழ் பாவாணர் போற்றும் பரமன் விழி
புண் பட்டதென்று தன் கண்ணைப் பெயர்த்துப் பொருத்தியிரு
கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே..."
இந்த இலக்கிய அழகில் கேள்வி கேட்டவர் மட்டுமா அனைவருமே அழகிய இலக்கியக் காட்சியை அல்லவா கண்டார்கள்...?

தமிழ் அன்பர்களுக்காக மேலும் ஒரு தகவல்....
பாவலர் சொன்ன ஏகம்...!பல் சமய நண்பர்களுடன் பழக்கம் கொண்டிருந்தும் எந்த மத காழ்ப்புணர்வுக்கும் இடம் கொடுக்காதவர் பாவலர்..

சமயக் காழ்ப்புணர்வுக்கு அப்பாற்பட்டு பிற சமய தெய்வங்களைப் பாடினார் எனினும் அடிநாதமாக ஏகத்துவம் எனும் ஒளியிழை அவர் பாடல்களில் பொதிந்து கிடந்தது...

நபிகள் நாயக மான்மிய மஞ்சரியில் ஏகத்துவம் குறித்து அவர் பாடுவதைப் பாருங்கள்...

எவையெல்லாம் இறை என்று மக்களால் கருதப் படுகிறதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாய் ஒதுக்கி வைத்து விட்டு
உண்மையான ஏகத்தை நிலை நிறுத்த முயல்கிறார்...

யோகமன்று ஞானமன்று யூகமன்று மோனமன்று
தேகமன்று நாமமன்று சித்தமன்று சத்தமன்று
போகமன்று சுத்த பரிபூரணத்தில் பூரணமா
ஆக நின்ற ஏகம் ...

வானுமில்லை நீருமில்லை வாயுமில்லை தேயுமில்லை
நானுமில்லை நீயுமில்லை நாளுமில்லை கோளுமில்லை
பானுமில்லை மீனுமில்லை பாரமதியோடு வெளி
தானுமில்லை ஏகம்

விண்ணுமில்லை மண்ணுமில்லை மேலுமில்லை கீழுமில்லை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பேடுமில்லை மூடுமில்லை
தண்ணுமில்லை சூடுமில்லை சார்ந்தகர ணாதிகளின்
கண்ணுமில்லை ஏகம்....

சமயக் காழ்ப்புணர்வுக்கு அப்பாற்பட்டு பிற சமய தெய்வங்களைப் பாடினார் எனினும் அடிநாதமாக ஏகத்துவம் எனும் ஒளியிழை அவர் பாடல்களில் பொதிந்து கிடந்தது...
நபிகள் நாயக மான்மிய மஞ்சரியில் ஏகத்துவம் குறித்து அவர் பாடுவதைப் பாருங்கள்...
எவையெல்லாம் இறை என்று மக்களால் கருதப் படுகிறதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாய் ஒதுக்கி வைத்து விட்டுஉண்மையான ஏகத்தை நிலை நிறுத்த முயல்கிறார்...

யோகமன்று ஞானமன்று யூகமன்று மோனமன்றுதேகமன்று நாமமன்று சித்தமன்று சத்தமன்றுபோகமன்று சுத்த பரிபூரணத்தில் பூரணமாஆக நின்ற ஏகம் ...
வானுமில்லை நீருமில்லை வாயுமில்லை தேயுமில்லைநானுமில்லை நீயுமில்லை நாளுமில்லை கோளுமில்லைபானுமில்லை மீனுமில்லை பாரமதியோடு வெளிதானுமில்லை ஏகம்
விண்ணுமில்லை மண்ணுமில்லை மேலுமில்லை கீழுமில்லைபெண்ணுமில்லை ஆணுமில்லை பேடுமில்லை மூடுமில்லைதண்ணுமில்லை சூடுமில்லை சார்ந்தகர ணாதிகளின்கண்ணுமில்லை ஏகம்....

சமயக் காழ்ப்புணர்வுக்கு அப்பாற்பட்டு பிற சமய தெய்வங்களைப் பாடினார் எனினும் அடிநாதமாக ஏகத்துவம் எனும் ஒளியிழை அவர் பாடல்களில் பொதிந்து கிடந்தது...நபிகள் நாயக மான்மிய மஞ்சரியில் ஏகத்துவம் குறித்து அவர் பாடுவதைப் பாருங்கள்...எவையெல்லாம் இறை என்று மக்களால் கருதப் படுகிறதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாய் ஒதுக்கி வைத்து விட்டுஉண்மையான ஏகத்தை நிலை நிறுத்த முயல்கிறார்...

யோகமன்று ஞானமன்று யூகமன்று மோனமன்றுதேகமன்று நாமமன்று சித்தமன்று சத்தமன்றுபோகமன்று சுத்த பரிபூரணத்தில் பூரணமாஆக நின்ற ஏகம் ...வானுமில்லை நீருமில்லை வாயுமில்லை தேயுமில்லைநானுமில்லை நீயுமில்லை நாளுமில்லை கோளுமில்லைபானுமில்லை மீனுமில்லை பாரமதியோடு வெளிதானுமில்லை ஏகம்விண்ணுமில்லை மண்ணுமில்லை மேலுமில்லை கீழுமில்லைபெண்ணுமில்லை ஆணுமில்லை பேடுமில்லை மூடுமில்லைதண்ணுமில்லை சூடுமில்லை சார்ந்தகர ணாதிகளின்கண்ணுமில்லை ஏகம்....


அன்னாரைப்பற்றி இன்னும் கூடுதல் தகவல் நாம் கற்கவேண்டும். தமிழின் சுவையை இவர் போன்ற கடல்களில் கொஞ்சமேனும் நம் சிட்டுக்குருவி அலகாலேனும் பருக ஆசை கொள்ளவேண்டும்.

Sunday 27 August 2017

மனப்பாடப்பாடல்கள்


பத்தாம் வகுப்பு
மனப்பாடப்பாடல்கள் 
முதல் தொகுதி


வழங்குவோர்
திரு.ஐயப்பன் எம்.ஏ.,பி.எட்
தமிழாசிரியர்
இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி
இலஞ்சி

Friday 25 August 2017

பத்தாம் வகுப்பு - தமிழ் உரைநடை- திரைப்படக்கலை உருவான கதை


பத்தாம் வகுப்பு
தமிழ் உரைநடை
திரைப்படக்கலை உருவான கதை

முதல் பகுதி





இரண்டாம் பகுதி







Thursday 10 August 2017

திருவிளையாடற் புராணம்


வகுப்பு 9
திருவிளையாடற்புராணம்




பாஞ்சாலி சபதம் வில்லுப்பாட்டு வடிவில்




பாஞ்சாலி சபதம் தெருக்கூத்து



குமாிக் கண்டம்





பாஞ்சாலி சபதம்


அப்பூதியடிகளார் புராணம் விளக்கம்






அப்பூதியடிகள் நாயனார்


Monday 7 August 2017

தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு

கற்றல் - கற்பித்தல்

முனைவர் மா. தியாகராஜன்



4. தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு

முன்னுரை


  நீட்டோலை வாசியானை நெடுமரம் என்றார் தமிழ்ப்பெரு மூதாட்டி ஒளவையார். இதன் வாயிலாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘வாசிப்பு’ என்ற சொல்லாட்சியின் ஆளூமையும், அதன் அவசியமும் உணர்த்தப்- பட்டுள்ளதை அறிந்திட இயலும். படித்தல், வாசித்தல் என்ற சொற்கள் ஒரே பொருளையே விளக்குகின்றன.

  ‘செந்தமிழும் நாப்பழக்கம்’என்பதைத் தமிழுலகம் அறியும். தமிழ் மொழியைப் புலம் பெயர்ந்த மக்கள் வாழும் நாடுகளில் வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமெனில், மொழித்திறன் வளர் பயிற்சியில் முக்கியமாகப் படித்தல் திறனை மாணவர்களிடையே எளிய வழிகளைப் பின்பற்றி போதித்தலின் வாயிலாக சிறந்த நிலையை எய்த இயலும்.


வாசிப்புத்திறனின் பயன்கள்

  ஒரு மனிதனைச் சந்திக்கின்ற பொழுது என்ன படிக்கிறாய் என்றோ அல்லது என்ன படித்திருக்கின்றாய் என்றோதான் கேட்கிறோம். பெரும்பாலான பகுதிகளில் திருமண நிகழ்வின் போது கூட பெண் என்ன படித்திருக்கின்றாள், மாப்பிள்ளை என்ன படித்திருக்கின்றார் என்றோதான் கேட்கிறோம். அந்தக் கேள்வியின் பொருள் கல்வித்தகுதியை உணர்த்துகிறது. இருப்பினும், படித்தல் அல்லது வாசித்தல் என்றால் இங்கே வாய் மொழியால் நாம் பெறுகின்ற மொழியறிவைத் தெளிவாக உணர்த்துகிறது.
‘கண்டதைப் படித்தால் பண்டிதனாகலாம்’ என்ற அனுபவக் கூற்றை நாம் இங்கே சிந்திக்க வேண்டும். கண்டது என்றால் கண்ணில் படுபவையெல்லாம் என்று பொருளாகும். அவ்வாறு, கண்ணில் பட்டதையெல்லாம் படித்தால் பண்டிதராக முடியுமா? என்றால், முடியும். படித்துத் திறன் வளர, வளர அறிவு வளர்ச்சி கூடுதல் அடையும். சொல்லாட்சி, சொல்வளம் முதலியவை மனதில் நிற்கும்.

வாசிப்புத் திறனை வளர்ப்பது எப்படி?

‘தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவி வகை செய்தல் வேண்டும்’, என்றார் மகாகவி பாரதி. அத்தகைய தேன் போன்ற இனிமையுடைய தமிழ்மொழியைப் பேசுகின்றவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் நவநாகரீக உலகில் ஆங்கில மொழியின் தாக்கம் தமிழ் மொழியை அதிகம் பேசுவதில் ஆர்வம் காட்டாத தமிழர்களின் மனப்போக்கு இத்தகைய சூழ்நிலையில், தமிழை, அதன் படிப்புத்திறனை வளர்ப்பதெற்கென்று கல்வியியல் சிந்தனையாளர்கள் பல்வேறு கருத்துரைகளை வழங்கி வருகின்றனர். படிப்புத்திறன் ஒரு சில இடையூறுகளைக் கொண்டுள்ளது. அது என்ன இடையூறு?


1. தமிழ் எழுத்துக்கள் குறில், நெடில் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. குறிலுக்கு ஒரு மாத்திரை என்றும், நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்றும், அளவுமுறை கையாளப்படுகிறது. வாசிப்புத்திறன், இத்தகைய ஒலிப்பு அளவீட்டு முறையைப் பின்பற்றி வளர்க்கப்பட வேண்டும்.


2. மாணவர்கள் வகுப்பறையில் பாடத்தை (உரைநடை) காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, நிறுத்தற்குறி, வினாக்குறி, ஆச்சர்யக்குறி, ஒற்றை மேற்கோள் இரட்டை மேற்கோள், முதலிய ஏற்ற இறக்கப் பொருள் மாறுபாடு ஆகியவற்றை உணர்ந்து படிப்பதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டியாய் இருக்க வேண்டும்.


3. படித்தல் திறன் வளர்ச்சிக்கு செய்யுள் வகுப்புகள் தமிழாசிரியர்களால் திறம்பட கையாளப்பட வேண்டும். செய்யுள் வகுப்புகளைக் கையாளுகின்ற மொழியாசிரியர்கள் முதலில் தாங்கள் செய்யுள் பிரித்துப் படித்துக் காட்டுதல் வேண்டும். முடிந்தால் இசையோடு பாடியும் காட்டலாம். அவ்வாறு ஒருமுறைக்கு இருமுறை படித்துக் காட்டிவிட்டு மாணவர்களைப் படிக்கச் செய்தல் வேண்டும். மாணவர்கள் அவ்வாறு பிரித்துப் படிக்கும் பொழுது உச்சரிப்பு ஏற்ற இறக்கம், பொருள் முதலியவற்றைப் பின்பற்றுகிறார்களா என்பதை மொழியாசிரியர்கள் கவனிக்க வேண்டும்.

வாசிப்புத்திறனின் நோக்கங்கள்

வாசிப்பதன் மூலம் எழுத்துக்களைக் கூட்டிப் பொருளை அறிகின்ற ஆற்றல் வளர்கிறது. மொழி கட்டமைப்பிலுள்ள ண,ன- ல,ள,ழ- ர,ற முதலிய எழுத்துக்களை சொற்களின் இடையில் வைத்து, வேறுபாடறிந்து உச்சரிக்கப் பழகுதல் முதலிய பயன்களே நோக்கங்கள் ஆகும்.



வாசிப்புத்திறனை மேம்படுத்த எளிய, புதிய யோசனைகள்

இன்றைய அறிவியல் யுகத்தில் பல்வேறு சாதனங்கள் படிப்புத்திறனை வளர்ப்பதற்கு துணை நிற்கிறது. இச்சூழலில் படிப்புத்திறனை வகுப்பறையில் மாணவர்களிடம் வளர்த்திட எளிய வழிகள் ஏராளமாய் உள்ளது.


1. இன்றைய தினம் அனைவரும் தொலைக்காட்சிகளில் செய்திகளைக் காணுகின்ற வழக்கம் உடையவராய் இருக்கின்றோம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இத்தகைய வாய்ப்பும், பழக்கமும் அதிகமாக உள்ளன.


2. மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவரே குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினரைப் பார்வையாளராகவும் மற்றொரு குழுவினரைச் செய்தி அறிவிப்பாளராகவும் பிரித்து செய்தித்தாட்களிலுள்ள செய்தி வெட்டுகளைச் சேகரித்து வரிசைப்படுத்தி வாசிக்கச் சொல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வாசிக்கின்ற மாணவர் ஆர்வத்துடனும், கவனத்துடனும் வாசிப்பான். கேட்கின்ற குழுவில் உள்ளவர்கள் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம். இதன் மூலம் இரண்டு குழுக்களுக்கும் மாறி மாறி வாய்ப்பு கிட்டும். இதனால், ஒவ்வொருவரும் பிழையின்றி வாசிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். படிப்புத்திறன் எளிதில் வளரும். இவ்வாறு செய்தி வாசிக்கும் மாணவர் தன்னை ஒரு செய்தி வாசிப்பாளராகவே எண்ணிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தன்னம்பிக்கையும், உச்சரிப்புத்திறனும் வாசிக்கும் ஆற்றலும் பெருகும்.

மேலும் சில விளையாட்டு முறைகள்

சாலைகளில் உள்ள விளம்பரப் பலகையைக் கவனிக்க அதிலுள்ள எச்சரிக்கைகளைப் படிக்கும் பழக்கம், பேருந்து நிலையங்களிலுள்ள கால அட்டவணைகளைப் படித்தல். மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விதவிதமான விளம்பரப் பலகைகள் முதலியவற்றின் மாதிரிகளை அட்டைகளில் தயார் செய்து, வகுப்பறைகளில் அத்தகைய சூழலை உருவாக்கிப் படிக்கச் செய்தல்.


1. இங்கே வாகனங்களை நிறுத்தக்கூடாது
2. ஒரு வழிப் பாதை
3. சாலைப்பணி நடைபெறுகிறது, கவனமாகச் செல்லவும்
4. அனைத்துப் பொருள்களும் குறைந்த விலையில் கிடைக்கும்


போன்றவை. மேலும், ‘ஒன்று இங்கே, மற்றொன்று எங்கே’ என்ற தலைப்பில் விளம்பரங்களை ஒரு அட்டையில் எழுதி அதை இரண்டாக வெட்டி, அது போல பல விளம்பர அட்டைகளைச் சேகரித்து வெட்டிக் கலந்து வைக்க வேண்டும். குழுவினரை ஆளுக்கொன்று எடுக்கச் சொல்லி - ‘தலை இங்கே, வால் எங்கே’ என்று கேட்டு விளையாடலாம்.


எ.கா ‘லிட்டில் இந்தியா’ என்ற அட்டையை இரண்டாக வெட்டினால் லிட்டில் / இந்தியா என்று ஆளுக்கொரு அட்டை பிரிந்து விடும். இதனை எடுத்த மாணவர் படித்து ‘லிட்டில்’ இங்கே, இந்தியா எங்கே? என்று கேட்டால், இந்தியா இங்கே, என்று கூறி இணைய வேண்டும்.

i) சிங்க நடனத் திருவி ழா - இதனை பொருள் மாறாமல் வார்த்தைகளை இடம் விட்டு எழுதுமாறு சொல்ல, அதனை உரக்க படித்து இணைத்தல்.

ii) பூங்காவில் உள்ள புல் தரையில் நட க்கா தீர்.
மேற்கண்டவாறு நிறைய விளம்பரங்களை, எச்சரிக்கைகளைச் சேகரித்து வாசிப்புத் திறனை மேம்படுத்தலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மருந்துப் பெயர்களை படிக்கத் தெரியாதவன் படிக்கும் போது, ‘சுக்குமி ளகுதி ப்பிலி’என்று படித்ததாகக் கூறுவார்கள். இது எத்தனை வேடிக்கையாக உள்ளது. அதனால்தான் படிக்கும் பயிற்சி முக்கியமானதாக இருக்கிறது. அதனை முறையாக வளர்க்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

தனி வேலை

வாசிப்புத் திறன் வளர்ச்சிக்கு தனிவேலை என்று வரும்போது, செய்தித்தாள், மாத இதழ், வார இதழ், போன்றவைகளில் வருகின்ற செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள், வினாடி-வினா பகுதிகள் முதலியவற்றைச் சேகரித்து அவற்றைப் படிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து பெறுதல்.


இணை வேலை

‘இணை’ என்றால் இணைந்து செயல்படுதல். “ஒருவருக்கு இருவர் துணை” என்று சொல்வார்கள். இணைந்து செயல்படும் போது ஒருவருக்கு ஒருவர் புதிய புதிய யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் வாசிப்புத் திறனில் எற்படும் குறைபாடுகளைச் சகமாணவர் சுட்டிக்காட்டும் வாய்ப்பும் அத்தகைய தவறு தனக்கு ஏற்படாமல் இருக்கவும் பயன் தருகிறது.


குழு வேலை

மாணவர்கள் எப்போதும் நண்பர்களோடு சேர்ந்து கூட்டமாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்தி வாசிப்புத் திறனை எளிதாக வளர்க்க முடியும். நூல்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள், திரைப்படங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயர்கள், திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்கள், முதலியவற்றைச்சேகரித்து அவற்றை அட்டைகளில் எழுதி கையில் தூக்கிப் பிடித்துக் கொள்ளச் செய்து குழுக்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக அதனைப் படிக்கச் செய்தல் வேண்டும். அத்துடன், அவற்றோடு தொடர்புடைய செய்திகளையும் கூறச் செய்தல் வேண்டும்.

கிரிக்கெட் (அட்டை 1) சச்சின் (அட்டை 2)
கேள்வி இந்தியாவின் (கிரிக்கெட்) நட்சத்திர ஆட்டக்காரர் யார்?
திருக்குறள் (அட்டை 1) திருவள்ளுவர் (அட்டை 2)
உலகப்பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவர் யார்?
மேற்கண்டவாறு தொடர்புடைய அட்டைகளைக் குழுவினர்களிடையே கொடுக்க வேண்டும். அவர்களே முயன்று அட்டைகளைத் தயாரிக்க ஆசிரியர் வழிகாட்டலாம். இத்தகைய முயற்சிகளால் வாசிப்புத் திறன் நன்கு வளரும்.

பார்வை நூல்கள் விவரம்


1. தமிழ் பயிற்றும் முறை, டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பரம், டிசம்பர்2000.

2. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, 2002.

3. கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை.

4. Sandra Siberstein, 1994 Techniques And Resources in Teaching Reading. Oxford university Press.

5. Wendy A.Scott and Lisbeth H.treberg Teaching, 1990 English to Children.Longman

6. H.Clark, 1986, Secondary And Middle School Teaching Methods, Fifth Edition, Macmillan Publishing Company, New York.

7. கோவிந்தசாமி, நா.,(1986), வாசிப்புக் கற்பித்தல்: தமிழ்ப் பள்ளியின் வரலாறு 1946-1982.

8. கோபால் மீராபாய், (1979), Diagnostic Test of Reading Comprehension Skills at Secondary School Level, RELC.

9. லாவ் டெக் இங், (1975), கோடிட்ட இடத்தை நிரப்புதல் வழி மெளன வாசிப்புக் கற்பித்தல், ஆங்கிலமொழி நிலையம், சிங்கப்பூர்.

10. வாங் கிம் லாவ், (1979), Measuring Readability of Reading Comprehension Materials in English, RELC.

நன்றி                                             கற்றல் - கற்பித்தல்

முனைவர் மா. தியாகராஜன்முன் பகுதி  | அடுத்த பகுதி